95 – ஆம் ஆண்டு விழா
அழைப்பிதழ்
95 th ANNIVERSARY INVITATION
கணபதி தேசிய நடுநிலைப்பள்ளி
( தமிழக அரசு உதவி பெறும் பள்ளி, இலவசக் கல்வி )
எண்.87/36,வாத்தியார் சுப்பராய முதலித் தெரு,
சைதாப்பேட்டை,
சென்னை-600015.
GANAPATHY NATIONAL MIDDLE SCHOOL
( Tamilnadu Government Aided School )
( Free Education Institution )
No.87/36, V.S. Mudali Street,
Saidapet,
Chennai – 600 015.
கணபதி தேசிய நடுநிலைப் பள்ளி
GANAPATHY NATIONAL MIDDLE SCHOOL
95 – ஆம் ஆண்டு விழா
நாள் / Date : 05.03.2023,
ஞாயிற்றுக்கிழமை
நேரம் / Time : காலை 9.30 மணி
இடம் / Venue : பள்ளி வளாகம் | School Premises
பள்ளியின் 95 – ஆம் ஆண்டு விழா
விழாத் தலைமை
முனைவர் உயர்திரு.
ஒளவை ந. அருள் அவர்கள்
( இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை,
தமிழ்நாடு அரசு )
சிறப்பு விருந்தினர் – ஆசிரியர்கள் பரிசளிப்பு :
செவாலியர், கலைமாமணி உயர்திரு. Dr. V.G. சந்தோஷம் அவர்கள்
( தலைவர், வி.ஜி.பி. குழுமம் )
விழா மலர் வெளியீடு – கல்வி பரிசளிப்பு :
உயர்திரு. S.R.சபாபதி அவர்கள்
( நிர்வாக இயக்குநர், Q Max நிறுவனங்கள் )
விழா மலர் பெறுபவர் – கலை நிகழ்ச்சி பரிசளிப்பு :
உயர்திரு. R. வாசுதேவன் அவர்கள்
வாசு கெமிக்கல் இண்டஸ்ட்ரிஸ்
கலைத் திறன் பரிசளிப்பு :
திருமதி. S. இந்திராதேவி, B.A., M.Ed., அவர்கள்
( வட்டாரக்கல்வி அலுவலர், அடையாறு சரகம் )
விழாவில் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன
தங்களை அன்புடன் வரவேற்கும்
திரு. S. சதீஷ்குமார்
( வழக்குரைஞர், உயர்நீதி மன்றம், சென்னை
பள்ளி தாளாளர், மேலாளர், செயலாளர் )
திருமதி. R. வசந்தா ஸ்ரீநிவாசன், B.Lit., M.Ed.,
( தலைவர், பள்ளிக் கமிட்டி, மேனாள் தலைமை ஆசிரியை )
திருமதி. V. ஜெயஸ்ரீ, B.Lit., B.Ed.,
(தலைமை ஆசிரியை)
கமிட்டி உறுப்பினர்கள், அரிமா நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் …
பள்ளியைப் பற்றி
நமது பள்ளி இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், தேசம், தெய்வம் மற்றும் தமிழ் மொழியின்பால் பற்று கொண்ட உயர்திரு. G. இரத்தினம் பிள்ளை மற்றும் உயர்திரு.S. இராகவாச்சாரியார் அவர்களால் 1929 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் உயர்திரு. G.R. முருகேசன் பிள்ளை மற்றும் உயர்திரு. R. சௌரிராஜன் ஆகியோரால் தொடர்ந்து நடத்தப்பட்டது.
1978 – ஆம் ஆண்டு பள்ளிக் கட்டிடத்தை காலி செய்யக்கோரி, நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டபோது, அவ்வழக்குகளை அப்போதைய நிர்வாகியான உயர்திரு. T. ஸ்ரீநிவாசன் அவர்கள் திறம்பட எதிர்கொண்டு, பள்ளி எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெற, அவர் ஆற்றிய பணியும் தியாகமும் எழுத்தில் அடங்காது.
” அறிவை வளர்த்திட வேண்டும்.
நம் அத்தனை பேருக்கும் ஒன்றாய்…” என்ற பாரதியின் வாக்குப்படி, ஏழை எளியோர்க்கு இலவசக்கல்வி வழங்குவதை தனது உயிர் மூச்சாய் கொண்ட உயர்திரு.T.ஸ்ரீநிவாசன் அவர்களின் எண்ணத்திற்கு, உறுதுணையாக நின்ற, அவரது துணைவியார் திருமதி. R. வசந்தா ஸ்ரீநிவாசன் அவர்களின் சேவை போற்றுதற்குரியது.
இன்றளவும் இப்பள்ளி துவங்கிய நாள் முதலாக தனது குறிக்கோளில் சற்றும் மாறாது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தன்னலம் பாராத இத்தம்பதியர்களின் கல்விச் சேவையை இப்பள்ளியை அறிந்த அனைவரும் நன்கு அறிவர்.
தற்போது இப்பள்ளி, அவர்களது மகன் வழக்கறிஞர் திரு. S. சதீஷ்குமார் அவர்களின் நிர்வாகத்தின் கீழ், தொன்மை மாறாது இன்றளவும் நடைபெற்று வருகிறது. இப்பள்ளி, கடந்த 95 ஆண்டுகளாக, ஏழை எளிய பட்டியலின, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வியினை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இப்பள்ளி, பல மேனாள் தமிழக முதலமைச்சர்கள் திரு. காமராஜர், திரு. பக்தவச்சலம் முதலான பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
பல மேனாள் கல்வி அமைச்சர்களும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இப்பள்ளிக்கு வருகை புரிந்து சிறப்பித்துள்ளனர்.
இப்பள்ளி பல மேனாள் தமிழக ஆளுநர்களின் கரங்களால், பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது.
நமது பள்ளி பலதுறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள், அரிமா, ரோட்டரி அன்பர்கள், தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் இலக்கிய சமூக அமைப்புகள் என, அனைவராலும் பாராட்டு பெற்றுள்ளது.
தனது 80 வயதை கடந்த பின்னும், இன்றுவரை பள்ளி மாணவர் நலனுக்கு என தன்னை அர்ப்பணித்து வரும் திருமதி. வசந்தா ஸ்ரீநிவாசன் அவர்கள், இப்பள்ளியிலேயே படித்து, முதுகலை பட்டம் பெற்று.
இப்பள்ளியிலேயே தலைமைஆசிரியராக உயர்ந்து, பற்பல அரும்பணிகளை ஆற்றியவர் என்பது சிறப்புக்குரியது.
இவர் இப்பள்ளி மாணவியாக பயின்ற காலம் தொட்டு, பள்ளிக்கென பெற்ற பரிசுகளும், பாராட்டுகளும் பற்பல.
சிப்பாய் கலக நூற்றாண்டு நினைவு பரிசுப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.
நீராரும் கடலுடத்த… தமிழ்த்தாய் வாழ்த்தை இசையமைத்துப் பாடியமைக்காக, மேனாள் முதல்வர் மாண்புமிகு மு. கருணாநிதி அவர்களால் பாராட்டு பெற்றதும், தமிழ்நாடு அரசின் சார்பாக, இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட பல அரங்குகளில், தேசியம் மற்றும் ஆன்மீகம் தொடர்பாக இவர் நடத்திய இசை மற்றும் சொற்பொழிவுகள் ஏராளம்.
தற்போது தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் திருமதி. V. ஜெயஸ்ரீ அவர்கள் சக ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர் சேர்க்கை, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆன்மீக மற்றும் பள்ளி நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை வரையறை செய்து, திறம்பட பள்ளியை நடத்தி வருகிறார்.பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அரும்பாடுபட்டு வெற்றியும் காண்கிறார்.
பள்ளிக்கு அவ்வப்போது உதவி புரியும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சைதை சா. துரைசாமி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், Q Max நிறுவனர் திரு. S.R. சபாபதி, வாசு கெமிக்கல்ஸ் திரு. R. வாசுதேவன், வி.ஜி.பி. குடும்பத்தார், மூத்த வழக்குரைஞர் திரு. K. பராசரன் குடும்பத்தார், குமரன் சில்க்ஸ் உரிமையாளர்கள், மகேந்திரா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர், G.M.S. ஜூவல்லர்ஸ், திரு. நல்லி குப்புசாமி, N.S.எலக்ட்ரிக்கல்ஸ் திரு. பாலு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர், திரு. பாரதி சுராஜ் அவர்களின் குமாரர் திரு.S. இராமசாமி, அரிமா அன்பர்கள், பள்ளி வழக்கில் வெற்றி தேடித் தந்த திரு. S. இராம்குமார், பள்ளி நலன் விரும்பும் திரு.S.கிருஷ்ணகுமார், பள்ளிக் கமிட்டி உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், இப்பள்ளியில் பணிபுரிந்த, பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள், முன்னாள், இந்நாள் மாணவச் செல்வங்கள், பெற்றோர்கள், பள்ளியின்பால் அன்பு கொண்ட பொதுமக்கள் அனைவரையும் இப்பள்ளி என்றும் மறவாது.
தற்போது ஆங்கிலம் ஒரு பாடமும் மற்ற பாடங்கள் தமிழ் மொழியிலும் போதிக்கப்படுகின்றன.
இதனால் மாணவர்களின் சேர்க்கை குறைவாகக் காணப்படுகிறது.
ஆங்கில வழிக் கல்வியினை, தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க தமிழக அரசு ஆவன செய்ய பள்ளியின் சார்பில் வேண்டுகிறோம்.
நன்றி ! வணக்கம் !

Add a Comment