POST: 2023-03-14T12:05:08+05:30

எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்

வாய்மையே வெல்லும்

தமிழ் வளர்ச்சித் துறை

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
தொடக்க விழா

15.03.2023
புதன் கிழமை

உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம்,
மதுரை

பெருந்தகையீர் !
வணக்கம்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை தகைமையுடன்
நடத்தும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை.

வெல்லும் சொற்கொண்டு வெளிச்ச விரிவுரை
வித்தகரை உருவாக்கும் வெற்றிப் பாசறை !
இது

சொற்புதிது பொருள்புதிது சுவைக்கத் தரும்
சொல்லேருழவர்களின் சுடர்மிகு சந்திப்பு !

மாத்தமிழ் வளர்த்த மல்லிகைத் தலைநகரில்
நாவுக்கரசர்களின் நறுமணக் கூடல் !

வைகை நதிக்கரையின் வாழ்வை மேலெடுக்கும்
கீழடி நோக்கி ஒரு கிழக்குச் சுற்றுலா !

ஙப்போல் உடல் வளைத்து நலவாழ்வைக் கற்பிக்கும்
அற்புத வகுப்புகளின் அணிவகுப்பு !

கண்மலரச் செய்து கருத்தைப் புதுப்பிக்கும்
காந்தப் புலமிக்க கலைநிகழ்ச்சிகள் !

தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய தமிழ்க்களப் போட்டிகளில்
வாகை சூடிய வண்ணமிகு மாணவர்கள் மட்டுமே
பங்கேற்கும் வானவில் திருவிழா !

படைகொண்டு தமிழ் வளர்த்த பாண்டியர்போல்
நடைகொண்டு நிற்கும்
நம் முதலமைச்சர் விழிவழி
நடக்கும் மொழிவழிப் பெருவிழா !

ஆலவாய்த் திருநகரில் அரண்மனை போல் திகழும்
உலகத் தமிழ்ச் சங்க அரங்கில்…

தேனார்க்கும் கவிச்சோலை – திகட்டாத மொழிமாலை
அழகழகாய் அணிந்தாடும் அறிவுணர்ச்சிக் கலைவிழா !

ஏழு நாள்கள் ஏற்றமுற நிகழும் ஏழிசைத் தமிழ்விழா !

ஒளவை அருள்

இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை

தமிழ்த்தாய் வாழ்த்து

தொடக்க விழா
நேரம் : 10.00-12.00

வரவேற்புரை :
ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை

தலைமையுரை
மரு. எஸ்.அனீஸ் சேகர் ஆஆ, அவர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை

திட்ட விளக்கவுரை :
மரு. இரா.செல்வராசு இ ஆ ப ., அவர்கள்
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

விழாப் பேருரை :
திரு .தங்கம் தென்னரசு அவர்கள்
மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை,
தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்

விழாச் சிறப்புரை :

திரு. பி.மூர்த்தி அவர்கள்
மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராசன் அவர்கள்
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்

முன்னிலையுரை :

திருமதி இந்திராணி பொன்வசந்த் அவர்கள்
மாநகராட்சி மேயர், மதுரை

திரு.சு.வெங்கடேசன் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர், மதுரை

திரு. சிம்ரன் ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள்
ஆணையர், மதுரை மாநகராட்சி

திரு. செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள்
கூடுதல் ஆட்சியர் (வ)/திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை

வாழ்த்துரை :

திரு. கோ.தளபதி அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்

திரு.ஆ.வெங்கடேசன் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்

திரு.மு.பூமிநாதன் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்

திருமதி சூரியகலா கலாநிதி அவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்,மதுரை

திரு.தி.நாகராஜன் அவர்கள், துணை மேயர், மதுரை மாநகராட்சி

திருமதி சரவண புவனேஸ்வரி அவர்கள், மண்டலத் தலைவர், மதுரை

திரு. முருகன் அவர்கள், மாமன்ற உறுப்பினர், மதுரை மாநகராட்சி

நன்றியுரை :

திருமதி பொ. பாரதி அவர்கள்,
உதவி இயக்குநர் ( நிருவாகம் ),
சென்னை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *