திறன் மேம்பாடு
தேனீயில் உள்ள அலோசியஸ் பள்ளித் தமிழ் ஆசிரியர்களான பீட்டர் மற்றும் வில்லியம்சுடன் தலைமையாசிரியரை 09.02.2023 சந்திக்கும் நற்பேறு கிடைக்கப்பெற்றேன்.
தலைமையாசிரியர் முத்து என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது தான் சென்னையில் பங்கு கொண்ட தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு பற்றி குறிப்பிட்டுச் சொன்னார்.
தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு ஏறக்குறைய 12 மணி நேரமாக அதி திறன் பயிற்சி பொருண்மைகளை என்னிடம் விளக்கிய போது மலைப்பாக இருந்தது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் போக்கும் நோக்கும் மாறியிருப்பதை சுட்டிக்காட்டியபோது வியப்படைந்தேன்.
தன்னுடைய மாணவர்களை தன் வீட்டு செல்வங்களைப்போல் பேணிப்பாதுக்காக்கும் முத்துவின் புகழ் தமிழகத்திற்கு பெரும் சொத்தாக மிளிர்கிறது என சொன்னால் மிகையாகது.
விடைபெறும் போது தலைமையாசிரியர் முத்து பயிற்சியைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்
தலைமையாசிரியர்களுக்கு 2ஜி மூளைக்குள் 5ஜி திறனை பொருத்துவதைத்தான் தலையாய நோக்கமாக மிளிர்ந்தது என்று சொன்ன போது நகைத்தேன்.

Add a Comment