POST: 2023-05-05T08:24:28+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம்

05.05.2023, வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி,
சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம், காமராசர் சாலை, சென்னை – 600005

தொல்காப்பியர்
திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி

05.05.2023

செய்திக் குறிப்பு

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும்.

பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும்.

தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன.

முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது.

எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார்.

தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891-இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன.

தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது.

1963-இல் பேரறிஞர் அண்ணா, தொல்காப்பிய ஆங்கில மொழியாக்கத்தின் முன்னுரையில், தனக்கே உரிய எழிலார்ந்த நடையில் தொல்காப்பியத்தைப் பற்றி அவர் குறித்த வரிகள் என்றும் நீடித்து நிலைத்திருக்கும் புகழ் வரிகளாகும்.

ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும்
7 அடி உயர பீடத்தில் (படம்) அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாள் 05.05.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.15 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வணக்கத்திற்குரிய மேயர், வணக்கத்திற்குரிய துணை மேயர், சீர் பெருமக்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் மலர் வணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சித்திரை முழு நிலவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னைப் பல்கலைக் கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கீதா ஜீவன், பி.கே. சேகர்பாபு, என். கயல்விழி, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *