POST: 2023-05-12T09:59:50+05:30

பசுமையான நினைவுகள் !

அறம் எனப்படுவது யாதெனக் கேட்ட பின் மறவாது இது கேள் ; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற மணி வரிகளுக்கு ஏற்ப கல்லீரல் துறையின் மாபெரும் மருத்துவச் செம்மல் டாக்டர் முகமது ரெலா என்னை தொலைபேசியில் அழைத்து ஈத்து உவக்கும் இன்பமாக தன் வளமனையில் நடைபெறும் ( 16 .4 .2023 ) இப்தார் விருந்துக்கு அழைத்தபோது நெகிழ்ந்தேன் .

என் பெற்றோர்கள் மீது அளப்பரிய அன்பும் – கனிவும் பொழிந்த மருத்துவச் சிகரம் தன் இல்லத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சைவ உணவு வழங்கிய பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடியது .

உமிழ்நீர் கூட விழுங்காமல் உள்ளன்போடு வாழும் இசுலாமியர்கள் ஈகைப் பெருநாளை ஈதுல்
பித்ர் என்றழைப்பர் .

தொழுகைக்குச் செல்லும் முன்பே தனது அன்றாடத் தேவைக்குப் போக எஞ்சிய செல்வம் உள்ள அனைவரும் வறுமையுற்ற இறையடியார்களுக்கும் செலுத்த வேண்டும் என்பதை பித்ரா என்பர் .

தனது பொறுப்பில் உள்ள குழந்தைகள் ,பணியாளர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் ,நண்பர்கள் அனைவரையும் அழைத்து மாபெரும் விருந்து படைத்த அண்ணல் ரெலாவையும் அவர் குடும்பத்தினரையும் வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்தி விடை பெற்றேன் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *