POST: 2023-05-16T11:31:31+05:30

இராஜகமலம் – பல்சுவை

( நலம் தொடர நல்வழி காட்டும் மாத இதழ் )

15. 5 . 2023

வடமொழியில் திராவிடச் சொற்கள்

முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ்நாடு அரசு

ஒரே நாட்டில் திராவிட இனமும், ஆரிய இனமும் பல நூற்றாண்டுகளாக, அடுத்தடுத்து வாழ்ந்திருந்தமையால், திராவிட மொழிகள் தமிழல்லாத பிற மொழிகள் ஆரியச் சொற்களைப் பேரளவு கடன் வாங்கியுள்ளன.

அதே நிலையில் திராவிடத்திலிருந்து கடன் வாங்க ஆரியமும் தயங்கவில்லை என்பதும் உரத்து ஒலிக்கும் உண்மை.

இந்தோ ஐரோப்பிய மொழி ஒலியனாக ஒப்புக் கொள்ளாதவர்கள், திராவிடத்திலிருந்து இது வந்தது என்ற கொள்கையை ஒப்புக் கொள்வர்.

ஆம். என்பதனை ‘ஏது நிகழ்ச்சி எனவும், திருவாணத்தைப் பெரும்பேறு எனவும் தமிழாக்கியுள்ளார்.

துன்பம் தோற்றம் பற்றே காரணம்… “இந்தோ ஐரோப்பிய இனச் சொற்களின் (Cognates) பொருள்கள் ஒத்தவையாக இல்லையெனின், இங்ஙனம் ஒப்புக் கொள்வதில் தடையேதும் இல்லை.

இதிலிருந்து ரிக் வேத காலத்தவரோடு சேர்ந்து திராவிட மொழி பேசுவோர் வாழ்ந்திருந்தனர் என்பது புலனாகிறது எனக் குறிப்பிடும். தெ பொ மீ தமிழில் உள்ள கைதை என்பது வட மொழியில் ‘சைதகா’ Kaieaka என வருகிறது.

அவ்வாறே தமிழில் உள்ள ஏலம் வடமொழியில் ‘ஏலா’ (Ela’) எனவும், தமிழ் ‘மயில்’ வடமொழியில் ‘மயூர’ எனவும், தமிழில் உள்ள ‘எறும்புப் புற்று வடமொழியில் ‘பத்திக’ Puttika) எனவும் உள்ளது.

வேத காலத்தும், அதற்குப் பிற்பட்ட காலத்தும் வடமொழியில் திராவிடச் சொற்கள் கலந்துள்ள வாய்ப்பைத் தள்ளிவிட முடியாது என்பது தெளிவாகிறது என்று மொழிக் கலப்பின் தொன்மையை விளக்குகின்றனர்.

தமிழில் உள்ள நீர், மீன் முதலிய சொற்கள் முறையே வட மொழியில் நீர, மீன என வழங்கப்படுகின்றன.

இச்சொற்களுக்குப் பதிலாக வேறு சொற்கள் திராவிட மொழிகளில் இல்லை.

இவற்றிற்கு இணையாக வேறு
சொற்களைப் பயன்படுத்த முடியாது.

ஆனால், இச்சொற்களின்றி வேறு சொற்களை வடமொழி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே, அவை திராவிடச் சொற்களே என்று கூறும் திராவிட மொழியறிஞர் கால்டுவெலின் சுருத்தும் மொழிக் கலப்பின் தொன்மையை உணர்த்துகிறது.

பேராசிரியர் பிளிக் என்பவர், “பால் வேறுபாடு உணர்த்தும் பிற மொழிகளிலிருந்து, ஆரிய மொழிகள், பால் உணர்த்தா அஃறிணைச் சொற்களைப் பெற்றிருப்பதால், அவை வேறு பிரித்து அறியப்படும்.

ஆரிய மொழித் தோற்றத்தின்போது, திராவிடச் செல்வாக்கும் ஓரளவு ஆட்சி புரிந்தது என்பதும் ஒருவகையில் ஏற்புடையதாம். வேறு சில இயல்புகளைப் போலவே, இவ்வஃறிணை ஒருமைப்பாடும் அவ்வாட்சியின் விளைவுகளில் ஒன்றாகும்” என்று கூறினார்.

அதனை எடுத்துக்காட்டி டாக்டர் கால்டுவெல், “பால் திராவிட மொழிகளிலேயே முறையாகவும் முழு அளவிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இது சம்ஸ்கிருத ஆட்சியின் விளைவாக இருத்தல் இயலாது.

மாறாகத் திராவிட ஆட்சியின் பயனாகவே சம்ஸ்கிருதத்திலும் அஃது இடம் பெற்றிருக்கும்” என்றார்.

வடமொழியோடு மட்டுமன்றிச் சிங்களம்,பாபிலோனியா,
கிரேக்கம் ஆகியவற்றின் மொழிகளோடும்
தமிழ்மொழிக் கலப்பு நேர்ந்ததாக மொழி நூலறிஞர்கள் குறித்தனர்.

சிங்கள மொழியில் வழங்கப்படும் Dramila எனும் சொல், தமிழில் வழங்கும் ‘தமிழன்’ என்பதன் வடிவமாற்றாக உள்ளது.

இலங்கைக் கல்வெட்டுகளில் ‘பெருமகன்’ முதலான தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன.

சுமேரியத் தலைநகரான ‘ஊர்’ என்பதை ‘ஊர்’ என்னும் தமிழ்ச் சொல்லோடு இணைத்துப் பேசுவர் மொழி நூலறிஞர்.

மயிலுக்கு ஈப்ரு மொழியில் வழங்கும் ‘துகி’ என்பது தோகை என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து பெயர்ந்ததாகக் கால்டுவெலும் பிறரும் கட்டுரைத்தனர்.

கிரேக்கச் சொல்லான Oruza என்பது தமிழ்ச் சொல்லென
புரிந்தது .

”அரிசி’ என்பதிலிருந்து வந்ததாகவும் கூறுவதை நாமறிவோம்.

கிரேக்கப் பயணியர் தமிழ்ச் சொல்லான ‘தமிழகம்’ என்பதை எனத் தம் மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழில் தொன்மைக் காலத்திலேயே தொடங்கிய மொழிக்கலப்பு. இலக்கிய இலக்கணப் படைப்புகளிலும் இடம் பெறலாயிற்று.

தொல்காப்பியம் கிறித்து பிறப்புக்கு முற்பட்ட பழந்தமிழ் நூலாகக் கருதப்படுகிறது.

இன்றுள்ள தமிழ்நூல்களுள் தொன்மையானதும் தொல்காப்பியமே.

இந்நூலில் உயிரியல், இடையியல், மரபியல் முதலிய பகுதிகளில் அருஞ்சொற்களுக்குத் தொல்காப்பியர் பொருள் விளக்கியுள்ளார்.

இவருக்கு முற்பட்ட இலக்கியப் பரப்பில் தாம் கண்ட சொல்லாட்சிகளுக்கும் இவர் காலத்துச் சொல்லாட்சிகளுக்கும் வேறுபாடு அமைந்துள்ளது.

முந்தைய இலக்கியத்தின்
அருஞ்சொற்களைத் தம் காலத்தவருக்கு உணர்த்தக் கருதியே தம் நூலுள் தொல்காப்பியர் ஆங்காங்கே பொருள் விளக்கம் செய்தார்.

தொல்காப்பியத்தில் காணப்படும் அந்தம், மாத்திரை, காயம், கருமம், ஏது. அம்போதரங்கம், குஞ்சரம், வைசியன், வாணிகம் என்பவற்றைச் சான்றுகளாகக் கொண்டு நோக்குகையில், தொல்காப்பியர் காலத்திலேயே பிறமொழிச் சொற்கலப்பு நிகழ்ந்ததை அறியலாம்.

காலம், உலகம், பூதம்
(சொல். 58 )
மண்டிலம் (பொருள் 421)
சூத்திரம் (640 படலம்
(474) பிண்டம் முதலிய சொற்களையும் பிற மொழிக்கலப்பிற்குச் சான்றுகளாகக் காட்டலாம்.

இவை மட்டுமின்றி சுண்ணம், வண்ணம், பழைமை,பண்ணத்தி முதலிய பிராகிருதச் சொற்களும் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.

தொல்காப்பியத்தில் காணப்படும் வடமொழிச் சொற்கள் என அறிஞர் அநவரத நாயகம், நாற்பத்தொரு சொற்களைப் பட்டியலிட்டார்.

இச்சொற்களில் காலம், நாடகம், பிண்டம், பலி, பக்கம் பேய் உரு முதலிய சொற்கள் திராவிட மொழிகளில் இருந்து வடமொழி கடன் வாங்கியவை என்று டாக்டர் கிட்டல் தமது 1894ஆம் ஆண்டு தமது கன்னட அகராதியில் குறிப்பிட்டுள்ளார்.

மீன் என்னும் தமிழ்ச் சொல்லை மீனம் என வடமொழி கொண்டதாகத் தொல்காப்பியச் சொல்லதிகாரம் குறிப்பிடுகிறது சங்க இலக்கியம் .

பாட்டும் தொகையுமான சங்க நூல்களில் பிறமொழிச் சொற்கள் பயின்று வந்துள்ளன.

அறுபதுக்கும் மேற்பட்ட பிறமொழிச் சொற்கள்
சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன என்பது அறிஞர் வையாபுரியாரின் கருத்தாகும்.

திருக்குறளில் 221 வடமொழிச் சொற்கள் உள்ளன. என்று கணக்கிட்டு அவர் மயங்கியது புலவர் உலகத்தால் பழிக்கப்பட்டது.

இலக்கியங்களிலும் திருக்குறளிலும் பிறமொழிச் சொற்கள் அருகியே கலந்துள்ளன என்பதை மறுக்க இயலாது.

திருக்குறளில் ஆதி, பகவன், பாக்கியம் என்ற வடமொழிச் சொற்கள் கலந்துள்ளன என்று தெ.பொ.மீயும் குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறளில் எடுத்தாளப் பெற்றவை பன்னீராயிரம் சொற்கள் என்றும், அவற்றுள் ஐம்பது கூட வட சொற்கள் இல்லையென்றும் டாக்டர் லாசரஸ் கணக்கிட்டார்.

இச்சொற்கள் அணி, அந்தம், அமரர், அமிழ்தம், அங்கணம், சாதி, ஆதி ஆகுலம், ஆசாரம், ஆயம், இந்திரன், இலக்கம், கருமம், கணம், காமம், காரணம், குணம், குலம், கோடி, சலம், ஞாலம், தண்டம், தவம், தானம், துலை, தெய்வம், தேயம், தேவர், நரகம், நாகரிகம், பருவம், பாக்கியம், பாகம், பாவம், புருவம், பூதம், மங்கலம், மந்திரி, மதி, மணி, மாத்திரை, மாயம், மானம், முகம், முத்தம், யாமம், வித்தகர். இவற்றுள் முகம், காமம், மணி, மாலை என்பன இருமொழிகளிலும் உள்ள சொற்கள் என மகாவித்துவான். ச.தண்டபாணி தேசிகர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிலப்பதிகாரம்

சைவம், வைணவம், சமணம், பௌத்தம் முதலான சமயங்கள், சிலப்பதிகாரக் காப்பிய மாந்தரொடு தொடர்பு கொண்டன. சமுதாயச் செய்திகளும், சமயச் செய்திகளும், பாத்திரங்கள் வாயிலாகப் பலபடக் கலக்கும்போது, எவ்வளவுதான் அயன்மையை ஒதுக்கிப் பாட நினைத்திருந்தாலும்,
“நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்” என்பதற்கு இணங்கக் காப்பியத்திடத்துப் புகுந்து மொழிக்கலப்புக் கால்கொண்டது எனக் காப்பியங்களில் பிறமொழிச் சொற்கள் கலந்த நிலையைப் பற்றி அறிஞர் வ.சுப.மாணிக்கம் கூறுவது நினைக்கத்தக்கது.

‘சகரம் மொழிக்கு முதலாக வரும் என்று தொல்காப்பியம் உரைக்கவில்லை.

சிலப்பதிகாரத்திலோ சகரத்தை மொழி முதலாகக் கொண்ட சடை, சகடு சண்பகம், சமன், சந்தனம், சந்து, சங்கம், சங்கு சதுக்கம், சதங்கை சங்கில, சந்திரபாணி, சலம், சலதி, சந்தி, சரவணம், சக்கரம், சகடம், சந்திர குரு சமைப்பேன், சரிதை சமரம், சகோடம், சயந்தன், சங்கரன், சயம்பு, சதுமுகன், சங்கரி, சஞ்சயன், சங்கன் எனப் பல சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு மொழிக்குரிய இலக்கண விதிகளையும் கடந்து, சொற்கள் இடம் பெற்றமைக்குப் பிறமொழியின் கலப்புந்துதல் பெருங் காரணமாயிற்று எனலாம். இனி மொழிக் கலப்பிலிருந்து செந்தமிழின் செழுமையைப் பெருக்கப் புதிய சொல்லாக்கங்களை இளங்கோவடிகள் படைத்ததும் கருதத்தக்கது.

மாதவத்தாட்டி குலப்பிறப்பாட்டி வாய்ச்சி, நகைச்சி, மூதறிவாட்டி, வானநாடி, இயக்கி, தொழிலாட்டி, முதுக்குறைவி, முகத்தி, வாய்த்தி, நகைத்தி போன்ற சொல்லாக்கங்கள் இளங்கோவடிகள் பிறமொழிக் கலப்பைத் தடுக்க முனைந்த முயற்சியின் வெளிப்பாடாகவே உள்ளது.

கட்டுரையாளர் தொடர்புக்கு:
dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *