தினமலர் – 14.5.23
கணினி யுகத்திலும் தமிழ் வளர்கிறது…
தொன்மைவாய்ந்த தமிழ்மொழியை வளர்க்க
” எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ” என்ற கோஷம் அறைகூவலாக எழுப்பப்பட்டு வருகிறது .
தமிழை வளர்க்க, அரசின் தமிழ் வளர்ச்சித்துறை என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது.
இது குறித்து, அதன் இயக்குனர் டாக்டர். அருள் நம்மிடம் பகிர்ந்தவை தமிழ் வளர்க்க தமிழ் வளர்ச்சித்துறை என்ன செய்கிறது ?
மாவட்ட வாரியாக, ஆட்சி மொழி கருத்தரங்கம் நடத்தி வருகிறோம் அலுவல் பணிகளில் தமிழை எப்படி பிழையின்றி எழுக வேண்டும் என்பதை தமிழ் மொழியில் புலமை பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வாயிலாக பயிலரங்கமாக வழங்கி வருகிறோம் .
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அனுப்பி வைக்கப்படும் அரசாணை சுற்றறிக்கையை, சிறந்த முறையில் தமிழில் வரைவு செய்யும் அரசுத்துறை அலுவலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குகிறோம் .
அலுவலகங்களில் தமிழ் வாயிலாக பேச எழுத வேண்டும் அகவை முதிர்ந்த தமிழாசிரியர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறோம்.
மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வம் குறைந்து வருகிறதே ?
பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் தமிழ் சார்ந்த கவிதை, பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி, ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறோம்.
அறிவியல் ஒலிம்பியாட், கணித ஒலிம்பியாட் போன்று, தமிழக அரசு, 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, தமிழ் திறனறிவு தேர்வு நடத்தியது.
அதில், 2.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்; இவர்களில், 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, 20 மாதங்களுக்கு, 1,500 ரூபாய் வீதம் ஊக்கத் தொகை வழங்குகிறோம்.
மாநிலத்தில், 174 அரசு கலைக்கல்லுாரி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லுாரிகளில், ‘தமிழ் மன்றம் உருவாக்க மாநில அரசு, 5 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
தமிழ் மன்றங்கள் வாயிலாக தமிழ் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தி, தமிழை வளர்க்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம்
ஊடகங்களில் பணிபுரிவோருக்கு, தெளிவான உச்சரிப்புக்கான விருது வழங்க உள்ளோம்.
கம்ப்யூட்டர் யுகத்தில், தமிழை வளர்க்க முடியுமா ?
நிச்சயமாக கம்ப்யூட்டர் வாயிலாக, தமிழ் மொழியிலேயே பிழையின்றி தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பம் வந்துவிட்டது ஈரியான உச்சரிப்புடன் விஷயங்களை சொல்லும் போது, அது தானாகவே தட்டச்சாகி எழுத்து வடிவம் பெறும் அளவுக்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது.
தமிழ் வளர்ச்சித்துறையின், sorkuvai.com என்ற தமிழ் வளர்ச்சித்துறை இணைய தளத்தில், 10 லட்சம் ஆங்கில சொற்களுக்கு தமிழ் அர்த்தம் அறிந்துக் கொள்ளும் வகையிலான அகராதி உள்ளது வணிக நிறுவனங்கள் தமிழை வளர்க்கின்றனவா ?
வணிகர்கள் தங்கள் கடைகளின் பெயரை,
தமிழ் மொழியில், 5 மடங்கு பெரிய அளவிலும், ஆங்கில மொழியில்,
3 மடங்கு,
பிற மொழியில்,
2 மடங்கு அளவில் எழுத வேண்டும். இதை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் முடியும்.
ஆனால், மொழி ஆர்வம் என்பது, அன்பால் போதிக்கப்பட வேண்டிய விஷயம்; தண்டித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விஷயமல்ல என்பதால், உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம்.

Add a Comment