POST: 2023-05-25T10:14:46+05:30

எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !

தமிழ் வளர்ச்சித் துறை
நீலகிரி மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்
2022 – 2023

அழைப்பிதழ்

நாள்: திருவள்ளுவராண்டு 2054, சித்திரை – 26,27
09.05.2023 செவ்வாய்,
10.05.2023 புதன்

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல்
கட்டடக் கூட்ட அரங்கம், நீலகிரி மாவட்டம்

ஆட்சிமொழிப் பயிலரங்கம் – 2022-2023

பிற்பகல் 03.00

தமிழ்த்தாய் வாழ்த்து

முன்னிலை :

முனைவர் ந. அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்
சென்னை

தினபூமி – 12 5 2023
பக்கம் எண் : 6

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
இயக்குநர் ஒளவை அருள் வழங்கினார்

ஊட்டி மே.12

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள் பரிசுகளை வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு அரசாணைகளையும் பேராசிரியரும் தமிழ்த்துறைத் தலைவர் தமிழ்ச் செம்மல் முனைவர் போ. மணிவண்ணன் அவர்களின் 3 மொழிப்பெயர்பு நூல்களை வெளியிட்டும் மற்றும் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப் போட்டியில் பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழ்களும்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் வழங்கி பெருமைப்படுத்தி பேருரையாற்றினார் .

நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 09.05.2023 மற்றும் 10.05.2023 ஆகிய இரு நாள்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடக் கூட்ட அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் 09.05.2023 அன்று ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிகழ்வில் ஆட்சி மொழி வரலாற்றுச் சட்டம் எனும் தலைப்பில் முனைவர் பி.ஜெனத் பிரதஸ் கௌரவ விரிவுரையாளர்

தமிழ்த்துறை உதகை அரசு கலைக் கல்லூரி மொழிப்பயிற்சி எனும் தலைப்பில் முனைவர் எச்.சோபனா உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை உதகை அரசு கலைக் கல்லூரி

ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள் எனும் தலைப்பில் மக்கள் சட்ட மைய நிறுவனர் கே.விஜயன் ஆகியோர்களால் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பெற்றன.

இரண்டாம் நாள் காலை நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிகழ்வில் அலுவலகக் குறிப்புகள்
வரைவுகள் செயல்முறை தயாரித்தல் ஆணைகள் எனும் தலைப்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமைப் பொறுப்பாளர் ஆ.ரவிக்குமார்

மற்றும் மொழிப் பெயர்ப்பு கலைச்சொல்லாக்கம் எனும் தலைப்பில் தமிழ்ச் செம்மல் முனைவர் போ. மணிவண்ணன் தமிழ்த் துறைத் தலைவர் அவினாசி அரசு கலைக் கல்லூரி
ஆகியோர்களால் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பெற்றன.

மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள் தன் பேருரையில் தெரிவித்ததாவது:-

பள்ளி மாணவர்கள் தொடங்கி அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் வரை அனைத்து தரப்பு மக்களிடமும் நாள்தோறும் தொடர்புக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எங்கும்
தமிழ் எதிலும் தமிழ் என்பதை வலியுறுத்தி வருவதை நாடு நன்கறியும்.

இந்திய நாட்டில் எந்த மொழிக்கும் பெறாதச் சிறப்பினை செம்மொழியாம் தமிழ்மொழி பெற்றிருப்பதையும்

அரசு அலுவலகங்களில் நல்ல தமிழில் எழுதும் வரைவுகளுக்கு முதல் பரிசு ரூ. 3000 –
இரண்டாம் பரிசு
ரூ.2000 –
மூன்றாம் பரிசு ரூ. 1000 –
என்பதை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியரும் தமிழ்த்துறைத் தலைவர் தமிழ்ச் செம்மல் முனைவர் போ. மணிவண்ணன் அவர்களின் தூரிகையில் கசியும் கவிதை
திசையுடைக்கும் சொல் கவிதைக்காய்க்கும் மரம்
என்ற 3 மொழிபெயர்பு நூல்களையும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000 –
இரண்டாம் பரிசு ரூ.7000
மூன்றாம் பரிசு ரூ.5000 -பரிசுத்தொகையும் சான்றிதழ்களையும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் வழங்கினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *