மலையாள மனோரமா இதழ்
11.5.23
செய்தியின் தமிழாக்கம்
மலையாள கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளின் வெளியீட்டில்
முனைவர். மணிவண்ணன் (மத்தியில்)
மலையாள கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன.
ஊட்டி:
மலையாள மொழியின் கவிகளான குரீப்புழ ஸ்ரீகுமார் மற்றும் அனீஷா இக்பால் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை தொகுப்புகளின் தமிழாக்கம் வெளியிடப்பட்டன.
அவினாசி கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் முனைவர். மணிவண்ணன் மற்றும் கோயம்புத்தூர் கொங்குநாடு கலைக் கல்லூரி இரா. மணிமேகலை ஆகியோர் இக்கவிதைகளை தமிழாக்கம் செய்துள்ளனர்.
’துரிகையில் கசியும் கவிதை’ , ‘திசையுடக்கும் சொல்’, ‘கவிதை காய்க்கும் மரம்’ ஆகியவை தொகுப்புகளின் பெயர்களாகும். முனைவர். ப.மணிவண்ணன் அவர்களின் தமிழ் கவிதை கேரளாவின் எட்டாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

Add a Comment