POST: 2023-07-14T07:29:29+05:30

எழுச்சி வாய்ந்த எழுபதாம் பிறந்தநாள் திருவிழா…13.7.23 பொன்மணி மாளிகையில்

எவர் தொடுவார் இந்த உயரம் எங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவே சிகரம்!

திறமைகளின் புதையலாகவே திகழ்பவர் எங்கள் கவிஞர் வைரமுத்து என்று என் அப்பா பலமுறை பெருமிதமாக எல்லோரிடமும் சொல்லி மகிழ்வார்

நயாகரா நீர்வீழ்ச்சி போல நயவுரை நம்பியின் தேனருவி தமிழ் உரைக்குப் பிறகு நேற்று திருவிழாக் கூட்டங்களை விஞ்சிய தமிழ் கூறு நல்லுகத்தினர் மத்தியில் கவிப்பேரரசு அருகில் சென்று பிறந்தநாள் வணக்கம் சொல்லும் நல்வாய்ப்பினை உருவாக்கித் தந்த அப்பாவின் நேர்முக உதவியாளர் பொன்னேரி பிரதாப் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்…

தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமிதம் சேர்க்கும் கவிப்பேரரசு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *