POST: 2023-08-01T13:47:01+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
அரியலூர் மாவட்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கம்
அழைப்பிதழ்

நாள் : திருவள்ளுவராண்டு 2054,

ஆடி -17,

27.07.2023, வியாழக்கிழமை
இடம் : அரசு கலைக் கல்லூரி, அரியலூர்.

பெருந்தகையீர், வணக்கம்.
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு அருந்தமிழ்ப் புகழ் மணக்கும் சோழபுர வீர நிலமான அரியலூரில் நடக்கின்ற ஆட்சித் தமிழ் விழா !

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா !

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா !

வண்ணப் பறவைகளாய் எண்ணக் கனவுகளாய் வந்துசேரும் அலுவலர்களுக்கு அன்னைத் தமிழை நிறைக்கும் ஆட்சிமொழிப் பெருவிழா !

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா !

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில் தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!

கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து ஒருநாள் முழுவதும் ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள்!

– ஒளவை அருள்.
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

காலை 10.00 – வருகைப்பதிவு
10.30 – 11.00 – தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை – திருமதி.க.சித்ரா அவர்கள்
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், அரியலூர் மாவட்டம் (மு.கூபொ) |

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை –
திருமதி ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சியர்,
அரியலூர் மாவட்டம்

சிறப்புரை – முனைவர் ந.அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை.

வாழ்த்துரை –
முனைவர் ஜோ. டோமினிக் அமல்ராஜ் அவர்கள் முதல்வர், அரசு கலைக் கல்லூரி, அரியலூர்

நன்றியுரை-
திரு. போ. சுருளி பிரபு அவர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்

11.00-11.45 -முத்தமிழறிஞர் கலைஞர் நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள் –
திரு. பூ. இரவிக்குமார் அவர்கள் தலைவர் தமிழ் பேராயம், பெரம்பலூர்

11.45-12.00 -தேநீர் இடைவேளை
12.00-12.45 – காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி வரலாறு
-முனைவர் த.மரகதம் அவர்கள். இணைப் பேராசிரியர். தமிழாய்வுத்துறை, அரசு கலைக் கல்லூரி, அரியலூர்

12.45-1.30 – குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் தொடர்பில் தீர்வுகள் –
முனைவர் க.சிவசாமி அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை மேனாள் துணை இயக்குநர்

1.30-2.00 – உணவு இடைவேளை

2.00-2.45 – அரசுப் பணியாளர்களும் ஆட்சி மொழிச் சட்டமும் –
முனைவர் அ. மணமலர்ச்செல்வி அவர்கள்
முதுநிலை விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கீழப்பழுவூர்

2.45-3.30 – கணினித் தமிழ் –

முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள்
இணையத்தமிழ் ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு

3.30-3.45-தேநீர் இடைவேளை

3.45-4.30 – மொழிப்பயிற்சி –

திரு.வெ.இராமகிருஷ்ணன் அவர்கள்
முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, அரியலூர்

4.30-5.15 – பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல்

அளப்பறியா கோபுரமே!
மருதப் பூக்கள் வனப்புடைய மனத்தோனே!
கலைஞர் கோவே!
களைப்பறியா பொதியமலைக் காற்றே!
காலமெல்லாம் உம்மைக் கைதொழுது வாழ்த்துவோமே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *