அழைப்பிதழ்
தமிழ் வளர்ச்சித் துறை
திருவள்ளூர் மாவட்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிக் கருத்தரங்கம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
அரசு கலைக்கல்லூரி, திருத்தணி
திருவள்ளுவராண்டு 2054, ஆடி-11
27.07.2023 வியாழக்கிழமை
பெருந்தகையீர் வணக்கம்.
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
தமிழ் கொஞ்சும் தணிகையில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா!
மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!
பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!
வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!
ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!
தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!
கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து ஒருநாள் முழுவதும்
ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள்!
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
காலை
10.00-10.30 வருகைப்பதிவு
10.30-11.00
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: முனைவர் இரா. அன்பரசி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூ.பொ.
திருவள்ளூர்
தலைமையுரை : மரு. ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஆட்சிமொழிக் கருத்தரங்கத்தின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரை
ஒளவை அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
சென்னை
11.00-11.45
முத்தமிழறிஞர் கலைஞர்
நிகழ்த்திய செம்மொழிச்
செயற்பாடுகள் : முனைவர் கே.இரா. கமலா முருகன்
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்
இராணிமேரி கல்லூரி, சென்னை
11.45-12.00
தேநீர் இடைவேளை
12.00-12.45
குறிப்புகள் வரைவுகள்
எழுதுதல் தொடர்பில்
தீர்வுகள் : நல்லாசிரியர் புலவர்
ஆறு. துரைக் கண்ணன்
தலைமையாசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி
திருப்பூண்டி வடக்கு, நாகப்பட்டினம்
12.45-1.30
மொழிப்பயிற்சி : முனைவர் ச. முருகேசன்
தமிழ்த்துறை தலைவர்
த.இ.க.க.செ. இந்து கல்லூரி, பட்டாபிராம்
1.30-2.15
உணவு இடைவேளை
2.15-3.00
காலந்தோறும் தமிழ்
ஆட்சிமொழி வரலாறு : திரு.கூ.வ. எழிலரசு
மேனாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
3.00-3.45
அரசுப் பணியாளர்களும்
ஆட்சிமொழி சட்டமும்: பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு
உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சிமொழி
ஆணையம் மேனாள் பதிவாளர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
சென்னை
3.45-4.00:
தேநீர் இடைவேளை
4.00-4.45
கணினித் தமிழ்: முனைவர் ம. லோகேஸ்வரன்
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்
த.இ.க.க.செ. இந்து கல்லூரி, பட்டாபிராம்
4.45-5.15
பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல்
5.15
நன்றியுரை : திருமதி ஜெ. சாவித்திரி
உதவியாளர், திருவள்ளூர்
நாட்டுப்பண்
அளப்பறியா கோபுரமே!
மருதப் பூக்கள் வனப்புடைய மனத்தோனே!
கலைஞர் கோவே!
களைப்பறியா பொதியமலைக் காற்றே!
காலமெல்லாம் உம்மைக் கைதொழுது வாழ்த்துவோம்!

Add a Comment