POST: 2023-08-10T14:50:08+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
செய்திக் குறிப்பு

தமிழ்மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெரும் தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1234 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.3500 + மருத்துவப்படி ரூ.500/- உதவித் தொகையாக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் புத்தகங்கள் எழுதுவது தொடர்பாகவும், பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கும், இலக்கிய விழாக்கள், மாநாடுகள் என்று தமிழகமெங்கும் பங்கு கொள்வதற்கு ஏதுவாக 1978 ஆம் ஆண்டு முதல் 2013 வரை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டது.

தற்போது 2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள 591 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை அனுமதிக்கப்பட்டு அரசாணை வரப்பெற்றுள்ளது.

591 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களில் அடையாளமாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி சு. கலைமணி, திரு. ஆ. அந்தோணி செல்வதாஸ், திரு. வே. நீலகண்டன், திரு. எம். ஜலாலுதீன், திரு. மு. நடராஜன் ஆகிய ஐந்து அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகைக்கான அரசாணையையும்,

2009ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் முதல் முறையாக ஒரிசா புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தின் கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நிதியுதவியாக ரூ.15 இலட்சம் வழங்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது.

மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் 2023-2024ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது

“1992ஆம் ஆண்டு முதல் ஒரிசா மாநிலத்தில் இயங்கி வரும் புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மொழியைக் கற்பிக்க ஏதுவாக வகுப்பறைகள் மற்றும் கட்டட விரிவாக்கப் பணிகளுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில்
ரூ.15 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்“ என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புவனேஸ்வர் தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கென இரண்டாவது முறையாக நிதியுதவியாக ரூ.15 இலட்சத்திற்கான காசோலையினை புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. செ. துரைசாமி அவர்களிடம் வழங்கியும்,

மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலக ஓட்டுநர் திரு. ச. செல்லப்பாண்டி அவர்கள் அரசுப் பணியில் இருக்கும்போது 09.10.2022 அன்று இயற்கை எய்தியமையால் அவரது மகன் திரு. செ. சக்திதாசனுக்கு கருணை அடிப்படையில் தமிழ் வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணி நியமனம் செய்த ஆணையையும்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (07.08.2023) திங்கட்கிழமையன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அரசு செயலாளர், மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., அவர்களும், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஔவை அருள் அவர்களும், மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஒரிசா மாநிலம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மொழியைக் கற்பிக்க, வகுப்பறைகள் மற்றும் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூபாய் 15 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்…

தினமணி – 8 8 2023
பக்கம் எண் : 3

தினசெய்தி – 8 8 2023
பக்கம் எண் : 3

முரசொலி – 9 8 2023
பக்கம் எண் : 8

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *