தினசெய்தி – 13 8 2023
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 174
திரிவேணி சங்கமம் – தொல்காப்பியம் – தசரூபகம் – ஷேக்ஸ்பியர் நாடகம் !
முனைவர் ஔவை அருள்
தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய
முனைவர் பட்ட ஆய்வின் இருபத்து நான்காம் பகுதி வருமாறு:
In Julius Caesar – Swami Vibulanandha considers Julius Caesar as an embodiment of pride, nobility and invincible courage.
Calpurnia tells him about her dream and tries to dissuade him from going to the Capitol.
This dialogue between Calpurnia and Caesar in this context is rendered by Swami Vibulanandha in the following lines.
பேரிரவில் நடந்தெலெல்லாம் பிழையினை விளைக்கப்
பேதலிக்கும் உளச்சிறியேன் பேசுகின்ற மொழிகள்
ஆருயிர்க்குத் தலைவநின் அருட்செவியில் வீழ்க
அகத்திடை இன்று இருந்திடுக ! அவைபுகுதல் ஒழிக !
எனக் குறையிறந்து வேண்டி நின்றனள்.
அதனைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து
‘அஞ்சினர்க்குச் சத மரணம் அஞ்சாத நெஞ்சத்து
ஆடவனுக்கு ஒரு மரணம் அவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவரென்று அறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்
துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்பவன் யான் !
இன்னலும் யானும் பிறந்தது ஒரு தினத்தில் அறிவாய்
இனஞ் சிங்கக் குருளைகள் யாம் யான் மூத்தோன் என
பின்வருவது இன்னலெனப் பகைமன்னர் அறிவார்
பேதுறல் பெண்ணங்கே யான் போய்வருதல் வேண்டும்‘
எனக் கூறினார்.
Another speech that has engaged Swami Vibulanandha’s attention for purpose of translation is the one in which Caesar turns down Metullus Cimber’s request for pardon on behalf of his brother.
சிம்பர் என்பவன் முற்பட்டுவந்து முழந்தாட் படியிட்டு நின்று, வேண்டியது கண்டதும்:
‘தாழ்ந்து மென்மொழி உரைத்திடேல் தரணியிற் பணிந்து
வீழ்ந்து நைபவர் பொய் புரைக்கிரங்கிய வீணர்
சூழ்ந்து செய்தனதுடைத்துப் பின் சோர்வினை அடைவார் !
ஆழ்ந்து செய்வன செய்யும்பான்! அவர்நெறி அணையேன் !
அண்ண நீர்மையேன், பிழைசெயேன் அணுவள வேனும்
நண்ணும் நீதியில் பிரிந்திடேன் நாய் எனக்கதறிக்
கண்ணில் நீர்மிக நிலத்தினிற் புரள்வதால் கருதும்
எண்ணம் முற்றும் என்னநீ எண்ணுவது இழிவே !
பின் சீசர் தம்மைச் சூழ்ந்து நின்ற விண்ணப்பித்தோரை நோக்கி‘
“இரங்குதிர் என்ன இரக்கம் நீர்மையர்
தமைப்பிறர் இறக்கில் தயை காட்டுநரே
நும்போல் வேன் எனினும் நும்மொழிக்கு இசைவேன்
வானகம் மிளிரும் மீனினம் அனைத்தும்
தற்சூழ்ந்து அசையத் தானசை வின்றி
நிலைபெறும் துருவன் நிலைமை கண்டிலிரோ
வான்மீன் அனையர் மாநில மாந்தர் உளனால்
துருவன் அனைய ஒருவன் ஈண்டு உளனால்
அவன்தான் யானென அறிகுவிர் புகன்ற
மொழியிற் பிரியேன் பழியொடு படரேன்
மலை வீழ்வு எய்தினும் மனம் வீழ்விலனே“
Julius Caesar is based on Roman History and Swami Vibulanandha retains the names of the character as in the original.
Swami Vibulanandha’s translated
“As You like It” as “VenirKathai”.
His translation of the famous passage ‘The Seven Ages of Man”, captures the spirit of the original as can be seen below.
‘அங்கண் உல(கு) அனைத்தினையும் ஆடரங்க(ம்) எனலாகு(ம்) அவனிவாழும்
மங்கையரை ஆடவரை நடம்புரியு(ம்) மக்களென மதித்தல் வேண்டும்
இங்கு இவர்தம் பலகோல(ம்) எய்திநின்ற நாடகத்தின் இயல்பு கூறின்
பொங்கு(ம்) அங்கம் ஏழாகிப் போக்குவர(வு) இருக்கையொடு பொருந்து(ம்) அன்றே!
முதல அங்கத்(து) இயல்(பு) உரைப்பின் முலையருந்தி மணி இதழ்வாய் முகிழ் திறந்து
குதலைச் சின்மொழி மொழிந்து செவிலித்தாய் காதலத்தி(ல்) கூத்துமாடித்
திதலைப் பொன் செறிதனத்தார் சேர்த்தனணைக்கச் சிறுநகையிற் சிறப்புக் காட்டும்
மதலைச் செம்பருவத்தின் வனப்(பு) அனைத்தும் விளங்க நின்ற மார்க்க(ம்) ஆகும்.
மணிமருள்வாய் இளஞ் செவ்விமதலை என நடித்த மகன் வதன நோக்கம்
அணிநிறையு(ம்) ஓர்ஐந்தாண்(டு) அடைதலுமே கணக்காயர் அகத்தை நோக்கி
இணைபிரிந்த இளஞ்சிந்தை பின்ஈர்க்க முன்ஏகி இளஞாயிற்றின்
குணநிறைந்த சிறுபொழுதில் குறுகி நடந்(து) உறுகின்ற குறிப்(பு) இரண்டே.
எல்லை வந்த மூன்றாகு(ம்) அங்கத்தின் குறிப்(பு) உரைப்பின் ஏருஞ் சீரும்
புல்ல நின்ற யௌவனமாம் பருவ(ம்) உறவேனில் வேள்பொருபோர் வேட்டு‘
மெல்லி நல்லார் தமைநாடிஅங்(கு) அவர்தம் கண்புருவம் வியந்து பாடிச்
சொல்லரிய காமஅன(ல்) உளம்வெதுப்ப நெடி(து) உயிர்க்குந் தோற்ற(ம்) ஆகும்!
அடல்ரியேறு என ஆர்த்துப் புலிமுகத்த(ன்) இவ(ன்) என்னவருபோர் வேட்டுப்
படுகளத்தில் அதிரிடிபோல் படிந்(து) உறுமும் பீரங்கிப் படை முன்னாக
மிடல் சிறப்பப் பொரு(து) எனினும் புகழ்பெவன் யான் என்ன வீரமேவல்
தொடர்புடைய நான்காம் அங்கத்தின் குறிப்பென்னச் சொல்லலாமே.
வட்டவுரு எய்துஉதரம் வடிவினிற் சற்(று) அகன்று நிற்ப மனத்தின் நீர்மை
திட்டமுற நயனத்தில் சினக்குறிப்பு(ம்) அருட்குறிப்பும் சேர்ந்து நிற்பச்
சட்டமுறை அறிந்தெவர்க்கும் சமநிலையாய் நீதிசொலும் சார்பின் மேவி
இட்டமுறும் பெருமகன்த(ன்) இயல்நிலையை ஐந்தென்ன இயம்பலாமே!
முதுமைஉற உடல் தளர்ந்து முகம் சுருங்கி உருக்குலைந்து மூப்பின் (தோற்றம்
இதுவெனக்கண்(டு) உளமெலிய இணைவிழியில் படிகக்கண் இயைந்து நிற்பக்
கதுமெனவே இருமல் வரகால் தளர்ந்து தள்ளாடிக் கருத்து மாறிக்
குதலை மொழிச் சிறுவ(ர்) உரை குலவுகின்ற கிழப் பருவம் கூறி(ன்) ஆறே !
பண்ணியையும் மென்மொழிசேர் பால(ர்) ஒக்கும் கிழப்பருவம் பயின்ற பின்னர்
கண்ணிணைகள் (நோக்(கு) ஒழியச் சுவைஒழியக் கருத்து நீங்க
உண்ணும் உணவுஒழித்(து) அனைத்து(ம்) ஒழிந்து மறைந்(து)
உயிர்வாழ்க்கை ஒருவும் தோற்றம்
எண்ணுமிந்த நாடகத்தி(ன்) இறுதியெனயாம் எடுத்(து) இயம்புவாமே.‘
He has also translated a few passages from some significant scenes, into prose.
In The Winter’s Tale, Swami Vibulanandha confined himself to a clear sequential narrative of the story.
He did not attempt any critical analysis of the play.
Dr.Palani Arangasamy, Professor and Head of the Department of English – Periyar Maniammai University, observes that “No single passage or episode is highlighted.
No passage is rendered in verse, though the original play contains a number of songs and passages of lyrical beauty”.
In “The Twelfth Night” Swami Vibulanandha gave his own title for the play which, when translated would be, “The story of the fulfillment of the lovers desire”.
He also explained the significance of the title of the play and proceeded to give a summary of the plot.
The readers were drawn to particular attention to the sub plot in which Kamalai’s (Olivia) steward Kolakalan (Malvolio) is gulled.
This scene overflows with gaiety and humour.
After subjecting the twelve plays already mentioned to critical analysis, Swami Vibulanadha in his conclusion observed that the structure of Shakespeare’s plays and the types of characters are in consonance with the principles of Dramatization in Tamil and Sanskrit.
He refers to “Dasarupakam” (treatise on Sanskrit dramaturgy) in which there are four types of characters for men and women and how they fit into one or the other of these categories.
With his knowledge of Tamil, English and Sanskrit, Swami Vibulanandha took a synthetic approach to his study of Shakespeare.
Even though Swami Vibulanandha has no dramatic composition of his own, he has written a compendium of Shakespearean criticism, blending Tamil, English and Sanskrit.
His work is a treatise that is in a way a Triveni Sangaman of Tolkappiar, Dasarupakam and Shakespeare, which is a unique contribution to Shakespeare studies.
– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment