POST: 2023-09-01T09:23:34+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
காஞ்சிபுரம் மாவட்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

அழைப்பிதழ்

நாள் : திருவள்ளுவராண்டு 2054,

ஆடி-17, 02.08.2023, புதன் கிழமை

இடம் : புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரி,
உத்திரமேரூர்,

பெருந்தகையீர், வணக்கம்.

அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாநகரில்
நடக்கும் வண்ணமிகுந்த திருவிழா!

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா !

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா !

வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா !

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா !

கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து ஒருநாள் முழுவதும்
ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள் !

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை.

நிகழ்ச்சி நிரல்

10.00 – 10.45
தமிழ்த்தாய் வாழ்த்து

வருகைப்பதிவு :

திருமதி க. பவானி
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், சேலம்
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (மு.கூ.பொ), காஞ்சிபுரம்

முன்னிலை:
திரு. டி.ஆர். பாலு,
நாடாளுமன்ற உறுப்பினர், திருப்பெரும்புதூர்.
திரு. க. செல்வம்,
நாடாளுமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம்.
திரு.க.சுந்தர்,
சட்ட மன்ற உறுப்பினர், உத்திரமேரூர்
திரு. கு. செல்வப்பெருந்தகை,
சட்ட மன்ற உறுப்பினர், திருப்பெரும்புதூர்

தலைமை: திருமதி கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு
விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கினை
தொடங்கி வைத்து
விழாப் பேருரை :

திரு. தா.மோ. அன்பரசன்
மாண்புமிகு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்கள் துறை அமைச்சர்

10.45 – 11.00
கருத்தரங்க நோக்கவுரை;
முனைவர் ந.அருள் அவர்கள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை,

11.00 – 11.45
நவீன தமிழ்நாட்டின சிற்பி கலைஞர்:

திரு.சி.வி.எம்.பி. எழிலரசன்
சட்ட மன்ற உறுப்பினர்
காஞ்சிபுரம்.

11.45-12.00 தேநீர் இடைவேளை

12.00 – 12.45
அரசுப் பணியாளர்களும் ஆட்சிமொழிச் சட்டமும்;

முனைவர் ப.கி. கிள்ளிவளவன்
முதல்வர்
ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்
கல்லூரி, செங்கல்பட்டு.

12.45-01.30
காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி வரலாறு;

திரு.கூ.வ.எழிலரசு
தமிழ் வளர்ச்சித் துறை மேனாள் இயக்குநர்
தலைவர், காஞ்சி செம்மொழித் தமிழ்ச் சங்கம்

1.30 – 2.00
உணவு இடைவேளை

2.00 – 02.45
குறிப்புகள் வரைவுகள்
எழுதுதல் தொடர்பில்
தீர்வுகள்;

முனைவர் இரா. அன்பரசி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்
கடலூர் மாவட்டம்

02.45 – 3.30
கணினித் தமிழ்;

திரு.என்.எஸ்.நாணா (நாராயணன்)
எழுத்தோவியர்
முதலமைச்சர் கணினித் தமிழ் விருதாளர்
சென்னை

3.30-3.45 தேநீர் இடைவேளை

03.45 – 04.30
மொழிப் பயிற்சி:

முனைவர் பா. கதிரவன்
காஞ்சிபுரம்

4.30-5.00 பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல்

அளப்பறியா கோபுரமே!
மருதப் பூக்கள் வனப்புடைய மனத்தோனே!
கலைஞர் கோவே!
களைப்பறியா பொதியமலைக் காற்றே!
காலமெல்லாம் உம்மைக் கைதொழுது வாழ்த்துவோமே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *