சங்கம் அமைத்து தமிழ் வளர்ப்பதில் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள்

தினமணி – 2 9 2023
பக்கம் எண் : 4

சங்கம் அமைத்து தமிழ் வளர்ப்பதில் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள்

ஒளவை ந அருள்

சென்னை எழும்பூரில் உலகத் தமிழர் பேரவை சார்பில் பிரான்சு தமிழ்ச் சங்கத் தலைவர் பி.தசரதனுக்கு ‘தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல் ‘ விருதை வெள்ளிக்கிழமை வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள்.

உடன் ( இடமிருந்து ) உலகத் தமிழர் பேரவை நிர்வாகிகள் குணசேகரன், ப.சந்தர், மெய்ஞானி பிரபாகரபாபு, பொன்னேரி பிரதாப் உள்ளிட்டோர்.

சென்னை, செட்1:

உலகத்தில் எங்கு போனாலும் சங்கம் அமைத்து தமிழை வளர்ப்பதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள் கூறினார்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் உலகச் செம்மொழித்தமிழ்ச் சங்கம் இணைந்து வெள்ளிக்கிழமை எழும்பூரில் பிரான்சு தமிழ்ச் சங்கத் தலைவர் பி.தசரதணுக்கு ‘ தமிழ்ப்பண்பாட்டுச்செம்மல் ‘ விருதை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந. அருள் வழங்கினார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது :

பி. தசரதன் தமிழுக்கு செய்யும் சேவைகளை எனது சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறேன்.

மற்றவர்களை விட தமிழர்களுக்கு இசை, மொழி, உணவு ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உண்டு.

உலகத்தில் எங்கு போனாலும் சங்கம் அமைத்து தமிழை வளர்ப்பதில் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள்.

5 பேர் சேர்ந்தால் தமிழ்ச்சங்கம்,
20 பேர் சேர்ந்தால் பெரிய தமிழ்ச்சங்கம்,
50 பேர் சேர்ந்தால் மாபெரும் தமிழ்ச்சங்கம் என தமிழர்கள் எங்கு ஒன்று சேர்ந்தாலும் சங்கம் ஆரம்பித்துவ்விடுவார்கள்.

பல்வேறு சங்கங்களை ஒன்றிணைக்கும் திறமை தமிழர்களுக்கு உண்டு.

தற்போது பிரான்சில் தமிழ் வளர்ச்சி தேய்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் யுனெஸ்கோவில் திருக்குறள் மாநாடு நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்றார் அவர்.

இந்த விழாவில் உலகத் தமிழர் பேரவை நிர்வாகிகள் குணசேகரன், ப.சந்தர்,
மெய்ஞானி பிரபாகரபாபு, பொன்னேரி பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *