POST: 2023-09-03T12:13:33+05:30

தினசெய்தி – 3 9 2023

பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 177

பம்மல் சம்பந்த முதலியாரின் தமிழாக்கம் – அமலாதித்யன், மகபதி

முனைவர் ஔவை அருள்

தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய
முனைவர் பட்ட ஆய்வின் இருபத்தேழாம் பகுதி வருமாறு:

Pammal Sambanda Mudaliar has done justice to what is commonly called the Trial scene in The Merchant of Venice (Act IV).

He has successfully recreated the poetic spirit of the original thought he has adopted the principle of localisation in respect of names.

Some relevant passages are given below.

கசக்கிப் பிழிய ஏலாது. காருண்ய குணம், வானத்தி
னின்று விழுமினிய மழைநீரைப் போல் அது
வையகத்தின் மீது தானாகப் பெருகுகின்றது.

இரண்டு
விதத்தில் அது இன்பம் தருவதாகும்.

அதை
கொடுப்பவனுக்கு இன்பத்தையுண்டு பண்ணுகிறது.

அது எவ்வளவு வல்லமைச் சாரியிடத்திருக்கின்றதோ,
அவ்வளவும் அதற்கு மகிமையாம். மன்னருக்கு

அவரது மகுடத்தைப் பார்க்கிலும் அதிக
அழகைத் தருவதாகும்.

அவரைக் கண்டு
எல்லோரும் பயப்படச் செய்கின்ற அவரது பெருமைக்கு
அதிகாரத்திற்கும் அது ஓர் அறிகுறியாகும்.

காருண்யமோ,
இச்செங்கோலின் ஆளுகைக்கு மேலானது.

ஆகவே கருணையோடு தர்மத்தை
நடத்தும் இந்நில உலக மன்னரது ஆளுகையானது
ஜகதீசனுடைய ஆளுகையை மிகவும் ஒத்திருக்கும்.

வாணிபுர வணிகன்
(அங்கம் 4 – காட்சி 1)

Even now, the Trial scenes in Tamil films in which women play the role of lawyers are a regular feature and this is obviously modeled on the Trial scene from The Merchant of Venice.

This only confirms the influence of Shakespeare.

HAMLET

Hamlet is a complex character and the interpretation of his character has baffled many critics.

Pammal Sambanda Mudaliar was the first person to introduce a tragic character on the stage as he maintained that a plot need not always have a happy ending.

A case in point, is his Hamlet (Amaladityan) staged in the month of September1906 and published in 1908.

Indians always find a kindred soul in Hamlet with his melancholic, meditative, and vacillating turn of mind.

Hamlet, the Prince of Denmark, in Pammal Sambanda Mudaliar’s play becomes Amaladityan – Prince of Kurjars.

Pammal Sambanda Mudaliar familiarized the names of characters by giving them an Indian name and the play carries echoes of palace intrigues and political currents and cross currents.

Pammal Samabanda Mudaliar also managed to render in moving Tamil prose, Hamlet’s preoccupation with death in his famous soliloquy.

It reads as below:

இருப்பதோ, இறப்பதோ, ஈதாம் கேள்வி, தொளஷ்ய
மானதுர்திர்ஷ்டம் நம்மிதையும் கவண்களையும்
கணைகளையும் தூயமனத்துடன் பொறுப்பதோ,
அல்லது கடலின் திரைகளென வந்திடும்
கஷ்டங்களுடன் மன்றாடி முடிப்பதோ? இறப்பது?
-உறங்குவது? அவ்வளவோ அப்படி உறங்குவதினால்

மனத் துயரங்களையும், உடலுடன் பிறந்த
எண்ணுதற்கரிய இயற்கை யிலுண்டாம்
துன்பங்களையும், எல்லாம் விட்டொழிகின்றோ
மென்கிற இம்முடிவு எல்லோரும் ஆவலோடு
விரும்பத்தக்கதே! உயிர்துறப்பது – உறங்குவது –
உறங்குவது ! ஒருவேளை கனவு காண்பதோ? ஹா!

அதோ இருக்கின்றது கஷ்டம்.

நாம் இவ்வுடலாகிய
பாரத்தை நீக்கியவுடன், உயிர் துறந்த வென்னும்
உறக்கத்தில், எண்ணென்ன கனவு காண்போமோ
என்பதே நம்மை நிதானிக்க செய்கிறது.

இந்த ஒரு
காரணம் பற்றியே, நமக்கு நேரும் எல்லாக்
கெடுதிகளோடும் நாம் நெடு நாள் உயிர்
பொறுக்கின்றோம்.

எவனொருவன் காலகதியாலுண்டாம்
கஷ்டநிஷ்டுரங்களையும், அடக்கி ஆள்பவரின்
அக்கிரமத்தையும், மதம்பிடித்தவர்களாலுண்டாம்
மானபங்கத்தையும், வெறுக்கப்பட்டகாதலின்
வெந்துயர்களையும், நியாயஸ்தலங்களில் நேரிடும்
காலக் கழிவையும், அதிகாரிகளின் கர்வத்தையும்,
யோக்கியதை ஏதுமில்லாரிடமிருந்து யோக்கியர்கள்
பொறுமையுடன் அனுபவிக்கும் அவமானங்களையும்,
பொறுத்திருப்பன் இப்புவியில்,

இந்த அலைச்ச
லெல்லாமின்றி தனக்குத் தானாகத்தன் ஆயுளை
முடித்து அமைதி அடைய, வெறும் ஊசியும் போது
மானதாயிருக்க? இறந்தபின் ஏன்னும் என்னும்
பயமே, ஒருவருமறியாத, மாண்டவர் எல்லையை
மீண்டும் கடவாத்தேயத்தின் எண்ணமே, நமது
மனத்தைக் கலக்கி, நாம் அறியாத துன்பங்களின்
வீழ்வதைவிட, நாம் அனுபவிக்கும் துன்பங்களையே
பொறுத்திடச் செய்கிறது.

நம்முடைய நெஞ்சமே
இவ்வாறு நம்மையெல்லாம் நடுங்குறச் செய்கிறது.
இதனாலேயே நமது சங்கற் பங்கருனல்லாம் தம்
மாழிமழுங்கி, நோயுற்றவாறே யோசனைக்கு இன்
றியமையா வெறுப்புறுகின்றன. நமது முக்கியமாம்
மென்மையுடைய பெருமுயற்சியெல்லாம் இவ்வாறே
கலக்கப்பட்டே, கனாதடுமாறி செய்கையழிந்து,
காரியமென்றும் பெயரையுமிழக்கின்றன.
பொறுசற்றே ! –

அழகிய அபலை! – அணங்கேநீ
தியானம் செய்யுங்கால் எனது பாபங்களையெல்லாம்
மன்னிக்கும் படிப் பிரார்த்திப்பாய் !

(அங்கம் 3 – காட்சி 1)

The passage, in which Hamlet emphasizes the contrast between his father and his uncle, is meant to wring his mother’s conscience and correct her has been beautifully brought out.

அம: இதோ பாரும்! இந்தப் படத்தையும்,
இதையும், அச்சில் வார்த்தது போல் அப்படியே
எழுதப்பட்ட இரண்டு சகோதரர்களின் உருவங்கள்.
பாரும் இந்த முகத்தில் என்ன கலை
தங்கியிருக்கின்றது !

ஸ்ரீகிருஷ்ணனுடைய கேசம் !
ஸ்ரீராமனே என்று சொல்லும்படியான காம்பீர்யம் !
அதி சூரனான் அர்ஜூனனுடைய கண்கள்,
பயமுறுத்துதற்கும் கட்டளையிடுவதற்கும் !
ஆகாயத்தை அளாவிய கந்தமாதனத்தின் மீது
கந்தசுவாமி வீற்றிருந்த கோலம் ! தேவதை
களெல்லாம் சேர்ந்து தங்கள் அழகினையெல்லாம்
ஒருங்கு திரட்டி உலகத்திற்கோர் உத்தமமான
மனுஷ்ய உருவைக் கொடுத்தது போன்றவர் ! இவர்
உமது கணவனாக – இருந்தவர் ! இதோ பாரும்

இந்தப்புறம் என்ன இருக்கிறதென்று இதோ பாரும்
இந்தப்புறம் என்ன இருக்கின்றதென்று, இதோ உமது
கணவனாக இருக்கின்றவன்! அமிர்தத்துடன்
ஆலகால விஷம் உதித்தது போல அவருடன் பிறந்த
பாதகன் ! உமக்குக் கண்களில்லையா? இந்தமகம்மே
ருவில் சுகித்திருப்பதை விட்டு இந்த மாடு
மேய்க்கும் கழனியில் வீழ்ந்துழல்வீரா? ஐயோ !

உமக்குக் கண்களிருக்கின்றனவா? இதைக்
காதலெனக் கூறமுடியாதே நீர்? இந்த வயதில்
இரத்தத்தின் கொழுமையெல்லாம் அடங்கி மனமானது
அறிவிற்கு வழிபட்டு நடக்கவேண்டிய காலமாயிற்றே!
எந்தப் பாழான அறிவு உம்மை இதை விட்டு இதைப்
பற்றும்படி போதித்திருக்கம்? உமக்கு அறிவென்பது
இல்லாமற் போகவில்லையே ! அவ்வாறு இல்லாமற்
போமாயின் ஆசையெங்ஙனம் பிறந்ததிருக்கக் கூடும்?

ஆயினும் அந்த அறிவானது ஒளிமழுங்கியிருக்க
வேண்டும்! என்னதான் பித்தம் பிடித்தாலும்
இப்படிப்பட்ட பிழைக்கு இடங்கொடுக்குமா?
கேவலம் மோகத்திற்கு அறிவானது எவ்வளவுதான்
அடிமைப்பட்ட போதிலும் இப்படிப்பட்ட
தாரதம்பமிருக்குமிடத்தும் பகுத்தறியுஞ் சக்தியில்லாமற்
போகுமா? எந்தப்பேய் இவ்வாறு உமது கண்களை
மூடி உம்மை மோசம்செய்தது?

உமது கண்கள்
உணர்ச்சியின்றிப் போயினவா, உமது உணர்ச்சி இது
அறியாமற் போயிற்று? உமது காதுகளும் அடைந்து
போயினவா? உமது பஞ்சேந்திர்யங்களும் பாழாகிப்
போயினவா? இல்லாவிடின் உண்மையில் எந்த
அறிவாவது சிறிதேனும் இருந்த போதிலும் இவ்வாறு
அநியாயமாய் மோசம் போகமாட்டீரோ ! வெட்கக்கேடு !
எங்கே எமது நாணம்? பாழ்நாகமே !

முதிர்
வயதடைந்த மாதர்களே இவ்வாறு அத்துமீறி
நடந்தால் நல்லயௌவனத்தின் முன்பாக கற்பானது
அதன் தீடச்ணத்தினாலேயே அனலிலிட்ட
மெழுகைப் போல் உருகி அழியுமன்றே?
அறிவே இச்சைக்கு உட்பட்டு முதுமையே
இவ்வாறு திகப்பதானுல், ஒன்றுக்கு மடங்காத
யௌவனம் உந்துங் காலத்தில் அதை நாம் குற்ற
மெனவே கூறலாகாதே !

அமலாதித்யன்
(அங்கம் 3, காட்சி 4)

The way in which Hamlet softens towards his guilty mother and corrects her is very touching.

Pammal Sambanda Mudaliar’s introduction of the supernatural element in his own plays might have been influenced by story of Hamlet and his adaptation of the same.

It is also to be noted that giving native names or Tamil names to everything in the play may not have worked as well as it did with the character names.

In Act IV Scene 5 Ophelia presents different flowers to the characters.

They carry in this context a special symbolic significance.

While Pammal Sambanda Mudaliar managed to give Tamil names to the flowers, they do not and cannot carry the same symbolism as in the original.

MACBETH

If one takes Macbeth, it is the story of ambition leading to crime and punishment.

It illustrates the dictum “character is destiny”.

Macbeth suffers from ‘vaulting ambition’ which spells his own tragic downfall.

It shows the defeat of evil and the ultimate triumph of good over evil.

The theme resonates with the Tamils due to its inherent idealistic note.

While the play does not seem to have been staged in some parts of India because of moral reaction against the general spirit of the play, it had an overwhelming response from the Indian audience in most places it was staged.

Pammal Sambanda Mudaliar, however, chose to render the play in Tamil in order to portray the conflict and turbulence of the human mind.

While scenes like the murder of the guest by the host may appear repugnant and unnatural, Pammal Sambanda Mudaliar’s purpose in staging the play was to unfold the intricate and complex workings of the human mind – Not a day passes now for most without reading or hearing about such shocking incidents.

In the play, Lady Macbeth is called the fourth witch, who instigates Macbeth to commit the murder, which reminds us of Kaikeyi and Kooni.

Lady Macbeth is these two characters rolled into one.

The pioneer that he was, Pammal Sambanda Mudaliar judiciously omitted scenes which do not contribute to the development of the plot.

He has also successfully localized the names of characters– Macbeth as Magapathy.

மாக்பெத்: அவள் பின்னர் இறந்திருக்க
வேண்டும். இப்படிப்பட்ட சங்கதி கேட்கவும்
வேளை உண்டு. நாளை, நாளை, நாளை என்று
நாளுக்குநாள் கணக்கிட்டு காலத்தின் கடைசி
எழுத்துவரை நகர்ந்து வருகிறது. புழுதியுடன்
முடியும் மரணத்தின் வழியைச் சென்று போன
நாட்கள் கயவர்களுக்குப் பிரகாசப்படுத்திக்
காட்டின், அணை, அணை அறபாயுள் மெழுகு
வர்த்தியே! வாழ்க்கை என்பது நடமாடும் நிழலே !

அரங்கேறி, தத்தித் தடுமாறும் மோசமான நடிகன்.
பிறகு அவனைப் பற்றிப் பேச்சே இல்லை. அது
ஒரு முட்டாள் சொல்லும் கதை. நிறைய
ஓசையுண்டு. ஆவேசமுண்டு ஆனால் பொருளற்ற‘
வெறும் கடபடா தான்.

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *