POST: 2023-09-04T10:22:57+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
மதுரை மாவட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்

நாள் : திருவள்ளுவராண்டு 2054,

ஆடி-15, 31.07.2023, திங்கள் கிழமை

இடம் : ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) மதுரை

பெருந்தகையீர், வணக்கம்.

அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
சங்கத்தமிழ் கூடல் மாநகரில் நடக்கும் வண்ணமிகு திருவிழா!

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா !

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா !

வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா !

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா !

கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து ஒருநாள் முழுவதும்
ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள் !

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை.

நிகழ்ச்சி நிரல்
10.00 – 10.30
வருகைப்பதிவு :

10.00 – 10.30
தமிழ்த்தாய் வாழ்த்து;

வரவேற்புரை;

முனைவர் ம. சுசிலா
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ)
மதுரை மாவட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு
விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கினை
தொடங்கி வைத்து
விழாப் பேருரை :

திருமதி மா.சௌ. சங்கீதா இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்டம்

சிறப்புரை;

முனைவர் ந. அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை

வாழ்த்துரை;

திரு. செ. சரவணன் இ.ஆ.ப.
கூடுதல் ஆட்சியர்
ஊரக வளர்ச்சித் துறை, மதுரை

முனைவர் சூ. வானதி
முதல்வர்
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர்
கலைக் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

11.00 – 11.45
கலைஞர் நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள்;

முனவர் சு. சந்திரா
தலைவர், இணைப் பேராசிரியர்,
முதுகலை (ம) தமிழாய்வுத் துறை,
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர்
கலைக் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

11.45 – 12.00
தேநீர் இடைவேளை

12.00 – 12.45
மொழிப்பயிற்சி;

முனைவர் க. தட்சிணாமூர்த்தி
உதவிப் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை

12.45 – 01.30
மதுரையும் கலைஞரும்;

திரு. சண்முகதிருக்குமரன்
நல்லாசிரியர் விருதாளர், தமிழாசிரியர்
நகராட்சி உ.நி. பள்ளி, முனிச்சாலை

01.30 – 02.00
உணவு இடைவேளை

02.00 – 02.45
திரைப்படங்களில் தமிழ் வளர்ச்சி;

கவிஞர் மு.முத்துமுருகன்
தமிழாசிரியர்
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி,
ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்

02.45 – 03.30
கணினித் தமிழ்;

திரு.ஆ.பாலமுருகன்
தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்

03.30 – 03.45
தேநீர் இடைவேளை;

03.45 – 04.30
காலந்தோறும்
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்,
வரலாறு;

முனைவர் ந.செ.கி.சங்கீத் ராதா
உதவிப் பேராசிரியர்,
தியாகராசர் கல்லூரி, மதுரை

04.30 – 05.15
பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல்;

05.15
நன்றியுரை;

முனைவர் சு.சந்திரா
தலைவர், இணைப் பேராசிரியர்
முதுகலை (ம) தமிழாய்வுத் துறை
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர்
கலைக் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

அளப்பறியா கோபுரமே!
மருதப் பூக்கள் வனப்புடைய மனத்தோனே!
கலைஞர் கோவே!
களைப்பறியா பொதியமலைக் காற்றே!
காலமெல்லாம் உம்மைக் கைதொழுது வாழ்த்துவோமே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *