தமிழ் வளர்ச்சித் துறை
கரூர் மாவட்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்
நாள் : திருவள்ளுவராண்டு 2054, ஆடி-23,
08.08.2023, செவ்வாய்க் கிழமை
இடம் : அரசு கலைக் கல்லூரி, கரூர்
பெருந்தகையீர், வணக்கம்.
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
சங்கப் புலவரும் பன்னிரு புலவர்கள் புகழ் மணக்கும் வஞ்சி மாநகரமான கருவியில் நடக்கின்ற ஆட்சித் தமிழ் திருவிழா!
மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா !
பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா !
வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!
ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா !
தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா !
கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து ஒருநாள் முழுவதும்
ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள் !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை.
நிகழ்ச்சி நிரல்
10.00
வருகைப்பதிவு :
10.30 – 11.00
தமிழ்த்தாய் வாழ்த்து:
வரவேற்புரை:
திருமதி.வே.ஜோதி அவர்கள்
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், கரூர் மாவட்டம்(மு.கூ.பொ)
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு
விழா ஆட்சிமொழிக் கருத்தரங்க
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து
விழாப்பேருரை:
மரு.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்டம்.
சிறப்புரை:
முனைவர் ந.அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை
வாழ்த்துரை:
முனைவர் செ.அலெக்சாண்டர் அவர்கள்
முதல்வர், அரசு கலைக் கல்லூரி, கரூர்
நன்றியுரை:
திரு.பெ.சா. கருப்பண்ணராஜவேல் அவர்கள்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கரூர்
11.00 -11.45
முத்தமிழறிஞர் கலைஞர்
நிகழ்த்திய செம்மொழிச்
செயற்பாடுகள்:
திரு.ஆ.சுந்தரம் அவர்கள்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
அரசு கலைக் கல்லூரி, கரூர்.
11.45 – 12.00
தேநீர் இடைவேளை
12.00 – 12.45
காலந்தோறும் தமிழ்
ஆட்சிமொழி வரலாறு:
முனைவர் ச.கொடியரசு அவர்கள்
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை, அரசு கலைக் கல்லூரி, கரூர்
12.45 – 01.30
திரைப்படங்களில் தமிழ் வளர்ச்சி:
முனைவர். க.கோபாலகிருஷ்ணன்
கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை
டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி, குளித்தலை
01.30 – 02.00
உணவு இடைவேளை
02.00 – 02.45
அரசுப் பணியாளர்களும்
ஆட்சிமொழிச் சட்டமும்:
முனைவர் சா. சுதா அவர்கள்
இணைப்பேராசிரியர் (ம) துறைத்தலைவர்,
தமிழாய்வுத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
அரவக்குறிச்சி
02.45 – 03.30
கணினித் தமிழ்:
முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள்
இணையத்தமிழ் ஆய்வாளர், தமிழ்த்துறை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு
03.30 – 3.45
தேநீர் இடைவேளை
03.45 – 04.30
மொழிப்பயிற்சி:
தமிழ்ச்செம்மல். புலவர். ப.எழில்வாணன் அவர்கள்
முதுகலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு)
பள்ளபட்டி
04.30 – 05.15
பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல்;
அளப்பறியா கோபுரமே!
மருதப் பூக்கள் வனப்புடைய மனத்தோனே!
கலைஞர் கோவே!
களைப்பறியா பொதியமலைக் காற்றே!
காலமெல்லாம் உம்மைக் கைதொழுது வாழ்த்துவோமே!

Add a Comment