POST: 2023-10-12T10:16:45+05:30

உச்சரிப்புப் பயிற்சி வகுப்பு
10.10.23

சென்னை, கலைவாணர் அரங்கில்,10.10.23 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோர் தமிழ் மொழியினை சிறப்பாக உச்சரிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

முரசொலி பக்கம் எண் : 15

THE HINDU – PAGE NUMBER : 3

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் தமிழ் மொழியினை சிறப்பாக உச்சரிக்கும் வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அக்டோபர் 10 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பினை அவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிறப்புப் பயிற்சியாளர்களாக கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழறிஞர் மருதூர் அரங்கராசன், மூத்த ஊடகவியலாளர் நிஜந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

தமிழ் செய்தி வாசிப்பாளர்களுக்கு விருது அறிவித்த தமிழக அரசுக்கு தமிழ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சங்கத் தலைவர் பிரபுதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்து அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *