POST: 2023-10-26T07:36:42+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
மதுரை மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
கருத்தரங்கம் 2023 – 24
அழைப்பிதழ்

திருவள்ளுவராண்டு 2054, சோபகிருது ஐப்பசித் திங்கள் 9, 10,
நாள்: 26-10-2023 – 27-10-2023 வியாழன், வெள்ளி
இடம்: அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை

பெருந்தகையீர், வணக்கம்!

அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
சங்கத்தமிழ் கூடல் மாநகரில் நடக்கும் வண்ணமிகு திருவிழா!

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!

வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!

கண்டு,கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து ஒருநாள் முழுவதும்
ஆட்சித்தமிழை உணர்வோடும் கேட்க வாருங்கள்!

ஒளவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

ஆட்சிமொழிப் பயிலரங்கம்
நிகழ்ச்சி நிரல்
திருவள்ளுவராண்டு 2054, சோபகிருது, ஐப்பசித் திங்கள் 9
முதல் நாள்: 26-10-2023 வியாழக்கிழமை

முற்பகல் 10.00 – 10.30: வருகைப்பதிவு
முற்பகல் 10.30: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் ம.சுசிலா அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (மு.கூ.பொ.)
மதுரை மாவட்டம்.

தொடக்கவுரை:
முனைவர் ஒளவை அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
சென்னை

முன்னிலையுரை:
மரு.அ.ரத்தினவேல் அவர்கள்
முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை

தலைமையுரை:
திரு.ர.சக்திவேல் அவர்கள்
மாவட்ட வருவாய் அலுவலர்
மதுரை மாவட்டம்.

முற்பகல் 11.00 – 12.00
முத்தமிழறிஞர் கலைஞர்
நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள்:
திரு.சண்முக.திருக்குமரன் அவர்கள்
நல்லாசிரியர் விருதாளர், தமிழாசிரியர்
நகராட்சி உயர்நிலைப் பள்ளி, முனிச்சாலை

பிற்பகல் 12.00 – 12.15: தேநீர் இடைவேளை

பிற்பகல் 12.15 – 1.15
ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள்:
முனைவர் க.பசும்பொன் அவர்கள்
முன்னாள் இயக்குநர் (மு.கூ.பொ)
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

பிற்பகல் 1.15 – 2.30: உணவு இடைவேளை

பிற்பகல் 2.30 – 3.30
அலுவலகக் குறிப்புகள், வரைவுகள்,
செயல்முறை ஆணைகள் தயாரித்தல்:
திரு.கோ.சிவக்குமார் அவர்கள் வட்டாட்சியர்,
மதுரை வடக்கு

பிற்பகல் 3.30 – 4.30
ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு:
முனைவர் ந.செ.கி.சங்கீத் ராதா அவர்கள்
உதவிப் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை

பிற்பகல் 4.30 – 5.30
ஆட்சிமொழி ஆய்வும்
குறைகளைவு நடவடிக்கைகளும்:
முனைவர் ம.சுசிலா அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (மு.கூ.பொ.)
மதுரை மாவட்டம்.

நிகழ்ச்சி நிரல்
திருவள்ளுவராண்டு 2054, சோபகிருது, ஐப்பசித் திங்கள் 10
இரண்டாம் நாள் : 27-10-2023 வெள்ளிக்கிழமை

முற்பகல் 10.00 – 10.30: வருகைப்பதிவு

முற்பகல் 10.30 – 11.15
மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம்:
பேரா. முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்கள்
தமிழ்ச் செம்மல் விருதாளர், தகைசால் பேராசிரியர்
மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை

முற்பகல் 11.15 – 11.30: தேநீர் இடைவேளை

முற்பகல் 11.30 – 12.30
முத்தமிழறிஞர் கலைஞரின்
சமுதாயச் சிந்தனைகள்:
முனைவர் மு.முத்துமுருகன் அவர்கள்
நல்லாசிரியர் விருதாளர், தமிழாசிரியர்,
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.

பிற்பகல் 12.30 – 1.30
மொழிப்பயிற்சி:
முனைவர் உ.தட்சிணாமூர்த்தி அவர்கள்
உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை

பிற்பகல் 1.30 – 2.30: உணவு இடைவேளை

பிற்பகல் 2.30 – 3.30
கணினித்தமிழ்:
திரு.செ.பாலமுருகன் அவர்கள்
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்

பிற்பகல் 3.30 – 3.45 : பங்கேற்றோர் கருத்துரை / விளக்கம்

பிற்பகல் 3.45 – 4.00 : தேநீர் இடைவேளை

பயிலரங்கம் நிறைவு

என்றும் தமிழ் வளர்க! – கலை
யாவும் தமிழ்மொழி யால்விளைந் தோங்குக!
– பாவேந்தர் பாரதிதாசன்

ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

பிற்பகல் 4.00: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் ம.சுசிலா அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (மு.கூபொ.)
மதுரை மாவட்டம்.

தலைமையுரை : திருமதி மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப அவர்கள்
மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்டம்.
2021ஆம் ஆண்டில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்திற்குக் கேடயம் வழங்குதல் மற்றும் 2021ஆம் ஆண்டில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்

ஆட்சிமொழித் திட்டச்
செயலாக்கச் சிறப்புரை:
முனைவர் ஒளவை அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
சென்னை

வாழ்த்துரை:
மரு.வே.தனலெட்சுமி அவர்கள்
துணை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை

கருத்துரை:
கவிஞர் ஈசுவரராசா அவர்கள்
குறும்பட நடிகர், பட்டிமன்றப் பேச்சாளர்,
பொதுச் செயலாளர், பொற்கைப்பாண்டியன்
கவிதா மண்டலம்

கவிஞர் மு.செல்லா அவர்கள்

திருமதி இராஜபிரபா அவர்கள்
உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர்களின்
நேர்முக உதவியாளர் மதுரை கிளை

நன்றியுரை:
திரு.இரா. கோகுல் அவர்கள்
தட்டச்சர், தமிழ் வளர்ச்சித் துறை, மதுரை
• நாட்டுப்பண்

“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது. வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”
– முத்தமிழறிஞர் கலைஞர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *