POST: 2023-10-29T10:45:54+05:30

தினசெய்தி – 29 10 2023
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 185
ஷேக்ஸ்பியர் என்னும் மாபெரும் வியப்பு

முனைவர் ஔவை அருள்
தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய
முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்தைந்தாம் பகுதி வருமாறு:

Though Pammal Sambanda Mudaliar is equally a master of verse form, he might have made use of prose in this context to ensure that the import of this passage is explicit to the Tamil audience and forms part of the prose narrative of As You Like it.

ரோசலின்ட்: உமது தமையனும் என் தங்கையும் ஒருவரையொருவர்
சந்தித்ததும் கண்டார்கள், கண்டதும் காதல் கொண்டார்கள்.
காதல் கொண்டதும் கவலைப் பட்டார்கள். கவலைப் பட்டதும்
காரணம் ஒருவரையொருவர் கேட்டார்கள். காரணமறிந்ததும்
பரிகாரமாகக் கடிமணம் புரியத் தீர்மானித்தார்கள். இவ்வாறு
அவர்கள் படிப் படியாக விவாகம் என்கிற சோபனம் ஒன்று
செய்து கொண்டனர். ஆகவே அவர்களுக்கு உடனே மணம்
புரிவிக்க வேண்டியது தான். இல்லாவிடின் அவர்களாக மணம்
புரிந்து விடுவார்கள். அவர்களுக்கு காதல் என்னும் பித்தம்‘
தலைக்கேறியிருக்கிறது. எப்படியும் ஒருங்கு சேர்வார்கள்.
கழி கொண்டிருந்தாலும் அவர்கள் பிரியார்கள்.
(பம்மல் சம்பந்த முதலியார்)

The passage which has a dramatic crescendo captures the major characteristic of the poetic, dramatic and theatricality of the love between Olivier and Celia, reminiscent of Caesar’s brag ‘I came, I saw and I conquered’ and beautifully sums up the speed of love, as opposed to the course of true love, which is generally not smooth.

Love acquires an unusual speed and seems to overtake the snail pace of Orlando and Rosalind.

THE TEMPEST
Miranda:
How beauteous mankind is! O brave new world.
That has such people isn’t!

ஓ! என்ன ஆச்சரியம்! எத்தனை அழகான மனிதர்கள்!
இத்தனை பேர் இங்கே! மனித இனம் எவ்வளவு அழகானது!
இவ்வளவு அழகான மனிதர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள
இந்த உலகம் எவ்வளவு என்னதமானது.
(அரு. சோமசுந்தரம்)

ஆ! என்ன விந்தை, நான் காண்பது ஒரு புது உலகம்
அழகிய உலகம், மக்களினமே அழகு நிறைந்தது
என்பதைக் காண்கிறேன்.
(புலவர் இரா. ஏகாம்பரநாதன்)

ஓ! மிக வியப்பு ! இங்கே எத்தனை,
ஆ! மிகச் சிறந்த அழகிய படைப்புகள்!
மனித இனந்தான் எத்தனை அழகு! ஓ!
எழில் மிகு புதிய உலகம்! தன்னுள் உலகம்
எத்துணை மக்களைக் கொண்டு இலகுகின்றது!
(புலவர் எஸ்.என்.பெருமாள்)

ஓ! அதிசயமே! நல்ல நல்ல பிராணிகள் எத்தனை
எத்தனை இங்கு இருக்கின்றன! எத்துணை அழகிது மனித இனம்!
இத்தனை சனங்களை வைத்திருக்கும், ஓ, சீரிய புதிய புவனமே.
(டி.என்.சேஷாசலம்)

The original passage rouses a sense of wonder born of novelty.

Of the four translations (Somasundaram, Ekambaranathan, Perumal and Seshachalam), the one of Pulavar S.N.Perumal is most faithful to the Shakesperean lines.

T.N.Seshachalam’s use of the word ‘பிராணிகள்’ carries the sense of man being a rational animal.

காலிபன் : பயப்படாதீர்கள் !
இரைச்சலும், ஒலியும் இன்காற்றும் நிறைந்து
இருந்திடும் தீவிது, இன்பமே தருமலை,
துன்பம் தாரா, சிலபோது ஆயிரம்
இன்னியம் இசைந்தது போன்று என் செவிகளை
நிறைக்கும், சின்னேரம் நீண்ட உறக்கத்தின்
பிறகு, விழிப்பினும் பின்பும் என்றனையே
உறங்க வைத்திடும் அவ்வோசை, பின்னர்
எழிலிகள் கனவினில் என்முன் தோன்றி
அளவிலா விலை மதிப்புடைய பொருள்களை
என்மேல் பொழியத் தயாராயிருக்கும்,
இன்னும் கனவு வராதோ என்றே
கதறுவேன்.
(புலவர்எஸ். என். பெருமாள்)

அஞ்சாதே ! அரவம் நிரம்பியது இத்தீவு ! உவப்பித்தே
ஊறு செய்ய ஒலிக்கும் இனிய இசைக்கும் உள
கிணுகிணுக்கும் கருவிகள் ஆயிரம் சிலபோது என்
செவியருகு முரலலாகும். நீள் துயில் உணர்ந்து நான்
எழுந்த காலையும், மீண்டுமென்னைத் துயில்விக்கும்
குரல்கள் சிலபோது, பிறகு, கனவிலே, கந்தரங்கள்
திறந்து என்மீது சொரிவதற்குச் சித்தமான திரவியங்களைக்
காட்டுமாப் போல் நினைத்து, யான் விழித்தபின் மீண்டும்
அக்களவு காணக் கதறுவேன்.
(டி.என்.சேஷாசலம்)

பயப்படாதீர்கள் ! இந்த தீவு முழுவதும் ஏராளமான
சப்தங்கள் ஒலிகள், இன்னிசைகள் கேட்கும், அவை நமக்கு
இன்பம் ஊட்டுமே ஒழியத் துன்புறுத்தா ! சிலசமயங்களில்
நான் தூங்கி எழுந்ததும் சில ஒலிகள் கேட்கும் அந்த
ஒலிகள் மீண்டும் என்னைத் தூங்கச் செய்யும்,
பிறகு கனவில் வானம் திறந்து என் மீது முத்துக்களைச்
சொரியத் தயாராய் இருப்பது போல் தெரியும்.
எனவே நான் எழுந்ததும் மீண்டும் தூங்கிக் கனவு
காண விரும்புவேன்.
(அரு.சோமசுந்தரம்)
இத்தீவே, இப்படித்தான், ஒரே சமயத்தில் பல இசை
ஒலிகள், இசைக் கருவிகளின் விதவிதமான ஒலிகள்,
மிருகங்களின் ஒலி, கடலின் அலைஒலி, காற்றொலி
மரங்கள்ஒடியும்படபடஒலி, இடியொலி, எத்தனையோ
ஒலிகள், ஆனால் இவை ஒருவருக்கும் ஒருபோதும்
தீங்கு செய்ததில்லை. நல்ல மனத்திற்கு அதிக இன்பத்தைத்
தருவதாகவே இருக்கும், சிலசமயம்
இசையைக் கேட்டுக் கொண்டே தூங்குவேன். ஆயிரம்
வீணைகளின் சேர்ந்த ஒலி கேட்கும். உடனே விழித்துக்
கொள்வேன். மீண்டும் இசையின் சக்தி என்னைத்
தூங்க வைத்துவிடும். நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது
கனாவென்று சொல்லும்படியாக எனக்குச் சில சமயம்
சில உண்மைகள் தோன்றும்.
(இரா. ஏகாம்பரநாதன்)

More is achieved by the half symbolic presentation of Caliban devoted to Stephano.

The be-fouling, be-labouring that precede the emergence of Alonzo, Antonio and Sebastian as rational beings are well brought out in the native idiom by the translators.

Though a savage, some of the best poetry in ‘The Tempest’ comes through Caliban’s lips, his sensitive response to the beauty of the desert island is brought out in the Tamil translation.

Of the 4, the best is probably by Aru. Somasundaram, one of the recent translators, who could have been familiar with the other renderings and made improvements.

Similarly, there are many who have done translations and while all have done what they considered the best, there will always be views on which is the better or best.

While some have focused on the beauty of the verse, some have, on the prose, to ensure that it reaches the masses.

While some have translated trying to keep the flavor of the original intact, some have translated with an eye on the local sensibilities.

The effort to make it relatable has taken the front stage for some – an example is Pammal Sambanda Mudaliar.

Many translators have left their mark and some translations have been functional.

Other than those discussed earlier, there are authors like
Ko Selvam, Srinivasa Iyengar, Pudhumai Dasan and Narayanaswamy Naidu who have also contributed their might to the translation of Shakespeare’s body of work in Tamil.

Great care has been taken by the translators not to miss any of the flavors of the varying moods depicted by Shakespeare and in fact, some have recreated a mini Shakespearean passages in Tamil, as a tribute to the great dramatist.

While all the translations do justice to the original, the way it has been rendered in Tamil varies with the author.

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *