POST: 2023-11-09T07:06:19+05:30

தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் (08.11.2023) சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன்,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன்,
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு,
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா,
துணை மேயர் திரு. மு.மகேஷ் குமார்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்

மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ் அகராதியியல் நாள் விழா -2023

மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்!

“தமிழ் அகராதியியலின் தந்தை”என்று போற்றப்படும் வீரமாமுனிவரின்
தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8ஆம்
நாளைத் “தமிழ் அகராதியியல் நாள் விழா”வாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு
பிறப்பித்துள்ள அரசாணையின்படி, “தமிழ் அகராதியியல் நாள் விழா”
கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான “தமிழ் அகராதியியல் நாள்
விழா” சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (08.11.2023) சிறப்புற
நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் பங்கேற்று, செல்வன் த.தினேசு
(அரியலூர்), திரு. வா.பரணிப்பாவலன் (செங்கல்பட்டு), கவிஞர் மெய்ஞானி
பிரபாகரபாபு (சென்னை), திரு. ச. கருத்தாளன் (எ) காளிதாசன் (கடலூர்), புலவர்
கோ. வெங்கடாசலம் (எ) பாவலர்கோ. மலர்வண்ணன் (தருமபுரி), செல்வன்
மோ. நாகஅர்ச்சூன் (திண்டுக்கல்), செல்வி பெ. தனலட்சுமி (ஈரோடு), செல்வன்
ச. வாசுதேவன் (எ) நடுநாட்டுத்தமிழன் (கள்ளக்குறிச்சி), செல்வி விண்மீன்(எ)
சி. ஏமலதா (காஞ்சிபுரம்), திரு. அகநம்பி (தமிழ்நம்பி) தி. பாலசுப்பிரமணியன்
(கன்னியாகுமரி), முனைவர் வே. குழந்தைசாமி (கோயம்புத்தூர்), செல்வன்
மு. சந்தோசுகுமார் (கிருட்டினகிரி), திரு. சித்தார்த்பாண்டியன் (எ)
பெ. தங்கப்பாண்டி (மதுரை), செல்வி இர. அகிலா (நாகப்பட்டினம்), முனைவர்
அ. செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன் (பெரம்பலூர்), செல்வி மெ. சிவநந்தினி
(புதுக்கோட்டை), திரு. சு. சோலைராசா (இராமநாதபுரம்), முனைவர் அ. மீனா
(இராணிப்பேட்டை), முனைவர் தமிழ்ப்பரிதிமாரி (சேலம்), திருமதி
கோ. ஆனந்தா (சிவகங்கை). திரு. பா. கோவிந்தராசன் (தஞ்சாவூர்),
திரு. மு. சுப்பிரமணி (தேனி), செல்வி இ. செல்வகவிதா (தென்காசி). முனைவர் ச, சரவணன் (திருப்பத்தூர்), செல்வி பு. கீர்த்தனா (திருப்பூர்), முனைவர்
சி. இராமச்சந்திரன் (திருவள்ளூர்), செல்வி ச. கீர்த்தனா (திருவண்ணாமலை),
திரு. தி. தினேசுபாபு (திருவாரூர்), திரு. வ. செல்வமாரிமுத்து (திருநெல்வேலி),
திரு. நாவை. சிவம் (எ) து.வை. சிவராமலிங்கம் (திருச்சிராப்பள்ளி), முனைவர்
செ.அந்தோணிராகுல்கோல்டன் (தூத்துக்குடி), செல்வன் இர. கண்ணன்
(நாமக்கல்), செல்வன் ம.ச. சந்தீப் (வேலூர்), திரு. பெ. கலியன் (விழுப்புரம்),
திருமதி பி.நிலா (விருதுநகர்) ஆகியோருக்கு 2022ஆம் ஆண்டுக்கான
“தூயதமிழ்ப் பற்றாளர் விருதும்”, தென்மொழி – திங்களிதழ் சார்பாக முனைவர்
மா. பூங்குன்றன் அவர்களுக்கு 2022ஆம் ஆண்டுக்கான “தூயதமிழ் ஊடக
விருதும்” மரபுக்கவிதை பிரிவில் திரு. ப. எழில்வாணன் மற்றும் புதுக்கவிதை பிரிவில்
திரு. ம. சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோருக்கு 2022ஆம் ஆண்டுக்கான “நற்றமிழ்ப்
பாவலர் விருதும்” என மொத்தம் 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகளை
வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான “அகராதி ஆய்வு மலர்”, “வட்டார
வழக்குச் சொற்பொருள் அகராதி”, “மருத்துவக் கலைச்சொல் அகராதி”,
“செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் திருந்திய பதிப்பு
(7 தொகுதிகள்), பன்மொழி அகராதியுடன் கூடிய குறுஞ்செயலி ஆகியவற்றை
வெளியிட்டுச் சிறப்பித்தார்.

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்
மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்
முனைவர் ந. அருள். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக
இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்
பங்கேற்றனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *