POST: 2023-11-24T09:33:08+05:30

தேன் மழை

தந்தைக்கு கவிஞரின் பா வணக்கம்

கவிஞருக்கு தனயனின் பூ வணக்கம்

பச்சையப்பர் கல்லூரியில் மாணவராக (1955-58) விளங்கிய போதே அப்பாவின் சொல்லாற்றலைக்கண்டு வியந்த உவமைக் கவிஞர் சுரதா
பத்மஸ்ரீ ஒளவை நடராசனை
பாதி அண்ணா என்று பாராட்டிச்
சென்றார்.

அவரின் கைவண்ணத்தால் அப்பாவை குறித்த கவிதை பின்வருமாறு,

எதுவரைக்கும் தமிழறிஞன் இந்த நாளில்
ஏற்றமிகக் கொண்டிடுவான் என்று கேட்டால்
இதுவரைக்கும் என்றெடுத்துக்காட்ட இங்கே
இவரைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன் !

மது சுரக்கும் தமிழ்ப் பேச்சால் மதியின் மாண்பால்
மணிதெறிக்கும் உரைவீச்சால் தேன் கனிந்த
அதிமதுரக் கனிப்போலப் பழகும் இந்த
ஔவை நடராசன் தான் வாழ்க வாழ்க !

உவமைக்கவிஞர் சுரதாவின்
103வது பிறந்தநாள் விழாவின் போது பெருந்தகையின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 23.11.2023 வியாழக்கிழமையன்று
தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக செய்தேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *