POST: 2023-11-25T10:48:53+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
செங்கல்பட்டு மாவட்டம்
ஆட்சிமொழிப்
பயிலரங்கம் கருத்தரங்கம்
2023-2024
திருவள்ளுவராண்டு 2054 கார்த்திகை 07, 08
23-11-2023, 24-11-2025
வியாழன், வெள்ளி
இடம் : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், செங்கல்பட்டு.

பெருந்தகையீர் வணக்கம்.

அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
செங்கை மாநகரில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!

வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!

கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து இருநாள்கள் முழுவதும்
ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள்!

முனைவர் ஒளவை ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை

தமிழ் வளர்ச்சித் துறை
செங்கல்பட்டு மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
2023-2024

நிகழ்ச்சி நிரல்
திருவள்ளுவராண்டு 2054 கார்த்திகை 07
முதல் நாள்: 23-11-2023 வியாழக்கிழமை

முற்பகல் 10.00 மணிக்கு : வருகைப்பதிவு
முற்பகல் 10.15 மணிக்கு : தமிழ்த்தாய் வாழ்த்து

முற்பகல் 10.20 மணிக்கு
வரவேற்புரை:
திருமதி க.பவானி
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
சேலம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (மு.கூ.பொ) காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு

முற்பகல் 10.30 – 11.00
தலைமையேற்று தொடக்கவுரை:
திரு. வீ. அறிவுடைநம்பி
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செங்கல்பட்டு

முற்பகல் 11.00 – 11.30: தேநீர் இடைவேளை

முற்பகல் 11.30 – 12.30
முத்தமிழறிஞர் கலைஞர் நிகழ்த்திய
செம்மொழிச் செயற்பாடு:
முனைவர் ப.கி.கிள்ளிவளவன்
முதல்வர்,
இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி
செங்கல்பட்டு

நண்பகல் 12.30 – 1.30
மொழி பெயர்ப்பு கலைச் சொல்லாக்கம்,
மொழிப்பயிற்சி:
திரு. தி.சம்பத்குமார்
முதுகலை தமிழாசிரியர் அரசு
மேல்நிலைப்பள்ளி, வாயலூர்

பிற்பகல் 1.30 -2.30: உணவு இடைவேளை

பிற்பகல் 2.30 – 3.30
அலுவலகக் குறிப்பு வரைவு,
செயல்முறை ஆணை தயாரிப்பு :
திரு. வெ.லெனின்
உதவிக் கருவூல அலுவலர்
செங்கல்பட்டு

பிற்பகல் 3.30 – 3.45: தேநீர் இடைவேளை

பிற்பகல் 3.45 – 5.00
ஆட்சிமொழி ஆய்வு
குறைக்களைவு நடவடிக்கை:
திருமதி க.பவானி
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
சேலம் தமிழ் வளர்ச்சி உதவி
இயக்குநர் (மு.கூ.பொ) காஞ்சிபுரம், செங்கல்பட்டு

தமிழ் வளர்ச்சித் துறை
செங்கல்பட்டு மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
2023-2024

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2054 கார்த்திகை 08
இரண்டாம் நாள்: 24-11-2023 வெள்ளிக்கிழமை

முற்பகல் 10.00 – 10.30: வருகைப்பதிவு

முற்பகல் 10.30 – 11.45
முத்தமிழறிஞர் கலைஞரின்
சமுதாயச் சிந்தனை:
திருக்குறள் மகிழ்நன்
திருக்குறள் பேரவை செங்கல்பட்டு

முற்பகல் 11.45 -12.00: தேநீர் இடைவேளை

நண்பகல் 12.00 – 1.30
ஆட்சிமொழி வரலாறு / சட்டம்,
அரசாணை:
முனைவர் சு.மாதவன்
தமிழ்த் துறை தலைவர்
இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி
செங்கல்பட்டு

பிற்பகல் 1.30 – 2.30: உணவு இடைவேளை

பிற்பகல் 2.30 – 3.30
கணினித் தமிழ்:
முனைவர் ச.சண்முகம்
உதவிப் பேராசிரியர்
எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
காட்டாங்குளத்தூர்

“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”
-முத்தமிழறிஞர் கலைஞர்

தமிழ் வளர்ச்சித் துறை
செங்கல்பட்டு மாவட்டம்
ஆட்சிமொழிக் கருத்தரங்கம்
2023-2024

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2054 கார்த்திகை 08
இரண்டாம் நாள்: 24-11-2023 வெள்ளிக்கிழமை

பிற்பகல் 3.30 மணிக்கு: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை: திருமதி க. பவானி
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
சேலம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (மு.கூ.பொ) காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல் வழங்குதல் மற்றும் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி தலைமையுரை:
திரு. ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப,.
மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு

ஆட்சிமொழித் திட்டச்
செயலாக்கச் சிறப்புரை:
முனைவர் ந.அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை

கருத்துரை:
திருமதி சொ.கற்பகம்
முதன்மைக் கல்வி அலுவலர்,
செங்கல்பட்டு

திரு. ச.பார்த்தசாரதி
ஒருங்கிணைப்பாளர்
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்,
சென்னை

முனைவர் சி.செயந்தி
உதவிப் பேராசிரியர்
இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி
செங்கல்பட்டு

நன்றியுரை:
திரு. ஏ.பொன்னுரங்கம்
உதவியாளர்,
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம்,
காஞ்சிபுரம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *