POST: 2023-11-28T10:12:25+05:30

39 – ஆம் ஆண்டு தொண்டில் திருவொற்றியூர் பாரதி பாசறை

(தொடக்கம்: 1984* பதிவு : 781/2000) bharathipasarai@gmail.com

39ஆம் ஆண்டு
பாரதி நேரு தேசியக் கலைவிழா

* இசை * ஓவியம் * பேச்சு * கவிதைப் போட்டிகள் பரிசளிப்பு விழா !

39 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய, தேசிய, சமுதாயத் தொண்டுகளை பாரதி பாசறை தொய்வின்றித் தொடர்ந்து செய்து வருகிறது.

இளைஞரிடம் தேசப்பற்று, தமிழ்மொழிப்பற்று, சேவை உணர்வினை வளர்க்கும் இப்போட்டிகளை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இதனால் பல்லாயிரம் மாணவர் பயன்பெற்றுள்ளனர்.

மகாகவி பாரதியார், ஆசிய ஜோதி நேரு நினைவாக நடத்தும் இந்தத் தேசியக் கலை விழாவில் 39ஆம் ஆண்டாக இசை, ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டிகளில் 35 பள்ளிகளின் 310 மாணவர்கள் பங்கேற்றுப் பரிசுகள் பெற உள்ளனர்.

திருவொற்றியூர், 18, சன்னதித் தெரு (தேரடி), மாங்காடு எல்லப்ப செட்டியார் திருமண மாளிகையில், 25.11.2023 சனிக்கிழமை நண்பகல் 2 மணிக்குப் போட்டிகளும், மாலை 5 மணிக்குப் பரிசளிப்பு விழாவும் நிகழவுள்ளது.

மனிதநேய மாமணி, தொழிலதிபர், புரவலர் அரிமா திரு ஜி. வரதராஜன் தலைமையில்

மாணவருக்குப் பரிசளித்து வாழ்த்துரை :

முனைவர் ந. ஒளவை அருள்
( இயக்குநர், தமிழ் வளர்ச்சி துறை, தமிழ்நாடு அரசு )

சிறந்த பள்ளிக்கு கேடயம் வழங்கி வாழ்த்துரை :

திரு. இ.கி. இலெனின் தமிழ்க்கோவன்
(செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமையம்)

வாழ்த்துரை வழங்குவோர் :

‘ தமிழவேள் ‘ ‘ ஞான தான வள்ளல் ‘ சிவாலயம் ஜெ. மோகன்
தொழிற்சங்கத் தலைவர் அரிமா நா. துரைராஜ்

அன்புடன் அனைவரையும் வரவேற்கும் :
திருவொற்றியூர் பாரதி பாசறை

திருவொற்றியூர் பாரதி பாசறை
39 ஆம் ஆண்டு விழா

பாரதி நேரு தேசியக் கலைவிழா

1. இசைப் போட்டி :1 – 5 வகுப்பு : பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்

2. ஓவியப் போட்டி : 0,7,8 வகுப்பு : வீதியில் திரியும் விலங்கும் விபத்தும்

3. பேச்சுப் போட்டி : 9,10 வகுப்பு : அறிவியல் திறமையில் தமிழர்கள்

4. கவிதைப் போட்டி: 11,12 வகுப்பு : உலகில் ஓயுமா போர்களின் ஓலம்

போட்டியில் பங்கேற்க கட்டணமில்லை !
முன்பதிவு செய்ய வேண்டும் !

ஒவ்வொரு போட்டியிலும் 1,2,3 தகுதிப் பரிசுகளும், பங்கேற்கும் யாவருக்கும் சான்றிதழும், நூல் பரிசுகளும் வழங்கப்படும்.

அதிகப் பரிசு பெறும் பள்ளிக்குச் சிறப்பு விருது வழங்கப்படும்

* 39 ஆண்டுகள் பாரதி பாசறைத் தொண்டுகள்

1984முதல், 100 மாதங்கள் இலக்கியச் சொற்பொழிவுகள்,

3ஆண்டுகள் வாரந்தோறும் திருக்குறள் வகுப்பு,

2ஆண்டுகள் ஒளவையார் வார வகுப்பு,

100 மாதங்கள் திருமந்திரம் வகுப்பு முடித்து, 134 மாதங்களாக திருப்புகழ் வகுப்பில் மாதந்தோறும் கடைசி ஞாயிறு காலை சொல்விருந்தும், நல்விருந்தும் வழங்கப்படுகிறது.

பட்டிமன்றம், கவியரங்கம், நூல் வெளியிடல், தமிழிசை அரங்க விழாக்களும், யோகா முகாம், நுகர்வோர் விழிப்பு, இலக்கியச் சுற்றுலா,உழவாரப்பணி, முதியோர், ஆதரவற்றோர் இல்ல அன்புத் தொண்டுகளும் தொடர்கின்றன.

தாங்களும் பங்கேற்க அழைக்கின்றோம்.

திருவொற்றியூர் ‘பாரதி பாசறை’ Youtube, Whatsapp இல் காண்க.

தினமணி – 26 11 2023 – பக்கம் எண் : 4
மாலை முரசு – 26 11 2023 – பக்கம் எண் : 6
தினமலர் – 26 11 2023

தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: ஔவை ந.அருள்
திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் ஒளவை ந.அருள். உடன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன்,” தொழிலதிபர் ஜி.வரதராஜன் சிவாலயம், ஜே.மோகன் பாரதி, பாசறை செயலர் மா.கி.ரமணன்,

திருவொற்றியூர், நவ. 25:

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப் படும் தமிழ் திறனறி தேர்வு உள் ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் தெரிவித்தார்.

திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் 39 – ஆம் ஆண்டு பாரதி, நேரு தேசிய கலை விழா சனிக்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இசை, ஓவியம், பேச்சு, கவிதை போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய பின்னர் அவர் பேசியது:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடந்த 2000 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருக்குறள் முற்றோதல் திட்டத்தில் தற்போது உச்சவரம்பு நீக்கப்பட்டு 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ. 15,000 வழங்கப்படுகிறது.

காந்தியடிகன், ஜவாஹர்லால் நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா.பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் குறித்து பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றது .

இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை என்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு, சுமார் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு,

மதுரை தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு அறிஞர்கள் மூலம் கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தமிழ் திறனறி தேர்வு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 22 மாதங்களுக்கு தலா ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு இந்தத் தேர்வில் 3 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் ஜி. வரதராஜன், பாரதி பாசறையின் செயலர் மா.கி.ரமணன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் இ.கி. லெனின் தமிழ்க்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *