POST: 2023-12-01T10:05:38+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
மயிலாடுதுறை மாவட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்
2023 – 2024

நாள்: திருவள்ளுவராண்டு 2054/ கார்த்திகை – 13, 14
2023 நவம்பர் 29, 30 (புதன், வியாழன்)
இடம்: பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அரசு கலைக் கல்லூரி, புத்தூர், சீர்காழி

பெருந்தகையீர் வணக்கம்,

அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
சிந்துத் தமிழ்ச் சந்தமிடும் சீர்மிகு சீர்காழியில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா !

மைல் கணக்கில் நடந்துவரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா !

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா !

வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து-
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா !

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!
கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து இருநாள்கள் முழுவதும்
ஆட்சித்தமிழை உணர்வோடும் கேட்க வாருங்கள் !

ஔவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
திருவள்ளுவராண்டு 2054/ கார்த்திகை – 13
29.11.2023 – புதன்கிழமை

நிகழ்ச்சி நிரல்

முற்பகல் 10.00 – 10.30: வருகைப்பதிவு
10.30: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் இரா. அன்பரசி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூ.பொ.
நாகப்பட்டினம்

முன்னிலையுரை:
பேராசிரியர் முனைவர் சீ. முகுந்தகுமாரி
முதல்வர்
பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புத்தூர், சீர்காழி

தலைமையேற்றுத்
தொடக்கவுரை;
திருமதி மு. மணிமேகலை
மாவட்ட வருவாய் அலுவலர்
மயிலாடுதுறை

11.30 – 11.45; தேநீர் இடைவேளை

11.45 – 1.00
முத்தமிழறிஞர் கலைஞர்
நிகழ்த்திய செம்மொழிச்
செயற்பாடுகள்:
குத்தாலம் ஜெ. நடராஜன்
தலைவர், கம்பர்க் கழகம், குத்தாலம்

பிற்பகல் 1.00 – 2.00: உணவு இடைவேளை

2.00 – 3.00
ஆட்சிமொழி வரலாறு /
சட்டம், அரசாணைகள்:
பேராசிரியர் முனைவர் வெ. தி. சந்திரசேகர்
புலமுதல்வர்
ஓமந்தூரார் கல்வி நிறுவனங்கள், வடலூர்

3.00 – 4.00
கணினித்தமிழ்:
முனைவர் கல்பனா சேக்கிழார்
உதவிப் பேராசிரியர்
தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்

4.00 – 4.15: தேநீர் இடைவேளை

4.15 – 5.30
ஆட்சிமொழி ஆய்வும்
குறைகளைவு
நடவடிக்கைகளும்:
முனைவர் இரா. அன்பரசி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூ.பொ. நாகப்பட்டினம்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
திருவள்ளுவராண்டு 2054/ கார்த்திகை – 14
30.11.2023 – வியாழக்கிழமை

நிகழ்ச்சி நிரல்

முற்பகல் 10.00 – 10.15: வருகைப்பதிவு

10.15 – 11.15
முத்தமிழறிஞர் கலைஞரின்
சமுதாயச் சிந்தனைகள்:
முதுமுனைவர் அரங்க. பாரி
முதன்மையர், இந்திய மொழிப்புலம் ஆட்சிக்குழு உறுப்பினர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்

11.15 -11.30: தேநீர் இடைவேளை

11.30 – 12.00
மொழிச்செழுமை;
அமுதமொழி அரசு இர. கங்கை மணிமாறன்
மயிலாடுதுறை

12.00 – 1.15
மொழிபெயர்ப்பு,
கலைச்சொல்லாக்கம்:
முனைவர் ஜா. ராஜா
உதவிப் பேராசிரியர்
பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்

பிற்பகல் 1.00 – 2.00: உணவு இடைவேளை

2.00 – 3.00
அலுவலகக் குறிப்புகள்,
வரைவுகள், செயல்முறை ஆணைகள்
அணியம் செய்தல்:
திரு சி. இராஜ்குமார்
தலைமையாசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நச்சினார்க்குடி

3.00 – 3.15: பங்கேற்றோர் கருத்துரை
(பயிற்சியில் கலந்துகொண்டவர்களின் ஐயங்களுக்கு விளக்கமளித்தல்)

3.15 – 3.30:தேநீர் இடைவேளை

ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிறைவு

தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!

உயர் தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெல்லாம்
உன்றன் வெற்றி!

– பாவேந்தர் பாரதிதாசன்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிக் கருத்தரங்கம்
நிகழ்ச்சி நிரல்
திருவள்ளுவராண்டு 2054/ கார்த்திகை – 14
30.11.2023 – வியாழக்கிழமை

பிற்பகல் 3.30: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் இரா. அன்பரசி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூ.பொ.
நாகப்பட்டினம்

தலைமையுரை:
திரு. ஏ.பி. மகாபாரதி இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை.

ஆட்சிமொழித் திட்டச்
செயலாக்கச் சிறப்புரை:
முனைவர் ஔவை அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை

கருத்துரை:
திருமதி உ. அர்ச்சனா
வருவாய்க் கோட்டாட்சியர், சீர்காழி

பேராசிரியர் முனைவர் சீ. முகுந்தகுமாரி
முதல்வர்
பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புத்தூர், சீர்காழி

முனைவர் சௌ. சசிகுமார்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறைத் தலைவர்
பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புத்தூர், சீர்காழி

நன்றியுரை:
திரு. ஆ. லியாகத்அலி
உதவியாளர்
தமிழ் வளர்ச்சித் துறை
நாகப்பட்டினம்

நாட்டுப்பண்

“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப்
பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள
மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே
உள்ளது வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”

– முத்தமிழறிஞர் கலைஞர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *