தமிழ் வளர்ச்சித் துறை
தேனி மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்
2023 – 2024
அழைப்பிதழ்
நாள் : திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை -12,13
28.11.2023, 29.11.2023 (செவ்வாய், புதன்)
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், தேனி
பெருந்தகையீர், வணக்கம்,
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
தேனி மாநகரில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா!
மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!
பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!
வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!
ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!
தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!
கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து இருநாள்கள் முழுவதும்
ஆட்சித்தமிழை உணர்வோடும் கேட்க வாருங்கள்!
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ் வளர்ச்சித் துறை
தேனி மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2023-2024
முதல் நாள் நிகழ்ச்சி நிரல்
நாள் : திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை -12,
28.11.2023 செவ்வாய்க்கிழமை
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், தேனி
முற்பகல் 10.00: வருகைப் பதிவு
முற்பகல் 10.20: தமிழ்த்தாய் வாழ்த்து
முற்பகல் 10.20 -10.30
வரவேற்புரை:
திரு.பெ.இளங்கோ அவர்கள்
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தேனி மாவட்டம்
முற்பகல் 10.30 – 11.00
தொடக்கவுரை:
முனைவர் ஔவை அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை
முற்பகல்
தலைமையுரை:
திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள்
மாவட்ட வருவாய் அலுவலர், தேனி
முற்பகல் 11.00 – 11.45
முத்தமிழறிஞர் கலைஞர் நிகழ்த்திய
செம்மொழிச் செயற்பாடு:
புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள்
நிறுவுநர், வையைத் தமிழ்ச் சங்கம், தேனி
முற்பகல் 11.45 – 12.00: தேநீர் இடைவேளை
முற்பகல் 12.00 – 1.30
ஆட்சிமொழி வரலாறு / சட்டம்:
முனைவர் வே.அ.சேவியர் பீட்டர் அவர்கள்
தமிழாசிரியர்
புனித அலோசியஸ் மேனிலைப் பள்ளி, இராயப்பன்பட்டி
பிற்பகல் 1.30 – 2.30: உணவு இடைவேளை
பிற்பகல் 2.30- 3.30
அலுவலகக் குறிப்பு, வரைவு,
செயல்முறை ஆணை தயாரித்தல்;
திரு. த.கண்ணன் அவர்கள்
தனி வட்டாட்சியர் (ச.பா.தி), போடிநாயக்கனூர்
பிற்பகல் 3.30 -3.45: தேநீர் இடைவேளை
பிற்பகல் 3.45 – 4.45
ஆட்சிமொழிச் செயலாக்கம் / அரசாணை:
திரு.ஆ.முத்துக்குமார் அவர்கள்
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மாதிரி மேனிலைப் பள்ளி, உத்தமபாளையம்
பிற்பகல் 4.45 – 5.45
ஆட்சிமொழி ஆய்வும்,
குறைகளைவு நடவடிக்கைகளும்:
முனைவர் பெ.சந்திரா அவர்கள்
மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்
(ம) மதுரை உலகத்தமிழ்ச் சங்க இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
தேனி மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2023 – 2024
இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்
நாள் : திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை -13,
29.11.2023 புதன்கிழமை
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், தேனி
முற்பகல் 10.00 – 10.30: வருகைப் பதிவு
முற்பகல் 10.30 – 11.15
முத்தமிழறிஞர் கலைஞரின்
சமுதாயச் சிந்தனை:
கவிஞர் பாரதன் அவர்கள்
செயலாளர், தேனி மாவட்டத் தமிழியக்கம்
முற்பகல் 11.15- 11.30: தேநீர் இடைவேளை
முற்பகல் 11.30- 12.30
மொழிபெயர்ப்பு
கலைச்சொல்லாக்கம்;
புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி
பிற்பகல் 12.30 – 1.30
மொழிப்பயிற்சி;
முனைவர் இரா.தமிழ்ச் செல்வி அவர்கள்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, கம்பம்
பிற்பகல் 1.30-2.15: உணவு இடைவேளை
பிற்பகல் 2.15 -3.00
கணினித்தமிழ்;
முனைவர் சி.சிதம்பரம் அவர்கள்
தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர்,
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்
பிற்பகல் 3.00- 3.15: பங்கேற்றோர் கருத்துரை / விளக்கம்
பிற்பகல் 3.15 – 3.30: தேநீர் இடைவேளை
(ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிறைவு)
தமிழ் வளர்ச்சித் துறை
தேனி மாவட்டம்
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 2023 – 2024
இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்
நாள் : திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை -13,
29.11.2023 புதன்கிழமை
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், தேனி
பிற்பகல் 3.30; தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
திரு. பெ.இளங்கோ அவர்கள்
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தேனி மாவட்டம்
தலைமையுரை:
திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்டம்
ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கச் சிறப்புரை :
முனைவர் ஔவை அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை
கருத்துரையாளர்கள் :
திருமதி கி.சிந்து அவர்கள்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தேனி
: திருமதி பா.ஷீலா அவர்கள்
மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), தேனி
: புலவர் மு.இராசரத்தினம் அவர்கள்
தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர்,
அமைப்பாளர், தமிழ் இலக்கிய மன்றம், பெரியகுளம்
: கவிஞர் பாரதன் அவர்கள்
செயலாளர், தேனி மாவட்டத் தமிழியக்கம்
நன்றியுரை:
திரு. இரா. நல்லதம்பி அவர்கள்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தேனி
நாட்டுப்பண்:
“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு
கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி
இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை
நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது
வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”
– முத்தமிழறிஞர் கலைஞர்

Add a Comment