எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ் வளர்ச்சித் துறை
இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
அழைப்பிதழ்
18.12.2023, 24.12.2023
உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை
தமிழ்சால் பெருந்தகையீர்!
வணக்கம்.
தமிழ் வளர்த்த மதுரையிலே எதிர்காலத் தலைமுறையின் சொல்லிலும் செயலிலும் தமிழ் மணக்கப் பன்முகத்திறன் தழைத்தோங்க மீண்டும் ஓர் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை!
வெல்லும் சொல் திண்மையறிந்து உரையாற்றும் திறன் வளர்க்கும் சொல்வன்மைப் பயிற்சி
ஒல்லும் வகையெல்லாம் வருங்கால ஏந்தல்களை ஆற்றல்சால் பல்துறை அறிஞர்களைக் கொண்டு பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக மிளிரச் செய்யும் சீர் சால் முயற்சி!
செம்மொழி வளர்த்த செழுந்தமிழ் மண்ணிலே மாணிக்கவாசகரின் மணிமொழிக்கு ஏற்றமளிக்கும் திருமுயற்சி!
பொய்யாக் குலக்கொடி புரண்டோடும் நகரெங்கும் எய்யாமல் ஓங்குவிக்கும் இன்பத் தமிழ் விழா!
தற்காப்புக் கலை வளர்த்து தழைத்திருந்த தமிழ்நாட்டில் மீண்டும் பொற்காலம் காண்பதற்குப் போற்றத்தகும் புதுக்கலைகள்!
மூன்று தமிழ் வளர்த்த முத்தமிழர் ஆளுகையில் நாட்டார் வழக்கோடு
நாற்றிசையும் புகழ் மணக்க ஏற்றமிகு நுண்கலைகள்!
இரஷ்ய விடிவெள்ளியின் பெயர் தாங்கிய திராவிட விடிவெள்ளியாம் தங்கத்தமிழ் முதலமைச்சரின் தமிழ்க் காதல் பறைசாற்றும் தனிப்பெரும் விழா!
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய போட்டிகளில் முந்திநின்று பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு முன்னெடுக்கும் முத்து விழா!
இமயத்தில் மீன் பறந்த ஏற்றங்கண்ட பாண்டியன் போல் இமைப்பொழுதும் சளைக்காமல் இயங்குகின்ற ஏற்றமிகு சூரியனாம் நம் முதல்வர் இட்ட வழியில் தமிழ் வளர்ச்சித் துறை கண்ட நல்லமைச்சர் தலைமையிலே நடக்கவுள்ள கூடல்விழா!
ஞாலமெலாம் உலாவரும் நற்றமிழுக்கு அமைந்த ஆலயமாம் உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் தெளிதேனின் தீஞ்சோலை!
செம்மாந்த கலைக்கோவை!
விழியுடனே ஐம்புலனும் வீறுபெறும் எழிற்சேவை! எழு பிறப்புக்கும் எழுமைக்கும் கட்டித்தேனாய் சுவைக்கும்! ஏழுநாளின் பின்னும் ஏங்கவைக்கும் இன்பத் தமிழ் மழை!
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
இளந்தமிழரை ஆற்றுப்படுத்தும்
தமிழ்ப் பெருவிழா
நாள் : 19.12.2023 (செவ்வாய்), நேரம் : 11.00 1.00
வரவேற்புரை: முனைவர் ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை
தலைமையுரை: திருமதி மா.செள.சங்கீதா இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சியர், மதுரை
திட்ட விளக்கவுரை: மரு. இரா.செல்வராசு இ.ஆ.ப., அவர்கள்
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
விழாப் பேருரை: திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
விழாச் சிறப்புரை:
*திரு.பி.மூர்த்தி அவர்கள்
மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர்
*முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்
முன்னிலையுரை:
*திருமதி இந்திராணி பொன்வசந்த் அவர்கள்
மாநகராட்சி மேயர், மதுரை
*திரு. சு.வெங்கடேசன் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர், மதுரை
*திரு.லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள்
ஆணையர், மதுரை மாநகராட்சி
வாழ்த்துரை:
*திரு. கோ.தளபதி அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்
*திரு. ஆ.வெங்கடேசன் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்
*திரு.மு.பூமிநாதன் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
*திருமதி சூரியகலா கலாநிதி அவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், மதுரை
*திரு.தி.நாகராஜன் அவர்கள், துணை மேயர், மதுரை மாநகராட்சி
*திருமதி அ.சரவண புவனேஸ்வரி அவர்கள், மண்டலத் தலைவர், மதுரை
*திரு.வே.முருகன் அவர்கள், மாமன்ற உறுப்பினர், மதுரை மாநகராட்சி
நன்றியுரை: முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள்,
ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
பயிற்சி நிரல்
நாள்: 2 – 19.12.2023 (செவ்வாய்)
மு.ப 9.15-10.00: ‘தமிழ் – பதிப்பியல் சிந்தனைகள்’
பதிப்பாளர் கோ.ஒளிவண்ணன் அவர்கள், சென்னை
மு.ப 10.00-10.45: ‘சங்க இலக்கியத்தில் கவித்துவம்’
முனைவர் சொற்கோ கருணாநிதி அவர்கள், சென்னை
பி.ப 2.00-2.45: ‘தமிழோடு உறவாடுவோம்’
முனைவர் உலகநாயகி பழனி அவர்கள், சென்னை
பி.ப 2.45-3.30: ‘முத்தமிழும் முத்தமிழறிஞரும்’
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி அவர்கள், சென்னை
பி.ப.3.30-4.15: ‘தொன்மைத்தமிழும் தொல்லியலும்’
திரு. பா.ஆசைத்தம்பி அவர்கள், மதுரை
பி.ப.4.30-5.15: ‘பாட்டினில் அன்பு செய்!’
கவிஞர் க.இராமலிங்க ஜோதி அவர்கள், சென்னை
மாலைப் பொழுதில்…
திச.19 : கவனகப் பயிற்சி
முனைவர் கலை.செழியன் அவர்கள், சென்னை

Add a Comment