POST: 2023-12-23T07:59:27+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை

அழைப்பிதழ்

18.12.2023 முதல் 24.12.2023
உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை

தமிழ்சால் பெருந்தகையீர்!
வணக்கம்.
தமிழ் வளர்த்த மதுரையிலே எதிர்காலத் தலைமுறையின் சொல்லிலும் செயலிலும் தமிழ் மணக்கப் பன்முகத்திறன் தழைத்தோங்க மீண்டும் ஓர் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை!

வெல்லும் சொல் திண்மையறிந்து உரையாற்றும் திறன் வளர்க்கும் சொல்வன்மைப் பயிற்சி
ஒல்லும் வகையெல்லாம் வருங்கால ஏந்தல்களை ஆற்றல்சால் பல்துறை அறிஞர்களைக் கொண்டு பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக மிளிரச் செய்யும் சீர் சால் முயற்சி!
செம்மொழி வளர்த்த செழுந்தமிழ் மண்ணிலே மாணிக்கவாசகரின் மணிமொழிக்கு ஏற்றமளிக்கும் திருமுயற்சி!
பொய்யாக் குலக்கொடி புரண்டோடும் நகரெங்கும் எய்யாமல் ஓங்குவிக்கும் இன்பத் தமிழ் விழா!
தற்காப்புக் கலை வளர்த்து தழைத்திருந்த தமிழ்நாட்டில் மீண்டும் பொற்காலம் காண்பதற்குப் போற்றத்தகும் புதுக்கலைகள்!
மூன்று தமிழ் வளர்த்த முத்தமிழர் ஆளுகையில் நாட்டார் வழக்கோடு
நாற்றிசையும் புகழ் மணக்க ஏற்றமிகு நுண்கலைகள்!
இரஷ்ய விடிவெள்ளியின் பெயர் தாங்கிய திராவிட விடிவெள்ளியாம் தங்கத்தமிழ் முதலமைச்சரின் தமிழ்க் காதல் பறைசாற்றும் தனிப்பெரும் விழா!
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய போட்டிகளில் முந்திநின்று பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு முன்னெடுக்கும் முத்து விழா!
இமயத்தில் மீன் பறந்த ஏற்றங்கண்ட பாண்டியன் போல் இமைப்பொழுதும் சளைக்காமல் இயங்குகின்ற ஏற்றமிகு சூரியனாம் நம் முதல்வர் இட்ட வழியில் தமிழ் வளர்ச்சித் துறை கண்ட நல்லமைச்சர் தலைமையிலே நடக்கவுள்ள கூடல்விழா!
ஞாலமெலாம் உலாவரும் நற்றமிழுக்கு அமைந்த ஆலயமாம் உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் தெளிதேனின் தீஞ்சோலை! செம்மாந்த கலைக்கோவை! விழியுடனே ஐம்புலனும் வீறுபெறும் எழிற்சேவை! எழு பிறப்புக்கும் எழுமைக்கும் கட்டித்தேனாய் சுவைக்கும்! ஏழுநாளின் பின்னும் ஏங்கவைக்கும் இன்பத் தமிழ் மழை!

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

பயிற்சி நிரல்
நாள் 6 – 23.12.2023 (சனி)

மு.ப 9.15 – 10.15: ‘
தமிழ்த்தொண்டன் பாரதி!’
முனைவர் சிவ.சதீஸ்குமார் அவர்கள், சென்னை

மு.ப 10.15 – 11.15: ‘
நா மணக்கும் நாலாயிரம்!’
திரு. மை.பா.நாராயணன் அவர்கள், சென்னை

மு.ப 11.30 – பி.ப 12.30:
‘பூமி இழந்திடேல்!’
முனைவர் அ.ப.வைத்தீஸ்வரன் அவர்கள், சென்னை

பி.ப 12.30 – 1.30:
‘எண்ணுவது உயர்வு!’
நீதியரசர் அ.முகமது ஜியாவுதீன் அவர்கள், சென்னை

பி.ப 2.30 – 3.30:
‘கூடித் தொழில் செய்!’
திரு. சோம.வள்ளியப்பன் அவர்கள், சென்னை

பி.ப 3.30 – 4.30: ‘குன்றென நிமிர்!’
திரு.அ.க.இராஜாராமன் அவர்கள், சென்னை

பி.ப 4.45 – 5.45:
‘தமிழரும் வணிகமும்’
திரு.ச.கஜேந்திரபாபு அவர்கள், சென்னை

மாலைப் பொழுதில்…
திச.23:
இளந்தமிழர் பல்சுவை நிகழ்ச்சி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *