POST: 2024-01-14T12:01:53+05:30

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் –

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (13.1.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த 7 தமிழறிஞர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்

தந்தை பெரியார் விருதினை
திரு. சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும்,

டாக்டர் அம்பேத்கர் விருதினை திரு. பி. சண்முகம் அவர்களுக்கும்
வழங்கி சிறப்பித்தார்.

அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி அவர்களுக்கும்,

பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை திரு. பரமசிவம் அவர்களுக்கும்,

பெருந்தலைவர் காமராசர் விருது திரு. உ. பலராமன் அவர்களுக்கும்,

மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதி அவர்களுக்கும்,

பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசு அவர்களுக்கும்,

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் அவர்களுக்கும்,

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் இரா. கருணாநிதி அவர்களுக்கும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு,
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்
திருமதி. என். கயல்விழி செல்வராஜ்,
தலைமைச் செயலாளர்
திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *