POST: 2024-02-04T05:40:17+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் !

தமிழ் வளர்ச்சித் துறை

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்
2023-2024

அழைப்பிதழ்
நாள்: திருவள்ளுவராண்டு 2055, தை – 18,19
01.02.2024, 02.02.2024
Q (வியாழன், வெள்ளி)
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், திருச்சிராப்பள்ளி

பெருந்தகையீர், வணக்கம்,

அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
திருச்சிராப்பள்ளியில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா!

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!

வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!

கண்டு,கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து இருநாள்கள் முழுவதும்
ஆட்சித்தமிழை உணர்வோடும் கேட்க வாருங்கள்!

முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ் வளர்ச்சித் துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2023 – 2024
முதல் நாள் நிகழ்ச்சி நிரல்

நாள் : திருவள்ளுவராண்டு 2055, தை – 18, 01.02.2024 வியாழக்கிழமை
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், திருச்சிராப்பள்ளி

முற்பகல் 10.00: வருகைப் பதிவு
முற்பகல் 10.20: தமிழ்த்தாய் வாழ்த்து
முற்பகல் 10.20 – 10.30
வரவேற்புரை: திரு.பெ.இளங்கோ அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (மு.கூ.பொ.),
திருச்சிராப்பள்ளி மாவட்டம்

முற்பகல் 10.30 – 11.00
தொடக்கவுரை:
முனைவர் ஔவை அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
சென்னை

முற்பகல்
தலைமையுரை:
திருமதி இரா.அபிராமி அவர்கள்
மாவட்ட வருவாய் அலுவலர்,
திருச்சிராப்பள்ளி

முற்பகல் 11.00 – 11.45
முத்தமிழறிஞர் கலைஞர்
நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடு:
முனைவர் ப.கிருஷ்ணன் அவர்கள்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
தந்தை பெரியார் கலை (ம) அறிவியல் கல்லூரி, (தன்னாட்சி)
திருச்சிராப்பள்ளி

முற்பகல் 11.45 – 12.00: தேநீர் இடைவேளை

நண்பகல் 12.00 – 1.30
ஆட்சிமொழி வரலாறு/ சட்டம்:
முனைவர் துரை.தம்புசாமி அவர்கள்
மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்

பிற்பகல் 1.30 – 2.30: உணவு இடைவேளை

பிற்பகல் 2.30- 3.30
ஆட்சிமொழி ஆய்வும்,
குறைகளைவு நடவடிக்கைகளும்:
முனைவர் பெ.சந்திரா அவர்கள்
மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (ம)
மதுரை உலகத்தமிழ்ச் சங்க இயக்குநர் (பொ)

பிற்பகல் 3.30- 3.45: தேநீர் இடைவேளை

பிற்பகல் 3.45 – 4.45
அலுவலகக் குறிப்பு, வரைவு,
செயல்முறை ஆணை தயாரித்தல்:
முனைவர் க.சிவசாமி அவர்கள்
மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்

பிற்பகல் 4.45 – 5.45
ஆட்சிமொழிச் செயலாக்கம் / அரசாணை:
திரு.பெ.இளங்கோ அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (மு.கூ.பொ.),
திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தமிழ் வளர்ச்சித் துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2023 – 2024
இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்

நாள் : திருவள்ளுவராண்டு 2055, தை – 19, 02.02.2024 வெள்ளிக்கிழமை
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், திருச்சிராப்பள்ளி

முற்பகல் 10.00 – 10.30: வருகைப் பதிவு
முற்பகல் 10.30 – 11.15
முத்தமிழறிஞர் கலைஞரின்
சமுதாயச் சிந்தனை:
சொல்வல்லார் கவிஞர் நந்தலாலா அவர்கள்
திருச்சிராப்பள்ளி

முற்பகல் 11.15- 11.30: தேநீர் இடைவேளை

முற்பகல் 11.30 – 12.30:
மொழிபெயர்ப்பு – கலைச்சொல்லாக்கம்:
புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி

பிற்பகல் 12.30 – 1.30
மொழிப்பயிற்சி:
முனைவர் ப.வேங்கடேசன் அவர்கள்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
தந்தை பெரியார் கலை (ம) அறிவியல் கல்லூரி, (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி

பிற்பகல் 1.30 – 2.15: உணவு இடைவேளை

பிற்பகல் 2.15 -3.00
கணினித்தமிழ்:
திரு.செ.எட்வர்ட் பாக்கியராஜ் அவர்கள்
கல்விசார் பல்லூடகத் தொழில்நுட்ப ஆலோசகர்
திருச்சிராப்பள்ளி

பிற்பகல் 3.00- 3.15: பங்கேற்றோர் கருத்துரை / விளக்கம்
பிற்பகல் 3.15- 3.30: தேநீர் இடைவேளை
ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிறைவு

தமிழ் வளர்ச்சித் துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 2023 – 2024
இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்

நாள் : திருவள்ளுவராண்டு 2055, தை – 19, 02.02.2024 வெள்ளிக்கிழமை
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், திருச்சிராப்பள்ளி

பிற்பகல் 3.30 : தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
திரு.பெ.இளங்கோ அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (மு.கூ.பொ.),
திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தலைமையுரை:
திரு. மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர்,
திருச்சிராப்பள்ளி

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கச் சிறப்புரை:
முனைவர் ஒளவை அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
சென்னை

கருத்துரையாளர்கள்
: செல்வி சா.சரண்யா அவர்கள்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),
திருச்சிராப்பள்ளி
: திரு. க.பாபு அவர்கள்
மாவட்டக் கருவூல அலுவலர், திருச்சிராப்பள்ளி
: திரு.நெ.செல்வம் அவர்கள்
தனித்துணை ஆட்சியர், சமூகப் பாதுகாப்புத் திட்டம், திருச்சிராப்பள்ளி
: திரு.அ.பொ.சிவக்குமார் அவர்கள் மாவட்ட நூலக அலுவலர், திருச்சிராப்பள்ளி
: திருக்குறள் புலவர் நாவை.சிவம் அவர்கள் தமிழ்ச்செம்மல் விருதாளர், திருச்சிராப்பள்ளி

நன்றியுரை:
திருமதி சீ.சுதா அவர்கள்
உதவியாளர், தமிழ் வளர்ச்சித் துறை,
திருச்சிராப்பள்ளி

நாட்டுப்பண்

“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”
– முத்தமிழறிஞர் கலைஞர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *