தமிழ் வளர்ச்சித் துறை
132 சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பாளர்களுக்கு பரிசு –
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்.
5 பிரதிகள் மட்டுமே…
விழாவில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது:
தமிழுக்கு சிறந்த படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
அவர்களது மேம்பாட்டுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.
ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு எழுத்தாளர்கள் தங்களது நூல்களின் பத்து பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும் என இருந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனி நூல்களின் ஐந்து பிரதிகளை மட்டும் அனுப்பி வைத்தால் போதுமானது என்றார் அவர்.
செய்திக்குறிப்பு
சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் (14.02.2024) வழங்கினார்
தனித்துவம் மிக்க நம் தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளி வருவதை ஊக்கப்படுத்தும் வகையில் 33 வகைப்பாடுகளில் வரப்பெற்ற சிறந்த படைப்புகளை அளித்த நூலாசிரியர்களுக்கும் அந்நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாரர்களுக்கும் ஆண்டுதோறும் காசோலையும் பாராட்டுச் சான்றிதழும்
1971 ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
பேராசிரியர்கள், தமிழறிஞர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து ஒவ்வொரு வகைப்பாட்டிலும் நூலைத் தெரிவு செய்து அந்நூலை எழுதிய நூலாசிரியர்க்கு ரூ.30,000/- பரிசுத் தொகையுடன் சான்றிதழும்,
அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ.10,000/- பரிசுத் தொகையுடன் சான்றிதழும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன.
அவ்வண்ணமே, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தமிழுக்குப் புத்தணியாக நூல்களைப் படைக்கும் தமிழ்த் தொண்டர் பெருமக்களுக்குப் பேரூக்கம் தரும் வகையில் 2020 ஆம் ஆண்டில் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்ட
1 மரபுக் கவிதை எனும் வகைப்பாட்டில்
ஞான கானம் எனும் நூலை எழுதிய திரு. சென்னிமலை தண்டபாணி அவர்களுக்கும்
பதிப்பித்த கோவை விஜயா பதிப்பகத்தாருக்கும்,
2 புதுக் கவிதை எனும் வகைப்பாட்டில் உயர்திணைப் பறவை எனும் நூலை எழுதிய திரு. ஆ.செங்கதிர்ச் செல்வன் (கதிர்பாரதி) அவர்களுக்கும் பதிப்பித்த இன்சொல் பதிப்பகத்தாருக்கும்,
3 புதினம் எனும் வகைப்பாட்டில் காலா பாணி எனும் நூலை எழுதிய முனைவர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அவர்களுக்கும் பதிப்பித்த அகநி வெளியீடு பதிப்பகத்தாருக்கும்,
4 சிறுகதை எனும் வகைப்பாட்டில் வாவ் சிக்னல் எனும் நூலை எழுதிய திரு. ராம் பிரசாத் அவர்களுக்கும் பதிப்பித்த படைப்பு பதிப்பகத்தாருக்கும்,
5 நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் புதிய புரட்சிக்கவி எனும் நூலை எழுதிய திரு. சா. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் பதிப்பித்த பூங்குடில் பதிப்பகத்தாருக்கும்,
6 சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் 100 சிறுவர் கதைகள் எனும் நூலை எழுதிய திரு. என்.சி. ஞானப்பிரகாசம் (வானொலி அண்ணா) அவர்களுக்கும் பதிப்பித்த கற்பக வித்யா பதிப்பகத்தாருக்கும்,
7 திறனாய்வு எனும் வகைப்பாட்டில் சிலப்பதிகாரம் ஒப்பாய்வுகள் எனும் நூலை எழுதிய முனைவர் மு. அருணாசலம் அவர்களுக்கும் பதிப்பித்த நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பதிப்பகத்தாருக்கும்,
8 மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி ,இலக்கணம் எனும் வகைப்பாட்டில் சிந்து வெளியில் முந்து தமிழ் எனும் நூலை எழுதிய நா.ப. பூரண சந்திர ஜீவா (நாகை ப. ஜீவா) அவர்களுக்கும் பதிப்பித்த யாழிசைப் பதிப்பகத்தாருக்கும்,
9 பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் ஆறாவது பெண் எனும் நூலை எழுதிய திரு. ஆ.செல்வராஜ் (குறிஞ்சிவேலன்) அவர்களுக்கும் பதிப்பித்த அகநி வெளியீடு பதிப்பகத்தாருக்கும்,
10 நுண் கலைகள்
(இசை, ஓவியம், நடனம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் நாடகமும் தமிழிசையும் எனும் நூலை எழுதிய திரு. டி.கே.எஸ். கலைவாணன் அவர்களுக்கும் பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும்,
11 அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் மரபுவழி கலைகளின் கலைச்சொல் அகராதி எனும் நூலை எழுதிய திரு. ம. இராசா அவர்களுக்கும் பதிப்பித்த அழகு பதிப்பகத்தாருக்கும்,
12 பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் கெய்ரோ முதல் ஏதன்ஸ் வரை எனும் நூலை எழுதிய திரு. என். யோகானந்த் அவர்களுக்கும் பதிப்பித்த யோகா சாவித் பப்ளிகேஷன் பதிப்பகத்தாருக்கும்,
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் எனும் நூலை எழுதிய திரு. த.சீ.பாலு (குடந்தை பாலு) அவர்களுக்கும் பதிப்பித்த ஜீவா பதிப்பகத்தாருக்கும்,
14 நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் தமிழகக் கடல்சார் பொருளாதாரமும் போர்ச்சுக்கீசிய காலனியமயமாக்கமும் எனும் நூலை எழுதிய திரு. க.ஐயப்பன் அவர்களுக்கும் பதிப்பித்த நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பதிப்பகத்தாருக்கும்,
15 கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் எனும் வகைப்பாட்டில் களிப்பூட்டும் கணிதம் எனும் நூலை எழுதிய திரு. கோவி. பழனி அவர்களுக்கும் பதிப்பித்த வனிதா பதிப்பகத்தாருக்கும்,
16 பொறியியல், தொழில் நுட்பவியல் எனும் வகைப்பாட்டில் வலை வாசல் வருக எனும் நூலை எழுதிய முனைவர் பா. சிதம்பரராஜன் மற்றும் திரு. க. சண்முகம் அவர்களுக்கும் பதிப்பித்த எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரிக்கும்,
17 மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் எனும் வகைப்பாட்டில் பாலைத்திணை மரபு கட்டுடைப்பும் அகநானூற்றுக் கட்டமைப்பும் எனும் நூலை எழுதிய முனைவர் வாணி அறிவாளன் அவர்களுக்கும் பதிப்பித்த அருண் அகில் பதிப்பகத்தாருக்கும்,
18 சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் சட்டப் பார்வையில் ஆவணங்கள் எனும் நூலை எழுதிய திரு. இ. முருகேசன் அவர்களுக்கும் பதிப்பித்த தமிழ்ச் சுவடி பதிப்பகத்தாருக்கும்,
19 பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் எனும் நூலை எழுதிய திரு. சோம. வள்ளியப்பன் அவர்களுக்கும் பதிப்பித்த கிழக்கு பதிப்பகத்தாருக்கும்,
20 மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் ஆழ்மன நோய்களும் அற்புதமான சிகிச்சையும் எனும் நூலை எழுதிய மருத்துவர் ராஜராஜன் அவர்களுக்கும் பதிப்பித்த ராரா புக்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
21 தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் யோக ஆசனம் அறிவோம் எனும் நூலை எழுதிய திரு. ந. அம்ரித்சாம் அவர்களுக்கும் பதிப்பித்த ஏ.எம். புக் ஹவுஸ் பதிப்பகத்தாருக்கும்,
22 சமயம், ஆன்மிகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் வாழ்விக்கும் வைணவம் எனும் நூலை எழுதிய திரு. எஸ். நாராயணன் (நாவலர் நாராயணன்) அவர்களுக்கும் பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும்,
23 கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் வெல்ல நினைத்தால் வெல்லலாம் எனும் நூலை எழுதிய முனைவர் அ. அமல்ராஜ் இ.கா.ப., அவர்களுக்கும் பதிப்பித்த விஜயா பதிப்பகத்தாருக்கும்,
24 வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் சுயத்தொழிலுக்கு பன்றி வளர்ப்பு எனும் நூலை எழுதிய திருமதி கு. கைலேஸ்வரி, திருமதி பு. பவித்ரா, திரு. த. ரவிமுருகன் அவர்களுக்கும் பதிப்பித்த ராமையா பதிப்பகத்தாருக்கும்,
25 சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் கடலோரக் கழிமுகங்கள் எனும் நூலை எழுதிய பேரா. டாக்டர் அ. அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் பதிப்பித்த வெர்டெக்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் வெளியீடுகள் பதிப்பகத்தாருக்கும்,
26 கணினியியல் எனும் வகைப்பாட்டில் டிஜிட்டல் இந்தியா எனும் நூலை எழுதிய திரு. ஆர். சுதன் (சுதன்) அவர்களுக்கும் பதிப்பித்த ராஜம் பதிப்பகத்தாருக்கும்,
27 நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் கழுகூர் மண்ணின் முகம் எனும் நூலை எழுதிய திரு. அ. பழனியப்பன் (கவிஞர் கழுகூர் பழனியப்பன்) அவர்களுக்கும் பதிப்பித்த தமிழ்சங்கு பதிப்பகத்தாருக்கும்,
28 வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் நீளிடைக் கங்குல் எனும் நூலை எழுதிய ராஜி வாஞ்சி அவர்களுக்கும் பதிப்பித்த படைப்பு பதிப்பகத்தாருக்கும்,
29 இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் தமிழ் வளர்த்த சிற்றிதழ்கள் எனும் நூலை எழுதிய திரு. எம்.ஆர். ரகுநாதன் அவர்களுக்கும் பதிப்பித்த ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தாருக்கும்,
30 பிறசிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் மகாபாரதம் (வரலாறும் மகிமைகளும்) எனும் நூலை எழுதிய முனைவர் எம்.கே.எஃப். லயன் கு. முத்துராசன் அவர்களுக்கும் பதிப்பித்த வசந்தா பிரசுரம் பதிப்பகத்தாருக்கும்,
31 விளையாட்டு எனும் வகைப்பாட்டில் குறுக்கெழுத்து அறிவுத்திறன் எனும் நூலை எழுதிய திரு. ம.தி. முத்துக்குமார் அவர்களுக்கும் பதிப்பித்த கவி நிலா பதிப்பகத்தாருக்கும்,
32 மகளிர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் மண்ணின் மகள் எனும் நூலை எழுதிய மருத்துவர் பிரியா இராமச்சந்திரன் அவர்களுக்கும் பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும்,
33 தமிழர் வாழ்வியல் எனும் வகைப்பாட்டில் அறிவு பற்றிய தமிழரின் அறிவு எனும் நூலை எழுதிய திரு. சி. மகேந்திரன் அவர்களுக்கும் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிட் பதிப்பகத்தாருக்கும்
2021 ஆம் ஆண்டில் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்ட
1 மரபுக் கவிதை எனும் வகைப்பாட்டில் திரு. கூ.வ. எழிலரசு கவிதைகள் எனும் நூலை எழுதிய திரு. கூ.வ. எழிலரசு அவர்களுக்கும் பதிப்பித்த மதியரசன் பதிப்பகத்தாருக்கும்,
2 புதுக் கவிதை எனும் வகைப்பாட்டில் தொட்டிலோசை எனும் நூலை எழுதிய கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களுக்கும் பதிப்பித்த வாலி பதிப்பகத்தாருக்கும்,
3 புதினம் எனும் வகைப்பாட்டில் செங்கேணி எனும் நூலை எழுதிய திருமதி ப. அமிர்தவள்ளி அவர்களுக்கும் பதிப்பித்த முரண் களரி படைப்பகம் பதிப்பகத்தாருக்கும்,
4 சிறுகதை எனும் வகைப்பாட்டில் நெஞ்சினில் கலந்தாய் எனும் நூலை எழுதிய திரு. கோ. ஒளிவண்ணன் அவர்களுக்கும் பதிப்பித்த எழிலினி பதிப்பகத்தாருக்கும்,
5 நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் விடாதுகருப்பு பெரியாரியல் நாடகங்கள் 5 எனும் நூலை எழுதிய திரு. மு. இராசுவாமி அவர்களுக்கும் பதிப்பித்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பதிப்பகத்தாருக்கும்,
6 சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் நிறம் மாறிய காக்கா எனும் நூலை எழுதிய திரு. சூடாமணிசடகோபன் (ந.கோபிநாத்) அவர்களுக்கும் பதிப்பித்த ருக்குமணி பதிப்பகத்தாருக்கும்,
7 திறனாய்வு எனும் வகைப்பாட்டில் இராமகாதை-முதலும்வழியும் எனும் நூலை எழுதிய முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களுக்கும் பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும்,
8 மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி,இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பழந்தமிழ் நூல்களில் வினை வழிப் பெயர்கள் எனும் நூலை எழுதிய முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் பதிப்பித்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பதிப்பகத்தாருக்கும்,
9 பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் உலகச் செம்மொழிகளும் இலக்கியங்களும் எனும் நூலை எழுதிய முனைவர் ந. அறிவரசன் அவர்களுக்கும் பதிப்பித்த சாரதா பதிப்பகத்தாருக்கும்,
10 நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் தமிழர் சிற்பக் கலையில் அழகியல் கோட்பாடுகள் எனும் நூலை எழுதிய முனைவர் சு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் பதிப்பித்த தாழிபுத்தகக்கடை பதிப்பகத்தாருக்கும்,
11 அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி எனும் நூலை எழுதிய பேரா. முனைவர் சு. சண்முகசுந்தரம் அவர்களுக்கும் பதிப்பித்த காவ்யா பதிப்பகத்தாருக்கும்,
12 பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் வருவதும் போவதும் எனும் நூலை எழுதிய திரு. தி. அமிர்த கணேசன் அவர்களுக்கும் பதிப்பித்த ஒரு துளிக் கவிதை பதிப்பகத்தாருக்கும்,
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் இருளில் உதித்த சூரியன் பெரியார் எனும் நூலை எழுதிய திரு. குடந்தைபாலு அவர்களுக்கும் பதிப்பித்த ஜீவா பதிப்பகத்தாருக்கும்,
14 நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் ஆற்றங்கரை நாகரிகங்களில் தமிழ்ப் பண்பாடு எனும் நூலை எழுதிய முனைவர் சிவ. இளங்கோ அவர்களுக்கும் பதிப்பித்த புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பகத்தாருக்கும்,
15 கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் எனும் வகைப்பாட்டில் விண்வெளி மனிதர்கள் எனும் நூலை எழுதிய திரு.பெ. சசிக்குமார், திரு. பா. அரவிந்த் அவர்களுக்கும் பதிப்பித்த பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தாருக்கும்,
16 பொறியியல், தொழில் நுட்பவியல் எனும் வகைப்பாட்டில் இஸ்ரோவின் கதை எனும் நூலை எழுதிய முனைவர் திரு. ஹரிஹரசுதன் தங்கவேலு அவர்களுக்கும் பதிப்பித்த கிழக்கு பதிப்பகத்தாருக்கும்,
17 மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் எனும் வகைப்பாட்டில் சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு எனும் நூலை எழுதிய முனைவர் பெ. சுப்பிரமணியன் அவர்களுக்கும் பதிப்பித்த காவ்யா பதிப்பகத்தாருக்கும்,
18 சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 எனும் நூலை எழுதிய வடகரை செல்வராஜ் அவர்களுக்கும் பதிப்பித்த ரேவதி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
19 பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் இந்தியப் பொருளாதாரம் வரலாறும் காட்டும் வழிகள் எனும் நூலை எழுதிய திரு. ஆ. அறிவழகன் அவர்களுக்கும் பதிப்பித்த சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பகத்தாருக்கும்,
20 மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் தாய்-சேய்க்கான சத்தான உணவுகள் எனும் நூலை எழுதிய மரு. க. இராஜேந்திரன் அவர்களுக்கும் பதிப்பித்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் பதிப்பகத்தாருக்கும்,
21 தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் உணவுமொழி எனும் நூலை எழுதிய மரு. வி. விக்ரம்குமார் அவர்களுக்கும் பதிப்பித்த பேசா மொழி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
22 சமயம், ஆன்மிகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் வடஇந்திய புனிதப் பயணங்கள் எனும் நூலை எழுதிய மரு.நா. மோகன்தாஸ் அவர்களுக்கும் பதிப்பித்த இமாலயா பதிப்பகத்தாருக்கும்,
23 கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் நுண்ணுயிர் எதிரி கொரோனா ஓர் சமூக உளவியல் கண்ணோட்டம் எனும் நூலை எழுதிய
திரு. கு. நித்தியானந்தன் அவர்களுக்கும் பதிப்பித்த இனிய நந்தவனம் பதிப்பகத்தாருக்கும்,
24 வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் தமிழக கால்நடைகள் எனும் நூலை எழுதிய முனைவர் சு. உஷா, முனைவர்
ந. குமாரவேலு அவர்களுக்கும் பதிப்பித்த ராமையா பதிப்பகத்தாருக்கும்,
25 சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் இயற்கை எனும் நூலை எழுதிய மு. செகசோதி அவர்களுக்கும் பதிப்பித்த கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
26 கணினியியல் எனும் வகைப்பாட்டில் மொழியியலும் கணினி மொழியியலும் எனும் நூலை எழுதிய
திரு. ந.தெய்வசுந்தரம் அவர்களுக்கும் பதிப்பித்த அமுத நிலையம் பதிப்பகத்தாருக்கும்,
27 நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் கட்டபொம்மு கதைப் பாடல்: வாய்பாடும் அடிக்கருத்தும் எனும் நூலை எழுதிய முனைவர் ஆ. திரு நாகலிங்கம் அவர்களுக்கும் பதிப்பித்த சகசானந்தா பதிப்பகத்தாருக்கும்,
28 வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பயங்கரவாதி எனும் நூலை எழுதிய திரு. தீபச்செல்வன் அவர்களுக்கும் பதிப்பித்த டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
29 இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் அந்த நிருபரின் பேனா எனும் நூலை எழுதிய திரு. ஆர். நடராஜன் அவர்களுக்கும் பதிப்பித்த கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தாருக்கும்,
30 பிறசிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முடங்கலில் மலர்ந்த மலர்கள் எனும் நூலை எழுதிய பேரா. தி.இராசகோபாலன் அவர்களுக்கும் பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும்,
31 விளையாட்டு எனும் வகைப்பாட்டில் விளையாட்டு உலகின் பிதாமகன்கள் எனும் நூலை எழுதிய திருமதி உ. சந்திரா அவர்களுக்கும் பதிப்பித்த பிராம்ப்ட் பதிப்பகத்தாருக்கும்,
32 மகளிர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பெண்ணியல் அன்றும் இன்றும் எனும் நூலை எழுதிய பேரா. திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கும் பதிப்பித்த தமிழ்க் கோட்டம் பதிப்பகத்தாருக்கும்,
33 தமிழர் வாழ்வியல் எனும் வகைப்பாட்டில் சங்கத் தமிழும் தமிழர் சமயமும் எனும் நூலை எழுதிய புலவர் கு. இரவீந்திரன் அவர்களுக்கும் பதிப்பித்த காவ்யா பதிப்பகத்தாருக்கும்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் (14.02.2024) புதன் கிழமை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தமிழ் வளர்ச்சி இயக்குநர்

Add a Comment