POST: 2024-02-23T07:06:25+05:30

‘வானொலி அண்ணா

தெய்வத்திரு Dr.என்.சி.ஞானப்பிரகாசம் அவர்களின்

நினைவேந்தல் – படத்திறப்பு

‘எந்தையும் இலமே’

-புறநானூறு

பணிவின் வணக்கம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து 25.01.2024 அன்று எங்கள் தந்தையாரவர்கள் வானுறைந்தார்கள்.

இத்தாங்கவொண்ணாத் துயரத்தின் போது தாங்கள் அனைவரும் ஆறுதல் மொழி கொண்டு ஆதரித்தீர்கள்.

அதை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.

எங்கள் தந்தையாரவர்களின் எழுத்துப்பணியைத் தமிழ்நாடரசு தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக சிறப்பித்துள்ளது.

அன்னாரின் வானொலிப் பணியையும் வாய்மைமிகு எழுத்துப் பணியையும் போற்றும் வகையில் நினைவேந்தல் நிகழ்வு நிகழ்ச்சி நிரலின்படி நடத்தவுள்ளோம்.

தாங்கள் வருகை தந்து அன்னாரின் புகழ் பரவ வேண்டுகிறோம்.

நாள் : 24.02.2024, சனிக்கிழமை

நேரம்: மாலை 6 மணி

இடம்: 10A வளாகம்,
நான்காவது தளம், இராயப்பேட்டை, சென்னை-14.

என்றும் அவரின் நினைவில் வாழும்

முனைவர் திருமதி, தெ.ரேவதி ஞானப்பிரகாசம்

மகள்: முனைவர் திருமதி. ஞா.கற்பகம்

மகள்: திருமதி.ஞா.ஸ்ரீவித்யா

மகன்: திரு.ஞா.சபரி

கற்பக வித்யா பதிப்பகம்

மற்றும் உறவும் நட்பும்

நிகழ்ச்சி நிரல்

மாலை 6.00 -6.30 மணி :

திருமுறை விண்ணப்பம் மயிலை திரு. பா.சற்குருநாத ஓதுவாமூர்த்திகள்

வரவேற்புரை : திரு. தெ. சண்முகசுந்தரம்

தலைமை

: சிவாலயம் திரு.ஜெ.மோகன் அவர்கள் செயலாளர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம், சென்னை

முன்னிலை

: நடிகர் திரு. சிவகுமார் அவர்கள்

படத்திறப்பு

: முனைவர். திரு.ஒளவை அருள் அவர்கள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை

நினைவுரைகள்

திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்

நடிகர். திரு.டெல்லி கணேஷ்

நடிகர்.திரு.எஸ்.வி.சேகர்

திரு.வி.கே.டி.பாலன் – இயக்குநர், மதுரா டிராவல்ஸ்

கவிஞர், திரு.மருது அழகுராஜ், ஆசிரியர், நமது புரட்சி தொண்டன் நாளிதழ்

கலைமாமணி. திருமதி.வாசுகி கண்ணப்பன்

வழக்கறிஞர், திருமதி.அருள்மொழி

முனைவர்.திரு.வெ.நல்லதம்பி,

சூர்ப உதவி நிலைய இயக்குநர் (ப.தி), தூர்தர்ஷன் எழுத்தாளர்

திரு.ராணி மைந்தன்

முனைவர். திரு.சுந்தர ஆவுடையப்பன்,
நிகழ்ச்சி இயக்குநர் (ப.நி)

அகில இந்திய வானொலி திரு. சந்திரமூர்த்தி, உதவி இயக்குநர், (ப.நி),

தூர்தர்ஷன் திரு. அருணன், நிகழ்ச்சி தயாரிப்பாளர், அகில இந்திய வானொலி

கவிஞர். திரு. மருதபரணி

முனைவர். திரு.ஜெயசக்திவேல், சென்னைப் பல்கலைக்கழகம்

திரு. ராஜாராம் ராஜ்மோகன்,

சாந்தா பதிப்பகம் திரு. லக்ஷ்மண், தயாரிப்பாளர், சன் குழுமம்

நன்றியுரை : முனைவர் திருமதி.ஞா. கற்பகம்

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்”

-அருட்பா

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *