POST: 2024-03-02T08:45:43+05:30

முத்தமிழால் இணைவோம்!

செம்மொழியாய் செழிப்போம்!!

வாணியம்பாடி முத்தமிழ் மன்றம்

பாலாற்றங் கரைதனில் தமிழ்வெள்ளப் பெருவிழா

வாணிமா நகரினில் வண்ணமிகுத் திருவிழா

முத்தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா

தமிழகமே வியந்து நோக்கும் தீந்தமிழ்ச் சுடர்விழா!

நுண்மாண் நுழைபுலம்மிக்க நூலறிஞர் கவிவாணர் பொழிவுகளில் நனைய வருக!

முத்தமிழைப் பந்தியிடும் பந்தலுக்கு முந்திவந்து தமிழ் அமுதம் பருக வருக!

வாணியம்பாடி முத்தமிழ் மன்ற அறக்களைச் செயலமைப்பு

31 ஆம் ஆண்டு

முத்தமிழ் இலக்கியக் கூடல் விழா

அமரர் ம.கண்ணன் அரங்கம்

இடம்:செங்குந்தர் திருமண மண்டப வளாகம்,

அம்பூர்பேட்டை வாணியம்பாடி,

நாள் 02.03.2024 – சனி 03.03.2024 – ஞாயிறு

இளைய தமிழ் உழைப்பில் – அழைப்பில் என்றென்றும்…

வே.வெங்கடேசன் தலைவர்
நா.பிரகாசம் செயலாளர்
மரு. ப.விசாகப்பெருமாள் நெறியாளர் மு.நாகேந்திரகுமார், மு.ப.சண்முகம்
இணைச் செயலாளர்கள்

பரிசளிப்பு பாராட்டு அரங்கம்

02.03.2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி

தலைமை ஏற்று கவிக்கோ கவிதைப்பரிசு- பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டுரை

திருமிகு தெ.பாஸ்கரபாண்டியன்
இ. ஆ.ப, மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூர்

தமிழறிஞர் கா.அ.ச.ரகுநாயகன் அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்குரிய விருது வழங்கி பாராட்டுரை

முனைவர் ஔவை ந.அருள் இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு

‘தமிழ்க் குரிசில்’ விருது பெறுபவர்:
முத்தமிழ் அரசி பேரா. முனைவர் சரசுவதி இராமநாதன்
மேனாள் முதல்வர், சீதாலட்சுமி இராமசாமி மகளிர் கல்லூரி, பள்ளத்தூர்

‘சேவைக் குரிசில்’ விருது பெறுபவர்: திருமிகு ரொட்டேரியன் வ. புரட்சி சமூக சேவகர் மற்றும் ஆ.கா.க. முகவர், திருப்பத்தூர்.

முன்னிலை மற்றும் நிகழ்ச்சிக் கொடையாளர்கள்

பேரா முனைவர் ப.மகாலிங்கம்
செல்லம்பொழி ப.கோபாலகிருஷ்ணன்
கா.அ.ச ரகுநாயகன் அறக்கட்டளை திருப்பத்தூர்

திரு குரோம்நசீர்
தொழிலதிபர்
வாணியம்பாடி

திருமதி விஜயலட்சுமி சம்பத்குமார்
மேனாள் நாட்றம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர், இராமநாயக்கன்பேட்டை.

திரு. அ.அயாஸ்பாஷா
செயலாளர்,
கவிக்கோ அறக்கட்டளை, சென்னை

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்த இடலாம் என்று எண்ணியிருப்பார் பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! – பாரதியார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *