தினமணி
திருக்கோவிலூர் கபிலர் நினைவுத் தூணை பார்வையிட்ட
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் கபிலர் நினைவுத் தூணை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் (04-02-2024) அன்று நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் கபிலர் குன்று அருகே கபிலர் கோட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது கபிலர் நினைவுத்தூண் சிறிய அளவில் கட்டப்பட்டது. அருங்காட்சியகத்துடன் கூடிய கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, நினைவுத் துாண் திறக்கப்படாமலேயே இருந்தது.
இந்த நினைவுத்தூணை வரும் 7ம் தேதி திறப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது உடன் நகர் மன்ற தலைவர் டி.என்.முருகன், கோவல் தமிழ்ச்சங்கத் தலைவர் சிங்கார உதியன், உதவி இயக்குநர் சித்ரா, நகர் மன்ற உறுப்பினர்கள் சி.ஆர். சம்பத், ஐ.ஆர்.கோவிந்தராஜன், கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், கவிஞர்கள் மு.கலியபெருமாள், கலைச்சித்தன் உள்ளனர்.

Add a Comment