செய்தித்தாள் கட்டுரைகள் – டாக்டர் தாரா நடராஜன்

பள்ளிச் சிறுவர்க்கு மருத்துவ நலப்பணி !

செய்தித்தாள் கட்டுரைகள்|

பள்ளிச் சிறுவர்க்கு மருத்துவ நலப்பணி !
டாக்டர் தாரா நடராசன், எம்.டி. டி.சி. எச்.

பாரத நாட்டு மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு விகிதத்தைப் பள்ளிச் சிறர் பெறுகிறார்கள். பள்ளிச் சிறுவர்கள் உடல் வளத்தையும் நலத்தையும் காக்கும் மகத்தான பொறுப்பு நம்மிடம் உள்ளது. மருத்துவ அறிவுரைகளை இளமையிலேயே சிறுவர்களுக்கு நாம் கற்றுத்தந்தால் அவர்கள் அவைகளைப் பின்பற்றிச் சிறப்பாக நடப்பார்கள்.

பள்ளிச் சிறுவர்களின் நலத்துக்காக * சிறுவர் மருத்துவ நலப்பணி * என்றழைக்கப்படும் திட்டம் இந்த பிரா பேண்டின் தொடக்கத்தில்தான் அரும்பியது. போதிய வாய்ப்புக்களும் வசதிகளும் இல்லாததால் இத்திட்டத்தில் நாம் பெரிய முன்னேற்றத்தை இன்றும் அடைய முடியவில்லை. உடல் நலனைச் சீராகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவேண்டிய அறிவுரைகளை வழங்குவதோடு, பொதுவாகக் காணப்படும் நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றி வருகி ேரும். நோய்த் தடுப்புக்கான சுகாதார சூழ்நிலையை அமைப்பதோடு, சுத்தமாகவும் உடல் வளத்தோடும் தங்களைக் காத்துக் கொள்வதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாகும். பள்ளிச் சிறுவர்களின் உடல் நலனைக் காப்பதில் பெற்றோர்களுக்குப் பங்கிருப்பதுபோல ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உள்ளது.

சென்னை மாநகரத்தில் பள்ளிச் சிறுவர் மருத்துவச் சோதனைகள் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அரசாங்க மருத்துவமனைகளில் பள்ளிச் சிறுவர் நலப் பிரிவு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் மருத்துவப் பராமரிப்புப் பணியை மாநகராட்சியும் தனியாக நடத்துகிறது. அரிமா சங்கம். சுழற்கழகம் போன்ற சமுகநல நிறுவனங்களும் மருத்துவக் குழுவினரைக் கொண்டு பிறருக்கான நலப் பணிகளைச் செய்து வருகின்றன.

பள்ளிச் சிறுவர்கள் அனைவரும் முறையாக மருத்துவச் சோதனை செய்யப்பட்டு, ஒவ்வொருவரின் எடை, உயரம், மார்பகம், மண்டைச் சுற்றளவு, மேல் கை யின் நடுச் சுற்றளவு முதலியனவும் ஓர் அட்டையில் குறிக்கப்படுவதோடு, கிருமி, பூச்சிகளால் நோய்கள் பற்றியுள்ளனவா என்றும் சோதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொருவரின் மருத்துவ நிலையும் பதிவு செய்யப்பட்டு, அவர்களைப் பீடிக்கிற நோய் விவரங்களும் சிகிச்சை முறைகளும் அதில் குறிக்கப்பட்டு, குறிப்புக்கேற்ப மருத்துவச் – சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன .

நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 100க்கு 72 பேர்தான் சிறுவர்களாக வளர்ந்து ஐந்து வயதுப் பருவத்தை அடைந்து பள்ளி செல்லும் நிலைக்கு வருகிறார்கள். மிகுந்த இந்தச் சிறுவர்களைப் பேணிக்காப்பதும், அவர்களுக்கு உரிய சுகாதாரச் குழ்நிலையைப் படைப்பதும் நம் கையில்தான் உள்ளது. எனவே எதிர்காலக் குடிமக்களாகிய இந்தச் சிறு பிள் ளைக ளை வளமுடையவர் களாக வளர்த்து உருவாக்குவது நமது கடமையாகும். பொதுவாகச் சிறுவரிடத்தில் காணப்படும் சில நேரங்களைப் பற்றிய விவரங்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும், பெரும்பாலும் போதுமான தக்க ஊட்டமான உலாவு இல்லாமையாலே பிள்ளைகள் பலவீனமாகவும் நோயாளிகளாகவும் ஆகிறார்கள் என்று கூறலாம். நோய் அணுக்களால் பாதிக்கப்படுபவர்கள் குறைந்த அளவுதான். சமூகப் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள வீட்டுப் பிள்ளைகள் வட்டமான உணவுப் பற்றாக்குறையால் பெரிதும் இளைத்திருப்பதோடு சோகையும் சோர்வும் உடையவர்களாக காணப்படுகின்றனர். இந்த நாட்டுக்கு மருந்து என்பதேகூட போதிய உணர்வு தான் என்றுகூடக் குறிப்பிடலாம். நாம் அவசியமானவை என்று தெரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பதோடு எளிமையாகவும் மலிவாகவும் கிடைக்கும் காய்கறிகளில், பண்டங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்தைப் பற்றிப் பெற்றோர்கள் பலர்க்குத் தெரிவதில்லை. அவைகளைப் பற்றிப் பெற்றோர்களுக்கு நாம் விளக்கிக் கூறவேண்டும். தேவை யானும் சில உணவுமுறைகளே ஊட்டச்சத்து நிறைந்ததாக நாமே செய்துகாட்டிச் சிறுவர்களுக்கு வழங்குவது நல்லதாகும். மதிய உணவுத் திட்டங்கள் சில பள்ளிகளில் இந்த அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றதா என்பதையும் நாம் ஆராய வேண்டும். ஊட்ட உணவுத் திட்டமும் சிறுவர் மருத்துவ நலத்திட்டமும் சேர்ந்து இணைந்து செயல்படவேண்டும். அப்போதுதான் சிறுவர்களின் உடல் சீர்கு லைவுக்கும், போதிய உணவு இல்லாமைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை நாம் எளிதில் தெரிந்துகொள்ளமுடியும்.

பொதுவாகச் சிறுவர்களிடத்தில் வைடமின் ஏ, பி, உயிர்ச் சத்துக்களின் பற்றாக்குறை உள்ளது, நுண்ணிய பூச்சிகளால் ஏற்படும் நோய்க் குறிகளும் பரவலாக உள்ளன. குறைவான வருமானமுடைய வர்களின் குடும்பத்தில் நிலவும் பற்றாக்குறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி கிட்டாமை, கழிவுப் பொருட்களை அகற்றும் சாதனங்களின் குறைபாடு. அடிப்படை சுகாதார நெறிகளைத் தெரிந்துகொள்ளாமை முதலியவைகள் நல கேட்டுக்குக் காரணங்களாகும். விரல் நகங்களை வெட்டிக்கொள்ளுதல், கைகால்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், செருப்புக்களை அணிந்து வெளியில் நடத்தல் முதலிய எளிய அப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமற் போவதும் நோய்க்கு இடம் தந்துவிடுகின்றன.
காது, மூக்கு, தொண்டை நோய்களும் பொதுவாகக் காணப்படுகின்றன. இருமல், சளி, தொண்டை அடைப்பு, உள்நாக்கு சதை வளருதல் (டான்சில்ஸ்) முதலிய நோய்களும் உள்ளன.

குறுகலான வகுப்பறைகளில் காற்றோட்டமில்லாததாடு. அதிகமானவர்கள் நெருக்கமாகக் கூடியிருப்பதெல்லாம் சுகாதாரத்துக்கு தீங்கு தருவதாகும். சொறி சிரங்கு படை முதலிய சரும நோய்களும் பொதுவாகக் காண்கிறோம். படிக்கும்போதும், விளையாடும்போதும் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகுவதாலும், துப்புரவில்லாமல் இருப்பதாலும், தூய்மைக் குறைவை ஏற்படுத்திக் கொள்வதாலும், இச்சரும நோய்கள் கட்டுக்கடங்காமல் தொற்றி பரவலாகப் படர்ந்துவிடுகின்றன.

பற்கள் சம்பந்தமான நோய்களும் பொதுவானதே. சொத்தை பற்களாலும், பல்வலியாலும் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறையாவது எல்லாப் பள்ளிச் சிறுவர்களையும் பல் மருத்துவரிடம் காட்டிச் சோதனை செய்துகொள்ள வேண்டும். பல் மருத்துவரின் அறிவுரைகளைக் கேட்டு நடக்க முயலலாம். ஒவ்வொரு பள்ளியிலும் அடிப்படைச் சுகாதார நெறிகளைப் போதிப்பதோடு, ஒரு சுகாதார அலுவல் லரைப் பாவியாற்றச் செய்வதும்கூடப் பொருத்தமாகும்.
காச நோய்க் கிருமிகளால் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக அவ்வப்போது சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த நோயின் தடுப்புச் சக்தியாக பி. சி. 3. ஊதிய மருந்தும் போடப்படுகிறது. நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட நோய்களில் கால் கை வலிப்பும், இளம்பிள்ளைவாத நோய்க்கு ஆளாகி சிலர் ஊனமுற்றும் உள்ளனர். பிறவியிலே ஏற்பட்ட இருதயநோய்க் கோளாறுகளும், வாதத்தால் இருதயம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சிலரும் உண்டு. அரசாங்கமும் மருத்துவத் துறையும் அரும்பாடுபட்டாலும்கூட, ஆறாம் ஏழாம் வகுப்புகளில் படிக்கும் வளர்ந்த சிறுவர்களில் சிலர் அம்மை குத்திக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள் என்பதையும் கூறவேண்டியிருக்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *