POST: 2024-04-05T06:51:43+05:30

_உரைவேந்தர் *
அவ்வை சு.துரைசாமி அவர்களின் நினைவுநாள் : ஏப்பிரல் 3*_ ( 3 4 1981 )

_ஆரியம் *உ.வே.சா.* அவர்களை அனுப்பி எதிர்த்தது._

_திராவிடம் *ஏ.டி.பன்னீர்ச்செல்வம்* அவர்களை அனுப்பிப் பாதுகாத்தது._
………………………………………………………..
_*ஐங்குறுநூறு* நூலுக்கு உரை எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார் *அவ்வை சு.துரைசாமி* அவர்கள்._

_செய்தி அறிந்த உ .வே.சா. அவர்கள், பதிப்புரிமை அடிப்படையில் வழக்கு தொடர்ந்து , அவ்வை துரைசாமி அவர்களின் நூல் வராமல் தடுக்க முயன்றார்._

_தடை முயற்சியை அறிந்து வருந்திய உரைவேந்தர் அவ்வை அவர்கள், இதை முறியடிக்க ஏற்றவர் திராவிடர் இயக்கத் தளபதி திரு ஏ.டி.பன்னீர்செல்வமே என அறிந்து , தந்தை பெரியார் வழியாக அவரை அணுகினார்._

_” உ.வே.சாமிநாதையர் வழக்கு போட்டால் எனக்காக வாதாட வேண்டும் “என்று அவ்வை கேட்டுக்கொண்டார் ; ஏ.டி.பன்னீர்ச்செல்வமும் இசைந்தார்._

_அவ்வை சு துரைசாமி அவர்களுக்கு வாதாட ஏ.டி.பன்னீர்ச்செல்வம் வருகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்ப் பரவியது.

செய்தி அறிந்த உ.வே.சா. திகைத்துப்போனார்.

பன்னீர்ச்செல்வம் என்ற பெயரே பலரைக் கலங்க வைத்தது._

_*வழக்கு தொடரும் முயற்சியை உ.வே.சா. உடனடியாய்க் கைவிட்டார்.*

வழக்கு மன்றம் செல்லாமல் காத்த திராவிடர் இயக்கமும் தந்தை பெரியாரும் ஏ.டி.பன்னீர்ச்செல்வமும் அவ்வை சு.துரைசாமி அவர்களின் நன்றிக்கு உரியோராயினர்_.

_பழைய பதிப்பில் 207பக்கங்களே உடைய ஐங்குறுநூற்றுக்கு 1003 பக்கங்களில் நுட்பமான உரை வரைந்திருந்தார் உரைவேந்தர் அவ்வை அவர்கள்.

இப்போதும் அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடாக அடக்கவிலைக்கு அவ்வை உரையுடன் ஐங்குறுநூறு கிடைக்கின்றது._

_திராவிடர் இயக்கத்தின் மேல் கொண்ட பேரீடுபாடு காரணமாகத் தந்தை பெரியாரின் பெரிய ஓவியத்தைக் கண்ணாடிச் சட்டமிட்டு வீட்டில் மாட்டி வைத்திருந்தவர் *சைவப்பழமாகிய உரைவேந்தர் அவ்வை சு.துரைசாமி* அவர்கள்._

_தந்தை பெரியார் தலைமையேற்று நடத்திய முதலாவது மொழிப்போரான 1938 இந்தி எதிர்ப்புப்போரில் கருத்துப் பரப்புரையாளராகவும் அவ்வை திகழ்ந்தார்._

_”தமிழர் எழுச்சிக்குப் பாடுபடும் *’தமிழின முனிவர் “*
எனப் பெரியாரை இறுதிக்காலம் வரை பாராட்டிக்கொண்டிருந்தவர் அவ்வை சு.துரைசாமி அவர்கள்_.

_*தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு !*_

_*தமிழன் தாழ்ந்தால் முட்டுக்கொடு!*_

_தாம் உரைத்த இந்த வாசகத்தைத் தமது வாழ்க்கை நெறியாக்கி வாழ்ந்து காட்டியவர் *தந்தை பெரியார்*._

ஆரியத்தால் வேய்ந்த
அழிவுரைகள் மாய்ந்தொழிய
வீரியத்தால் செந்தமிழை
வென்றெடுத்தார் –

சீரியத்தால்
_*அவ்வை துரைசாமி*_

ஆய்ந்து பல நூலுரைகள்
செவ்வியவாய் நேரியவாய்ச்
செய்து.

– _பாவலரேறு_
_பெருஞ்சித்திரனார்_

நினைவு போற்றும் ,

_சூலூர் பாவேந்தர் பேரவை_

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *