அழியாத மை !
நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளிக்கு இன்று வெள்ளிக்கிழமை 19.4.24 மாலை 3.30 மணிக்கு வாழ்வரசியுடன் வாக்களிக்கச் சென்றேன்.
வள்ளியம்மாள் பள்ளிக்கு என்னை அம்மா கைப்பிடித்து அழைத்துச் சேர்த்ததும் அங்கே 2,3,4,5 ஆம் வகுப்புக்கள் படித்ததும் என் நினைவில் படர்கிறது.
வகுப்புக்குச் செல்வது போல வாக்களிக்கச் செல்வதும் மக்களாட்சியின் பொலிவுக்கு வலுவூட்டும்.
ஒரு வகுப்பின் பாடம் போலத்தான் !

Add a Comment