நூல் வாயில்
மதுரையில் நடைபெற்ற
தமிழ்க் கவிஞர் திருநாள் அன்று (29.4.24)
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்
(என் சி பி எச்) தாங்களாகவே முன்வந்து உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் பாவேந்தர் நூல்களை அணி செய்து அரங்கம் அமைத்தது தனிச்சிறப்பாக அமைந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாவேந்தரின் அனைத்து நூல்களைக் கண்டுப் பாராட்டினார்.
வருகை புரிந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் நாள் முழுவதும் பாவேந்தரின் நூல்களை வாங்கிச்சென்றனர் என்று பெருமிதமாக புத்தக நிறுவனத்தினர் சொன்ன பொழுது
நூலைப்படி முறைப்படி நூலைப் படி என்ற வரி நினைவிற்கு வந்தது மட்டுமின்றி பாவேந்தரைப்படி என்ற புதிய வரி முகிழ்த்தது…

Add a Comment