இந்து தமிழ் திசை – 30 3 2024
நூல்வெளி
பக்கம் எண் : 10
ஒளவையின் சிந்தனைப் புதையல்
ஒளவை அருள்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 96000 64311
சிந்தனையின் எழுத்தோவியம்
மூலத் தமிழறிஞர் ஒளவை நடராசன், தனது 85 ஆவது அகவையிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த சிறப்புக்குரியவர்.
ஆங்கில மொழியைச் சேர்த்தெழுதுவதைப் போலவே , தமிழிலும் சேர்த்தெழுதும் இயல்பினர்.
தட்டச்சு, கணினி ஆகியவற்றின் உதவியை நாடாமல், கடைசிக் கடிதத்தையும் தனது கையெழுத்திலேயே எழுதியவர்.
ஒளவை நடராசன் கைப்பட எழுதிய நூல்களுக்கான ஆய்வுரை, வாழ்த்துரை, கடிதங்கள், நினைவஞ்சலிக் குறிப்புகள், நூல் குறிப்புகள் என அனைத்தையும் பொக்கிஷம்போல் தொகுத்து வைத்திருந்த அவரது புதல்வர் ஔவை அருள்,
180 கைப்பிரதிகளையும் அப்படியே ஆவணமாக்கியுள்ளார்.
ஒரு பக்கம் கையெழுத்துப் படி, மறுபக்கம் எழுத்துருவில் எனப் பார்ப்பதற்கு, படிப்பதற்கு இலகுவாகவும் நூலைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
நூல் முழுக்கப் பொருத்தமான படங்களை இணைத்திருக்கும் பொன்னேரி பிரதாப்பின் பணியும் சிறப்பானது.
பிறமொழிக் கலப்பில்லாமல் செறிவான தமிழில் எழுதியிருக்கும் ஒவ்வொரு சிறுகுறிப்பும் இன்றைய தலைமுறையினருக்குத் தமிழின் சிறப்பினை உணர்த்தும் எழுத்தோவியமாக அமைந்துள்ளது.
– மு.முருகேஷ்

Add a Comment