POST: 2024-06-04T06:45:03+05:30

ஆயிரம் வாழ்த்துகள்
பாயிரமாகட்டும்.. காவிய
நேர்த்தியில் கனியட்டும்
நாள்கள்…

கடந்த 25 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றிய திருமதி சண்முக வடிவு என்கிற சண்பக வடிவு அவர்கள் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி

அவரின்
இனிய கணவர், நாடறிந்த கவிஞர், திரைப்பட
கதையாசிரியர், கலைஞானி கமலஹாசன் அவர்களுடன் செயலாற்றிய பணிச்செம்மல், வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் நடத்திய தாய் இதழின் துணையாசிரியர், என் அப்பாவின் நண்பர் என்ற பல சிறகுகளைக் கொண்ட வானம்பாடிக் கவிஞர் ராசி அழகப்பன் மற்றும் அவரின் செல்வ மகன் திரு ராஜாவின் குடும்பத்தினர் பெருமிதமாக நடத்திய
விடை நல்கு விழாவில்

ஓவியக் கவிஞர்
அமுதபாரதி,
நயத்தகு நடிப்புச் செம்மல் டெல்லி கணேஷ்,
பதிப்புச் செம்மல் லேனா தமிழ்வாணன்,
நக்கீரன் இதழின் ஆசிரியர் திரு கோபால்,
உதயம் இதழின் ஆசிரியர் திரு ராம், எழுத்தாளர் மோகன் தாஸ் ஆகியோர் முன்னிலையில் 2.6.24 ஞாயிற்றுக்கிழமையன்று உரையாற்றி மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *