POST: 2024-06-09T09:22:10+05:30

மக்கள் குரல் – 4 6 2024
பக்கம் எண் : 7

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம்

ஒளவை நடராஜன் எழுதிய எம் ஜி ஆர் புத்தகம் :

1000 புத்தகங்களை வாங்கினார் எம் ஜி ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி தலைவர் குமார் ராஜேந்திரன்

சென்னை, ஜூன் 4-

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு வழங்கிய 1.00 கோடி வைப்பு நிதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை ஏற்படுத்தப்பட்டு இதன்மூலம் புரட்சித்தலைவர் எம். ஜி.ஆரைப் பற்றி பல்வேறு ஆய்வு நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்க் கூறும் நல்லுலகின் நாவேந்தர், தாமரைத்திரு ( பத்மஸ்ரீ ) முனைவர் ஒளவை நடராசன் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த புரட்சித் தலைவரின் பல்வேறு விதமான பரிமாணங்களைத் தக்க நிகழ்வுகளோடும், சான்றுகளோடும் தமது பசுமையான நினைவுகளை சிந்திக்கவும், சிலிர்க்கவுமான செய்திகளை செவ்விய மக்கள் பதிவுகளாக்கினார்.

எம்.ஜி.ஆரிடம் குடிகொண்டிருந்த அரிய பண்பு நலன்களை புலப்படுத்துவனவாகத் திகழ்வதோடு, யாவரும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய உயரிய விழுமியங்களாகவும் விளங்கி இளைய தலைமுறையினரின் உள்ளுணர்வை இலக்கிய நெஞ்சங்களில் ஆர்வலர்களின் நெஞ்சங்களை உருவாக்கும் நோக்கில் தினசரி நாளிதழில் தொடராக வெளியிடப்பெற்ற கட்டுரையை தொகுத்தார்.

அதை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை வழி ஓராண்டுக்கு முன்பு ” மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் ” நூலாக வெளியிடப்பட்டது.

இந்நூலை வரி விடாமல் படித்த டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் குமார் ராஜேந்திரன் ஒரே தவணையில் நூலின் 100 படிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ( கூடுதல் இயக்குநர் பொறுப்பு ) கோபிநாத் ஸ்டாலின் முன்னிலையில் 31,500 காசோலை வழங்கிப் பெற்றுக் கொண்டார்.

உடன் ஆய்விருக்கை அலுவலர் பொன்னேரி கு.பிரதாப் உள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *