POST: 2024-06-13T09:02:11+05:30

புதையல் கிடைத்தது ….

அழகுதமிழில் எப்படி ஒருவரைப் பாராட்ட வேண்டும் , எந்த சொற்களை எங்கு அதில் எழுத வேண்டும் என்ற சொற்களஞ்சியம் இந்த நூல்
ஒளவையின் சிந்தனைப்புதையல்
என்றால் மிகையில்லை .

ஒளவையாருடன் நான் ஒருநாள் அவர்களை உடலைப் பரிசோதிக்கச் சென்றபோது அவருடைய இரத்த அளவு குளுக்கோஸ் 400 என்று இருந்தது .

ஆகையால் தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி ஏனைய மருந்துகள் அளித்துவிட்டு வந்து விட்டேன் .

பிறகு சாயந்தரம் நான் தொடர்வண்டி நிலையத்துக்குப் போக வேண்டியிருந்த பொழுது ,அவர் அங்கு நின்றுகொண்டு ஒரு இருபது பேர் நடுவில் உரையாற்றிக் கொண்டிருந்தார் .

என்ன ஐயா உங்களுக்கு 400 இருக்குதே , நீங்கள் ஓய்வெடுத்தால் நலமாயிருக்கும் என்றேன் .

நீங்க கொடுத்த மருந்தோடு இந்த மருந்து தான் எனக்கு அதிகமாக வேலை செய்யும் என்றார் .

பயந்த நிலையில் போனவனுக்கு அது எனக்கு ஒரு தெம்பு கொடுப்பதாக இருந்தது .

அது போன்று அவர்கள் தமிழை நேசித்தவர்கள் …

அவர்கள் என்றும் பேசப்படுவார் .

மருத்துவர் சு நரேந்திரன்
தஞ்சை

20.5.24

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *