கருணீகர் நல்வாழ்வு
ஜுன் 2024
தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!
ஒளவை அருள்
மதம் நமக்கு பெரிதாக இருந்தபோதுகூட இவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்று கேட்டார்கள்.
வங்கம்தான் அவர்களை இணைத்தது. ‘
வங்க மொழிதான் எங்கள் ஆட்சி மொழி; எங்கள் பேச்சு மொழி வங்கம் தான் என்றார்கள்,’
கையில் வைத்திருக்கும் வேத புத்தகத்தின் மொழி வேறாக இருந்தாலும் வங்கம் தான் எங்கள் தாய்மொழி’ என்றார்கள்.
அப்படி இருந்த போது இளைஞர்கள் தான் இதை பெரிதாகப் பேசினார்கள்.
இளைஞர்களில் நால்வரை வங்கத்தில் சுட்டுவிட்டார்கள்.
அவர்கள் சுடப்பட்டதற்கு ஒரு பெரிய நினைவுச் சின்னம் டாக்கா நகரத்தில் அமைத்திருக்கிறார்கள்.
இப்படி இவர்கள் செய்த எழுச்சியாலும், புரட்சியாலும் ஐக்கிய நாடுகள் அவை, ‘எப்படி இந்த நாடு வந்தது, மொழியால்தானே வந்தது?
எனவே, அவர்கள் இறந்த அந்த நாளை நினைவுபடுத்தி, தாய்மொழி நாள் என்று அறிவிக்கலாம்’ என்று முடிவெடுத்தது.
வாழ்கிற இடத்திலேயே பல்லாண்டுகள் இருந்தால், வாழ்கிற சூழல் எப்படி இருக்கிறதோ, அச்சூழலுக்கு ஏற்றபடி நம் மொழி, அமைந்துவிடுகிறது.
இந்த மொழி எங்கே மூளையில் அமைகிறது?
யார் இந்த குழந்தைக்கு அதிகமான ஒலிக்குறிப்புகளை அறிவிக்கின்றார்கள் என்றால் காது தான்.
மூன்றாவது மாதத்திலேயே குழந்தைக்குக் காது கேட்கத் தொடங்குகிறது.
கருப்பையிலும் கூட ஒலியைக் கேட்கிற பழக்கம் குழந்தைக்கு உண்டாம்.
அதனால்தான் திருவள்ளுவர், ‘செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை’ என்றார். ‘
எங்கள் தந்தை மொழி தான் எங்களுக்கு பெருமை தருகிறது’ என்று ஜெர்மானியர்கள் சொல்கிறார்கள்.
ஜெர்மானியர்கள் தந்தை மொழி’ என்கிறார்கள்: நாம் ‘தாய்மொழி’ என்கிறோம்.
நமக்கு வேண்டிய பொருளை, நலந்தருகிற பொருளை ‘தாயே’ என்று போற்றுவதால் அது தாய்மொழியாகிறது.
எனவே, தாய்மொழித் திருநாள் தாய் உணர்வு போல, தாயை காப்பதுபோல, குடும்பத்தை காப்பதுபோல, சூழலைக் என்று எண்ணுகிறபோது, நமக்கொரு பெருமிதம், உலக மொழிகளுக்கெல்லாம் எங்கள் மொழி தான் தாய் என்று சொல்லிக்கொள்வதில்.
தென்னமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தென்கோடியில் அந்நாட்டின் தொன் மக்களில் ஒரு குழுவினர் பேசிவந்த, ‘யாகன்’ என்னும் மொழியைப் பேசி வந்த, கடைசி நபர் (பெண்மணி), கிறித்தீனா கால்தெரோன் என்பார் தனது 93-ஆவது வயதில் சென்ற ஆண்டு பிப்பிரவரி 16 அன்று இறந்து போனார்.
அவருடன் அவர் பேசிய மொழியும் முற்றாக அழிந்து போனது.
நல்ல செயலாக அவர் பேசியதிலிருந்து அவருடய மகள் இலிதியா கோன்சாலேசு கால்தெரோன் சொற்களைத் தொகுத்து ஓர் அகராதி உருவாக்கி வந்துள்ளார்.
யாகன் மக்களின் சில பழக்க வழக்கங்கள் இன்றும் தொடர்கின்றது என்றாலும், அவர்களின் மொழி அழிந்துவிட்டது.
மீட்டுருவாக்கலாம், எனினும் அது அவ்வளவு எளிதன்று, அப்பகுதி மக்கள் முதியவர்களை பாட்டி / ஆச்சி / ஆயா / அம்மாயி என்னும் பொருளில் எசுப்பானிய மொழிச்சொல்லான ‘அபுயெலா’ கால்தெரோன் என்றழைப்பர்.
உலகில் மக்கள் தாம் பேசும் தாய் மொழியைச் சார்ந்தே குழுக்களாக அணிசேர்கிறார்கள்.
அவ்வகையில் நம் தாய்மொழியான தமிழ்தான் நமக்குத் தமிழர்கள் என்ற அடையாளத்தைத் தந்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் நம் தமிழ் மொழிக்கு இருக்கின்றது போல இலக்கண நூல் வளமையும் இலக்கிய நூல்களின் செழுமையும் ஏனைய மொழிகளுக்கு வாய்க்கவில்லை என்பதை யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்ற பாடல் வாயிலாகத் தேசியக் கவி பாரதியாரே வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை, ‘தாய்நாடு’ என்றும் மொழியை ‘தாய்மொழி’ என்றும் அழைப்பது வழக்கமாகும்.
‘தமிழுக்கு அமுதென்று பேர்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளும் நினைக்கத்தக்கன.
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ்’ என்ற நெறிக்கிணங்கத் தமிழ் நாடு அரசு காலத்தாலும் கருத்தாலும் தொன்மை வாய்ந்த தாய்மொழியை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் முன்னணியில் நிற்கிறது.
மொழி என்பது வரலாற்று சான்றாக விளங்குவதால், தாய்மொழி காக்க பேச்சு மொழியாக மட்டுமின்றி, எழுத்தறிந்து ஏனைய இலக்கியமறிந்து, தொன்மையில் நின்று, பண்பாட்டுடன் தலைநிமிர்ந்து வாழ போற்றுவோம்!
எனவே, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த மொழியாம் ஒப்பிலாத நம் தாய்மொழியை ஏற்றிப்
போற்ற வேண்டும் என்று நாம் உறுதியேற்போம்.
முற்றும்.

Add a Comment