செய்தி வெளியீடு எண்: 830
21.06.2024
நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 06.08.2024 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 08.08.2024 அன்றும் கல்லூரி மாணவர்களிடையே, தென் சென்னையில் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும், வட சென்னையில் டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியிலும். மத்திய சென்னையில் மாநிலக் கல்லூரி என 3 நிலைகளில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
போட்டிக்கான தலைப்புகள்
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டி
1. இந்திய ரிசர்வ் வங்கியும் அம்பேத்கரும்
2. பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு
3. ரூபாயும் அம்பேத்கரும்
4. உணவு பற்றி அம்பேத்கரின் பார்வை
5. தொழிலாளர் சட்டமும் அம்பேத்கரும்
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப்போட்டி
1. கலைஞரும் திரை வசனமும்
2. பெண்களுக்கு உரிமை
3. கலைஞரின் எழுத்துப் பணி
4. சட்டமன்ற உறுப்பினர் கலைஞர்
5. முதலமைச்சர் கலைஞர்
வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment