POST: 2024-07-06T07:51:45+05:30

செய்தி வெளியீடு எண்: 901

நாள்: 02.07.2024

செய்தி வெளியீடு

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது.

அவ்வகையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும். 2024-ஆம் ஆண்டுக்கான 72 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வேண்டப்படுகின்றன.

விருதுகளின் அணிவரிசை:-

விருது – நபர் – பரிசு விவரம்

1.திருவள்ளுவர் விருது (2025)

ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை

2024ஆம் ஆண்டிற்கான விருதுகள்

2. மகாகவி பாரதியார் விருது ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை

3. பாவேந்தர் பாரதிதாசன் விருது ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை

4. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை

5. கி. ஆ. பெ. விசுவநாதம் விருது ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை

6. பெருந்தலைவர் காமராசர் விருது ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை

7. பேரறிஞர் அண்ணா விருது ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை

8. இலக்கிய மாமணி விருது ரூ.5.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை,பொன்னாடை

9. தமிழ்த்தாய் விருது. ரூ. 5.00 இலட்சம், கேடயம், தகுதியுரை

10. கபிலர் விருது ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம்,
தகுதியுரை, பொன்னாடை

11. உ.வே.சா. விருது.

12. கம்பன் விருது,

13. சொல்லின் செல்வர் விருது

14. உமறுப் புலவர் விருது,

15. ஜி.யு. போப் விருது.

16. இளங்கோவடிகள் விருது

17. அம்மா இலக்கிய விருது,

18. மொழி பெயர்ப்பாளர் விருது,

19. ‘சிந்தனைச்சிற்பி’ சிங்காரவேலர் விருது.

20. அயோத்திதாசப் பண்டிதர் விருது.

21. மறைமலையடிகளார் விருது.

22. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது,

23. காரைக்கால் அம்மையார் விருது.

24. தமிழர் தந்தை சி.பா. திங்களிதழ் விருது. ஆதித்தனார்
ரூ.2.00 இலட்சம். கேடயம், தகுதியுரை, பொன்னாடை

25. தமிழ்ச் செம்மல் விருது 38 மாவட்டந்தோறும் ஒருவருக்கு தலா ரூ. 25,000/- மற்றும் தகுதியுரை

மொத்த விருதுகள் 73

மாவட்டந்தோறும் ஒருவருக்கு தலா ரூ. 25,000/- மற்றும் தகுதியுரை

அறிஞர் பெருமக்கள் www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in இணைய தளங்களின் வழியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி
இயக்ககம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 15.08.2024 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம்.

தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது.

தமிழ்ச் செம்மல் விருதிற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044- 28190412, 044 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (15.08.2024) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை அறிஞர் பெருமக்கள் நினைவிற் கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *