சேக்கிழார் ஆராய்ச்சி மையம்
சென்னை
ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்
இணைந்து நடத்தும்
32ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ்
2024
25, 26, 27 & 28
வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு
ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் எண். 24/13ஏ, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு திருவான்மியூர், (திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்) 600 041.
பெரியபுராணம்
தொடர்பு முகவரி சேக்கிழார் ஆராய்ச்சி மையம்
எண். 22/16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-600 004
தொலைபேசி 044-24997785 feira: Sekkizharresearchcenter@gmailcom
தெய்வச் சேக்கிழார் விழா
முப்பத்திரண்டாம் ஆண்டு
பேரன்பில் நிறைந்த பெரியீர்,
வணக்கம். அமைதி, ஆனந்தம், உயர்ந்த குறிக்கோள் இவற்றோடு உலக மாந்தர் அனைவரும் குறிப்பாகத் தமிழர்கள், நல்லன எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ, உதவும் இலக்கியங்களுள் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் முதன்மையானது.
நம் மக்களைப் பிணித்துள்ள சாதி, சமயப் பிணக்கு, சுயநலம், நம்பிக்கையின்மை, பிறர்நலம் பேணாமை இவைகளை முற்றிலுமாகக் களைந்து நாட்டின் ஒருமைப்பாடு, உலக சகோதரத்துவம் காட்ட வல்லது பெரியபுராணம்.
இத்தகைய மாபெரும் இலக்கியச் செல்வத்தை நமக்கு அளித்த சேக்கிழார் பெருமானுக்கு, சென்னைச் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் கவின்மிகு விழா எடுத்து வருகிறது. இவ்வாண்டு இவண் அமையப் பெற்றுள்ள நிகழ்ச்சி நிரல் வண்ணம் தெய்வச் சேக்கிழார் விழா, சென்னை, திருவான்மியூர், ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.
தாங்கள் சுற்றமும், நட்பும் சூழ வந்திருந்து செவிக்கும் சிந்தைக்கும் இன்பம் கொள்க என அன்புடன் அழைக்கிறோம்.
நீதியரசர் எஸ்.ஜெகதீசன் தலைவர் சேக்கிழார் ஆராய்ச்சி மையம்.
06:00-07:30
விருதளிப்பு விழா
இறைவணக்கம் வரவேற்புரை
பண்ணிசைப் பேரறிஞர் திரு பா.சற்குருநாத ஓதுவார்
நீதியரசர் திரு எஸ். ஜெகதீசன் தலைவர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம்
விழாத் தலைமை
: திருமதி. A.ஜெயலட்சுமி, IPS போக்குவரத்து துணை ஆணையர், ஆவடி காவல் ஆணையரகம்.
மாணவர்களுக்கான பரிசு வழங்கி மகிழ்வுரை
முனைவர் ஔவை ந.அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு
Add a Comment