கலையுலக மார்கண்டேயர் நடிப்புச்செம்மல் ஓவியர்
திரு சிவகுமார் அவர்களின்
30 ஆண்டு ஆவணக்
குறிப்பிலிருந்து(12.9.1993)
எந்தையார்
பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் கலந்து கொண்ட தினமணி நாளிதழின்
வைர விழாக் கூட்டத்தைப் பதிவு செய்ததை (23.4.24) புலன வழியாக எனக்கு அனுப்பி மகிழ்ந்த குறிப்புக் கண்டதும் நெகிழ்ந்தேன்…
‘தினமணி’ நாளிதழின் வைரவிழா ஆண்டின் துவக்கவிழா –
மதுரை
மதுரை ராஜா முத்தையா செட்டியார் விழாவில்
குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்க,
ஔவை நடராஜன்,
இந்திய வங்கி M. கோபாலகிருஷ்ணன், ஜெயகாந்தன், சிவசங்கரி, வைரமுத்து ஆகியோருடன் நானும் தினமணியின் சாதனையை பாராட்டி பேசினேன்.
நிர்வாக ஆசிரியர் விவேக் கோயங்கா, பொறுப்பாசிரியர் பிரபு சாவ்லா துணையுடன் சீனியர் எடிட்டர் சுதாங்கன் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினார்.
சாலமன் பாப்பையா தலைமையில், ‘தினமணி’ அரசியல் விழிப்புணர்வு – பட்டிமன்ற விவாதம் சுவையாக மாலைநேரத்தில் நடைபெற்றது.
இன்று திருமணம் செய்து கொண்ட இளம் ஓவியர் சௌந்தராஜன் மனைவியுடன் வந்து ஆசி பெற்றுச் சென்றார்.
ரமேஷ்பாபு என்ற ரசிகரும் மனைவியுடன் வந்து வாழ்த்துப் பெற்றனர்.
வைரமுத்துவின் தலைமையில் மதுரையில் இலக்கிய மன்றங்கள் நடத்தும் இளைஞர்கள் பலரையும் சந்தித்தேன்.
Add a Comment