எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழால் முடியும்
வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி
தொடக்கவிழா அழைப்பிதழ்
திருவள்ளுவராண்டு 2055, ஆடி 14, நாள்: 30.07.2024 (செவ்வாய்) நேரம்: முற்பகல் 10.00 மணி,
இடம்: பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை
வரவேற்புரை :
முனைவர் ஒளவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
முன்னிலை
திரு. கோபிநாத் ஸ்டாலின்
இயக்குநர் (பொ) உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
தொடக்கவுரை :
திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
விழாப்பேருரை :
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
நன்றியுரை
திருமதி க. பவானி
இயக்குநர் (பொ) செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம்
செய்தி வெளியீடு எண்: 1069
நாள் : 29.07.2024
தமிழ் வளர்ச்சித் துறை
செய்தி வெளியீடு
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் “தமிழால் முடியும்” என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 30.07.2024 அன்று முற்பகல் 10.00 மணிக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்ற உள்ளார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொ) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் முன்னிலை உரையாற்ற உள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் அவர்கள் வரவேற்புரை ஆற்ற உள்ளார்.
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் (பொ) திருமதி க. பவானி அவர்கள் நன்றியுரை வழங்க உள்ளார்.
“தமிழால் முடியும்” என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சியில் இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ், இளங்கலை தமிழிலக்கியம், முதுகலைத் தமிழிலக்கியம், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பினை தமிழ் வழியில் பயிலும் மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலிருந்தும் 200 மாணவ, மாணவியர் பயிற்சி பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சி 30.07.2024 அன்று தொடங்கி 01.08.2024 முடிய நடைபெற உள்ளது.
இம் மூன்று நாள் பயிற்சியில் தமிழில் மருத்துவம் என்ற தலைப்பில் மருத்துவர் வீ.சொக்கலிங்கம் அவர்களும்,
வானொலி / பண்பலை தொகுப்புக்கலை என்ற தலைப்பில் திருமதி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களும்,
தமிழால் வேலைவாய்ப்பு என்ற தலைப்பில் முனைவர் இதயகீதம் இராமானுஜம் அவர்களும்,
இதழியலில் தமிழ் என்ற தலைப்பில் திரு மை. பா. நாராயணன் அவர்களும்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியின் தேவையும் வேலை வாய்ப்புகளும் என்ற தலைப்பில் முனைவர் சு.சதாசிவம் அவர்களும்,
வெள்ளித்திரையில் தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களும்,
பழந்தமிழரின் வரலாறு என்ற தலைப்பில் பேராசிரியர் சி.ஆர். மஞ்சுளா அவர்களும்.
அயலகத் தமிழ் கல்வியும் புலம்பெயர்
இலக்கியமும் என்ற தலைப்பில் முனைவர் ஜான்சி ராணி அவர்களும்,
இயந்திர
மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் முனைவர் ஒளிவண்ணன் அவர்களும்,
ஆளுமைத்திறன் என்ற தலைப்பில் திரு. இராம்குமார் சிங்காரம் அவர்களும்,
கல்வெட்டியல் என்ற தலைப்பில் புலவர் வையாபுரி சண்முகநாதன் அவர்களும்,
நாட்டுப்புறக் கலைகள் என்ற தலைப்பில் திருமதி பாரதி திருமகன் அவர்களும்,
தற்கால இலக்கியம் என்ற தலைப்பில் கவிஞர் பிருந்தாசாரதி அவர்களும்.
தொல்காப்பியம் என்ற தலைப்பில் மருத்துவர் ச.திருநாவுக்கரசு அவர்களும்,
தமிழரின் தொன்மை என்ற தலைப்பில் திருமதி ர.ரேகாமணி அவர்களும்,
அயலகத்தில் தமிழ்ச் சமூகத்தின் பரவல் என்ற தலைப்பில் முனைவர் குறிஞ்சி வேந்தன் அவர்களும்,
தன்னம்பிக்கை என்ற தலைப்பில் திருமதி திவ்யா நாதன் அவர்களும்,
தொலைக்காட்சியில் தமிழ் என்ற தலைப்பில் திருமதி ஹேமா ராகேஷ் அவர்களும்,
தமிழ்ச் சமூகத்தின் தனிச்சிறப்பு என்ற தலைப்பில் முனைவர் மு. முத்துவேலு அவர்களும்,
தமிழின் மாண்பு என்ற தலைப்பில் பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்களும்,
தமிழ் ஆய்வியல் என்ற தலைப்பில் பேராசிரியர் பெ. அர்த்தநாரீசுவரன் அவர்களும்,
வெல்லும் தமிழ் என்ற தலைப்பில் முனைவர் டி. எஸ். பிரேமா அவர்களும்,
மொழிபெயர்ப்புத் துறையில் உள்ள பணி வாய்ப்புகள் என்ற தலைப்பில் முனைவர் சங்கர சரவணன் அவர்களும்,
நாடகக் கலை என்ற தலைப்பில் நடிகர் சண்முகராஜன் அவர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் இப்பயிற்சி நடத்தப்பட உள்ளது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment